Link copied!
Sign in / Sign up
11
Shares

ருசியான முட்டை குழம்பு செய்வது எப்படி?

புரதச்சத்து நிறைந்த உணவுகளில் முதலிடத்தை பிடிப்பது முட்டை என்பதை நாம் சிறுவயதிலே படித்ததுண்டு. இந்த முட்டையின் மஞ்சள் கருவை விட வெள்ளைக்கரு மிகவும் சத்தானது என கூறி, அம்மாக்கள் பிள்ளைகள் வாயில் வைத்து திணிக்கவும் தவறுவதில்லை. அத்துடன் நம் அன்றாட வாழ்வில் முட்டையை தினமும் சேர்த்துக்கொள்ளவும் தொடங்கிவிட்டோம். ஆனாலும், இந்த முட்டைகளை அப்படியே வேகவைத்து குழந்தைகளுக்கு கொடுப்பதில் நீங்கள் கவனமாக இருத்தல் வேண்டும். காரணம், முட்டையை அரைநிலையில் வேகவைத்து நாம் உண்ண, இதனால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும். முட்டையை எப்போதும் நன்றாக வேகவைத்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். அப்போதுதான் செரிமானம் ஆகும். அதுவே, முட்டையில் ஒரு குழம்பு செய்து சாப்பிட்டால் எப்படி இருக்கும்? வாருங்கள் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்:

வேகவைத்த முட்டை - 4 

பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2 

பொடியாக நறுக்கிய தக்காளி - 2 

மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி

தனியாத்தூள் - 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி 

மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி 

கரம் மசாலா - அரை தேக்கரண்டி

ஏலக்காய் -1 

கிராம்பு - 2 

பட்டை - ஒரு துண்டு 

சோம்பு - சிறிது 

இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி 

அரைத்த தேங்காய் - அரை கப் 

அரைத்த கொத்தமல்லி தழை -  அரை கப் 

அரைத்த கசகசா - ஒரு தேக்கரண்டி

செய்முறை நேரம் - 20 நிமிடங்கள்

எத்தனை பேர் உண்ணலாம் - 4

செய்முறை:

1. ஒரு வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அது சூடானதும், ஏலக்காய், கிராம்பு, பட்டை, சோம்பு போட்டு நன்கு தாளித்துக் கொள்ளவும். 

2. பின் இதில், வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது இவற்றை சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும். 

3. மேலும் இதில், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலா போன்ற அனைத்தையும் சேர்த்து மீண்டும் வதக்கவும். 

4. இந்தக் கலவையில், அரைத்து வைத்த தேங்காய், மல்லி தழைகள், கசகசா போன்றவற்றை சேர்க்கவும். 

5. இந்தக் கலவைக்கு தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும். 

6. இப்பொழுது இதில் முட்டை சேர்த்து, சிறிது நேரம் கழித்து, தேவையான அளவு மிளகு தூள் சேர்த்து நன்றாக கலக்கி, கொத்தமல்லி இழைகளை தூவினால் சுவையான முட்டைக்குழம்பு தயார்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon