Link copied!
Sign in / Sign up
4
Shares

சைவ மீன் குழம்பா! அது எப்படி செய்வது?

மீன் குழம்பு சாப்பிட எல்லோருக்குமே ஆசை இருக்கும். அதுவும் வகை வகையாக மீன் இருக்க, அந்த மீன்கள் தரும் சுவை என்பது எல்லையற்ற மகிழ்ச்சியை நம் மனதில் தர மறுப்பதுமில்லை. அப்படி இருக்க, சைவ பிரியர்களுக்கு கூட அசைவம் சாப்பிட ஆசை இருந்தாலும் உடல்நல சிக்கல்களை கருத்தில் கொண்டு ஆசையை ஓரமாக மூட்டை கட்டி வைத்துவிடுகின்றனர். ஆனால், ஒருவேளை மீன் குழம்பு அளவுக்கு சுவைத்தரும் ஒரு சைவ உணவை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சாப்பிட முடியுமெனில் அதை நீங்கள் ஏன் முயலக்கூடாது. அப்படிப்பட்ட ஒரு குழம்பு எப்படி செய்வது என்பதை தான் நாம் இப்போது பார்க்க போகிறோம்.  

தேவையான பொருட்கள்:

வாழைப்பூ-1 கப் 

பொடியாக வெட்டிய சின்ன வெங்காயம் -9 

நறுக்கிய பூண்டு-7 பல்

பச்சை மிளகாய் -2 

கறிவேப்பிலை-1 கொத்து 

பொடியாக நறுக்கிய தக்காளி-1 

உப்பு -1 தேக்கரண்டி 

மிளகாய்த்தூள் அல்லது சாம்பார் மசாலாத்தூள் -2 தேக்கரண்டி 

கரைத்த புளி - 1/4 கப்

மஞ்சள் தூள் -1/4 தேக்கரண்டி 

எண்ணெய் -2 மேஜைக்கரண்டி 

சோம்பு-1/4 தேக்கரண்டி 

வெந்தயம், சீரகம் - தலா 1/4 தேக்கரண்டி 

வெங்காயம்-1 

தக்காளி-1 

சோம்பு-1 தேக்கரண்டி 

சீரகம்-1/2 தேக்கரண்டி 

செய்முறை:

1. கடாயில் எண்ணெய் ஊற்றி, அது சூடானதும் சோம்பு, வெந்தயம் மற்றும் சீரகம் போன்றவற்றை தலா 1/4 தேக்கரண்டி சேர்த்து தாளிக்கவும் 

2. இதில் வெட்டிய வெங்காயம், பச்சை மிளகாய், வாழைப்பூ, கறிவேப்பிலை சேர்த்து 1 நிமிடம் வரை வதக்கவும். 

3. ஒரு நிமிடத்திற்கு பின், தக்காளி, உப்பு சேர்த்து வதக்கி, மிளகாய்ப்பொடி, மஞ்சள்பொடி, புளித்தண்ணீர்,மற்றும் நீர் 2 கப் சேர்த்து 3 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும். 

4. இதில் வெங்காயம், தக்காளி தலா 1 எடுத்து அதில் சோம்பு 1 தேக்கரண்டி, சீரகம் 1/2 தேக்கரண்டி சேர்த்து அரைத்து ஊற்றவும். 

5. பின் சிறிது நேரம் அடுப்பில் வைத்திருந்து இறக்கவும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon