Link copied!
Sign in / Sign up
0
Shares

யோகப்பயிற்சி உங்கள் மூளைக்கு என்ன செய்யும்?

நம்மில் பெரும்பாலானோர் யோகாவை பற்றி அறிந்திருக்கலாம்; பலரோ யோகா செய்து கொண்டு இருக்கலாம். ஆனால், அனைவரும் யோகாவினால் ஏற்படும் நன்மைகளை அறிந்திருப்பார்களா என்றால் சந்தேகமே! அனைவரும் யோகா செய்தால் ஆரோக்கியமாக, நோயில்லாமல் வாழலாம் என்று தான் எண்ணிக்கொண்டிருக்கிறோம். அது உண்மையே! ஆனாலும் அதைவிட மகத்துவமான விஷயங்களும் யோகா செய்வதால் ஏற்படுகின்றன. அவை என்னவென்று இந்த பதிப்பில் படித்தறியலாம்..

1. மகிழ்ச்சி..

யோகப்பயிற்சிகள் புரிவது, உங்கள் உடலில் டோபமைன், செரோடினின் போன்ற ஹார்மோன்களை சுரக்க செய்கிறது. இந்த ஹார்மோன்கள் நம்முடைய மகிழ்ச்சியான மன நிலைக்கு காரணமாகின்றன. ஆகையால், யோகா செய்வது மனதின் மகிழ்ச்சியான நிலையை உண்டு செய்கிறது. எப்பொழுதும் புன்னகை ததும்பும் முகத்தையும், சோகத்தின் சுவடு இல்லா வாழ்க்கையையும் தருகிறது.

2. கார்டிசோல்..

மூளையின் அட்ரீனல் சுரப்பியிலிருந்து சுரக்கப்படும் கார்டிஸோலின் அளவைக் குறைக்க மூச்சு மற்றும் யோகப் பயிற்சிகள் உதவுகின்றன. மேலும் மூளையின் ஒரு பகுதியான 'அமிக்தால', பய உணர்ச்சிக்கு காரணமான இதனை வெல்ல யோகப்பயிற்சிகள் உதவுகின்றன. யோகப்பயிற்சிகள் உங்கள் பய உணர்வை, வென்று வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளை தைரியத்துடன் போராட, ஹார்மோன்களை தூண்டி சக்தி அளிக்கின்றன.

3. நீங்கள் யார்..?

உங்களுக்கே நீங்கள் யார்? உங்களால் என்னவெல்லாம் செய்ய இயலும் என்பதை உங்களுக்கு எடுத்துக் காட்டுகிறது. உங்கள் நரம்பு மண்டலத்தின் செயல்களை மேம்படுத்தி, உங்களுக்குள் ஒளிந்திருக்கும் ஆற்றலை உங்களுக்கு புரிய வைக்கிறது, யோகா. உங்களின் நினைவாற்றல், பிரச்சனைகளை தீர்க்கும் திறன், மேம்பட்ட சிந்தனை என்று மேலும் பல விஷயங்களை உங்களில் மேம்படுத்துகிறது. இதனால், உங்களால் சந்தோசமாகவும் வெற்றிகரமாகவும் வாழ முடிகிறது.

4. வாழ்வு..

உங்கள் நரம்பு மண்டலம் மூலமாக, உடலில் நடைபெறும் அனைத்து செயல்களையும் ஒருங்கிணைத்து, உங்கள் வாழ்வை புதிதாக, வெற்றிகரமானதாக, மனநிறைவு உள்ளதாக மாற்றுகிறது. மேலும் அதிகம் கோபப்படுபவர்களில், பதற்றக் காரர்களில் வேலை செய்யாது இருக்கும் ‘‘Sympathetic Nervous System’(fight or flight’ response) மற்றும் ‘Parasympathetic Nervous System’ ( Your basic chill-pill) நரம்பு மண்டலங்களை யோகப்பயிற்சிகள் மூலமாக தூண்டி வேலை செய்ய வைக்கலாம். இவை வாழ்வை பயம், குழப்பம், போராட்டம் இல்லாது மனநிறைவுடன் நடத்த பேருதவி செய்கின்றன.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon