Link copied!
Sign in / Sign up
1
Shares

சுவையான KFC சிக்கன் வீட்டிலேயே செய்வது எப்படி?

சிக்கன் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது KFC சிக்கன் தான். ஆம், பட்டிதொட்டி முதல் பல்லு போன பாட்டி வரை அனைவரும் நன்கறிந்த ஒரு சிக்கன் ஸ்பெஷல் செல்லர் தான் இந்த KFC ஆகும். அதுவும் இதன் டேஸ்டை மிஞ்ச யார் என்னும் அளவுக்கு மிகவும் புகழ்பெற்ற ஒன்று தான் KFC சிக்கன். இதை நாம் வீட்டிலே செய்து சாப்பிட வாய்ப்பு கிடைத்தால் விட்டு வைப்போமா என்ன? கண்டிப்பாக மாட்டோம் அல்லவா? எப்படி வீட்டிலே செய்வது? வாங்க பார்க்கலாம். 

எப்படி செய்வது?
தேவையான பொருட்கள்:

உரித்த முழு கோழி (எலும்புகளுடன் துண்டுகளாக்கப்பட்டது) - 1 கிலோ

வெங்காயம் - 1 (பெரியது)

தக்காளி - 1 (பெரியது)

இஞ்சி - மூன்று அங்குல துண்டு

பூண்டு - 6 பல்

பேக்கிங்க் பவுடர் - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

டிப் செய்து பொரிக்க:

மைதா – ஒரு கப்

சோள மாவு – கால் கப்

மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி

உப்பு – அரை தேக்கரண்டி

 

எண்ணெய் + பட்டர் – பொரிக்க தேவையான அளவு

செய்முறை:

1. வெங்காயம், தக்காளியை துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.

2. இஞ்சியின் தோலை நீக்கிவிட்டு  துண்டுகளாக அதையும் நறுக்கி கொள்ளுங்கள்.

3. அதுபோல் சிக்கனை சுத்தப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள்.

4. இஞ்சி, பூண்டு, வெங்காயம், தக்காளி ஆகியவற்றை சேர்த்து அரைத்து கொள்ளுங்கள். 

5. சுத்தம் செய்த சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அரைத்த விழுது (இஞ்சி, பூண்டு, வெங்காயம், தக்காளி அரைத்தது) மற்றும் பேக்கிங்க் பவுடர் சேர்த்து சிக்கன் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி வைத்து மூன்று மணி நேரம் அதை எடுக்காதீர்கள். 

6. சிக்கனும் விழுதும் நன்றாக ஊறிய பின்னர் அந்த தண்ணீரை வடிக்கட்டி கொள்ள வேண்டும்.

7. டிப் செய்ய தேவையான பொருட்களை (மேற்சொன்ன பொருட்கள்) நன்றாக கரைத்து வைத்துக்கொள்ளுங்கள்.

8. இப்போது கரைத்து வைத்த கலவை கொண்டு ஊறவைத்து வடிக்கட்டிய சிக்கனை எல்லா இடத்திலும் படும்படி (பஜ்ஜி போடுவது போல்) முக்கி எடுக்க வேண்டும்.

9. இப்போது வாணலியில் எண்ணெய் மற்றும் வெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கனை போட்டு பொரித்து எடுக்க வேண்டியது தான்.

10. பொரிக்கும் போது சூட்டை மிதமாக வைத்து மூடிய பின்னர் அதிக சூடுக்கொண்டு பொரிக்க வேண்டும்.

11. அவ்வளவு தான் சுவையான KFC சிக்கன் ரெடி.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon