Link copied!
Sign in / Sign up
2
Shares

வார நாட்களை எளிதாக்க ஞாயிற்று கிழமை செய்ய வேண்டிய 7 வேலைகள்

உங்கள் வாரஇறுதி நாட்கள் பிஸியாக உள்ளது. வார நாட்கள் அதைவிட பிஸியாக இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமையே ஒழுங்கமைக்கப்பட்ட வேலைகளை செய்து வருவதன் மூலம் உங்கள் வார நாட்களை எளிதாக்கும் பெற்றோருக்கான வழிகள் இதுவாகும்.

1. துணிகளை திட்டமிடுதல்

உங்கள் மற்றும் உங்கள் குழந்தைகளின் ஆடைகளை ஒவ்வொரு நாள் காலையிலும் தேர்வு செய்வது கடினமான வேலையாகும். அதற்கு பதிலாக, ஞாயிற்றுக்கிழமையே முழு வாரத்திற்கு தேவையான துணிகளை தயாராக வைக்கவும். அனைத்து துணிகளையும் அயர்ன் செய்து அடுக்கி வைப்பது திங்கள் கிழமை குழப்பங்களிலிருந்து உங்களை பாதுகாக்கும்.

2. சுத்தப்படுத்துதல்

ஆம், நாங்கள் ஒத்துக்கொள்கிறோம் ஞாயிற்றுக்கிழமை அன்று ஓய்வு எடுக்கவும், மகிழ்ச்சியாக இருக்கவும் விரும்புவீர்கள், ஆனால் வாரநாட்களில் சுத்தம் செய்வது என்பது மிகவும் கடினமானது. 30 நிமிடங்களை ஒதுக்கி குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வேலையை கொடுத்து இடைவிடாமல் செய்ய சொல்லுங்கள். 30 நிமிடங்களில் முடிந்திருக்கும் வேலைகளை பார்த்து நீங்கள் நிச்சயம் ஆச்சரியப்படுவீர்கள்.

3. காலை மற்றும் மதிய உணவு

உணவு என்பது நீங்கள் எளிதில் திட்டமிட்டு முடிக்கக்கூடிய ஒரு வேலையாகும், இணையத்தில் ஒரு வாரத்திற்கும் மேலாக கெட்டுபோகாத உணவுகுறிப்புகள் நிறைய உள்ளது. உங்கள் குழந்தையின் காலை உணவுக்கு சாண்ட்விச்கள் மற்றும் தின்பண்டங்கள் முன்னதாகவே தயாரித்து, பள்ளிக்கூடத்திற்குப் போகும் போது அவர்களுடைய பையில் வைக்கவும்.

4. மளிகை பொருட்கள் வாங்குதல்

நீங்கள் உணவை தயாரிக்க தேவையான பொருட்கள் இல்லையென நினைத்தால், மொத்தமாக தேவையான எல்லா மளிகை பொருட்களையும் முன்கூட்டியே வாங்குங்கள்.

5. சிறிய சுத்தப்படுத்தும் வேலைகள்

இது உங்கள் குழந்தையின் பென்சில் பாக்ஸ் அல்லது உங்கள் கைப்பையை சுத்தம் செய்வது போன்ற சிறிய வேலையாகும். இதுபோன்ற சிறிய வேலைகளை முன்கூட்டியே செய்வது சிறப்பான வார தொடக்கத்திற்கு வழிவகுக்கும்.

6. டின்னர் திட்டங்கள்

இரவு உணவு என்பது அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் வேலையாகும், ஆனால் நீங்கள் முன்கூட்டியே திட்டமிடுகிறீர்கள் என்றால், நேரத்தை மிச்சப்படுத்துவதோடு, மீதமுள்ள நேரத்தை மகிழ்ச்சியாக செலவழிக்கலாம்.

7. சிறிய மகிழ்ச்சிகள்

புதிய போர்வை, புதிய திரைசீலைகள் மாற்றி புதிய வாரத்தை புத்துணர்ச்சியுடன் தொடங்குங்கள். நன்றாக தூங்குங்கள் உங்கள் குழந்தைகளையும் தூங்க அனுமதியுங்கள். நல்ல நீண்ட குளியல் எடுத்துக்கொண்டு உங்கள் குழந்தைக்கு இதமான குளியலை கொடுத்தால் புதிய வாரம் மகிழ்ச்சியாகவும், புத்துணர்ச்சியாகவும் தொடங்கும்.

நீங்கள் வேலைக்கு செல்லும் பெற்றோராக இருந்தால் இவை அனைத்தையும் செய்வது சிறிது கடினம்தான். இருப்பினும், பெற்றோருக்குரிய மகிழ்ச்சி எல்லாவற்றிற்கும் மேலானது, இவற்றை செய்யும்போது நீங்கள் உங்கள் குழந்தையுடன் மேலும் பிணைக்கப்படுவீர்கள். சிறிது நேரம் ஒதுக்கி குழந்தைகளுடன் விளையாட மறந்துவிடாதீர்கள். 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon