Link copied!
Sign in / Sign up
0
Shares

ஷிகா வைரஸ் கருவில் இருக்கும் குழந்தையை தாக்குமா?

கொசுவினால் பரவக்கூடியது தான் இந்த ஷிகா வைரஸ் ஆகும். இந்த ஷிகா வைரஸ் கொசு கடித்தால் பாதிப்பு பல மடங்கு என அனைவரும் அறிந்த வேளையில், இதனால் கர்ப்பிணிகளுக்கு எத்தகைய பாதிப்பை இது ஏற்படுத்துகிறது? கருவில் இருக்கும் குழந்தைக்கு ஷிகா வைரஸ் பரவுமா என்பதை தான் நாம் இப்போது பார்க்க போகிறோம்.

ஷிகா வைரஸ்:

இந்த ஷிகா வைரஸை பரப்புவது எய்டஸ் கொசுக்கள் தான். இந்த ஷிகா வைரஸ் ஒருவர் உடம்பில் பரவ, இதனால் டெங்கு மற்றும் மஞ்சள் காமாலை ஒருவருக்கு வரக்கூடும். இந்த வைரஸ் முதன் முதலில் தோன்றியது உகாண்டாவில் உள்ள ஷிகா காட்டில் தான். அதனால் தான் இந்த வைரசுக்கு ஷிகா என பெயர் வைத்தனர்.

ஏன் இந்த வைரஸ் ஆபத்தானது?

ஒரு சாதாரண மனிதனை பாதிப்பதை விட, கர்ப்பிணி பெண்களை பல மடங்கு பாதிக்கிறது இந்த ஷிகா வைரஸ். இந்த ஷிகா வைரஸின் தாக்கத்தின் மிகப்பெரிய விளைவு என்ன தெரியுமா? கருவில் இருக்கும் குழந்தைக்கு இந்த வைரஸ் பரவ... இதனால் குழந்தையின் தலை சிறிதாய் இருக்கவும் செய்கிறது. இதை தான் மைக்ரோசிபாலி என அழைக்கின்றனர்.

எப்படி இந்த ஷிகா பரவுகிறது?

எய்டஸ் கொசுவானது ஒருவரை கடித்து அவர் இரத்தத்தை குடிக்க, இதனால் அவருக்கு ஷிகா வைரஸ் பரவுகிறது. மீண்டும் இன்னொருவரை சென்று கடிக்க, இதனால் இந்த நோய் வேகமாக பரவுகிறது.

ஷிகா வைரஸ் உடலுறவின் மூலமாகவும் ஒருவருடைய பிறப்புறுப்பு வழியாக இன்னொருவருக்கு செல்கிறது. 

மேலும் ஷிகா வைரஸ், கர்ப்பிணி பெண் மூலமாக கருவில் இருக்கும் குழந்தைக்கு பரவுகிறது என்னும் போதும் இதற்கான நிரூபணம் இன்னும் கிடைக்கப்படவில்லை. ஆனால், கருவில் இருக்கும் குழந்தைக்கு ஷிகா வைரஸ் பரவுமெனில் குழந்தையின் மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்டு சிறிய தலையுடன் குழந்தை பிறக்க அதிக வாய்ப்பிருக்கிறது.

ஷிகா வைரஸின் அறிகுறிகள்:

இந்த ஷிகா வைரஸின் தாக்கத்தால் குறைவான காய்ச்சல், தலைவலி, சொறி சிரங்கு, தசை மற்றும் மூட்டு வலி முதலியவை ஒருவருக்கு ஏற்படுகிறது. 

ஷிகா வைரஸிடமிருந்து நம்மை எப்படி காப்பாற்றிக்கொள்வது?

1. கர்ப்பிணி பெண்கள் உடலுறவு கொள்ளும் போது கண்டிப்பாக ஆணுறை பயன்படுத்த வேண்டும். இதனால் கருவில் வளரும் குழந்தைக்கு ஷிகா வைரஸ் பரவுவது தவிர்க்கப்படும். 

2.  உங்கள் மனம் கவர்ந்த ஒருவர் வெளியூர் சென்று திரும்பினால்... அவரிடம் மிகவும் ஜாக்கிரதையாக நீங்கள் இருத்தல் வேண்டும். காரணம், அவருக்கு ஷிகா வைரஸ் தாக்கியிருப்பதை அவரே அறியாமல் கூட இருந்திடலாம் அல்லவா?

3. உங்கள் முழு உடலையும் கவரும்படி ஆடை அணிதல் நலம். இதனால் கொசு கடிப்பது தவிர்க்கப்படும்.

4. உங்கள் ஆடைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியது முக்கியம். துவைக்காத ஆடையை தொங்கவிட்டிருக்கும் போது அதை தட்டினால் கொசுக்கள் வெளியாவதை நீங்கள் பார்த்திருக்கக்கூடும்.

ஷிகா எனும் கொடிய வைரஸ் ஏற்படுத்தும் விளைவால் உங்கள் குழந்தை பெரிதும் பாதிக்கப்படலாம். அதனால், கர்ப்பிணிகள் எப்போதும்... எல்லா விஷயத்திலும் கவனத்துடன் இருத்தல் வேண்டும்.

 நண்பர்களே!

உங்கள் வீட்டு தரை அழுக்காய் இருக்கிறதா? கவலை வேண்டாம்... இயற்கையாக சுத்தப்படுத்த இதோ நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம் டைனி ஸ்டெப் ப்ளோர் கிளீனரை. இந்த கிளீனரில் எந்த வித வேதி பொருளும் இல்லை. நச்சு தன்மையும் இல்லை. குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பானது. ஒருமுறை பயன்படுத்தினால், மீண்டும் வேறு எதையும் வாங்க உங்கள் மனம் முன்வராது. இப்போதே இதை நீங்கள் பெற முந்துங்கள். ஆர்டர் செய்ய இந்த பொத்தானை அழுத்தவும். கிளிக் செய்க...

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon