Link copied!
Sign in / Sign up
42
Shares

விரைவில் கருத்தரிக்க காணப்படும் வழிகள்...

பெண்கள் கருத்தரிக்க காத்திருக்கும் போதும் எந்த நேரம் கருத்தரிக்க சிறந்த நேரம் என தெரியாமல் குழப்பத்துடன் இருக்கின்றனர். கவலை வேண்டாம், இந்த குழப்பம் உங்களுக்கு மட்டுமே இல்லை. கோடிக்கணக்கான தாய்மார்கள் எப்போது கரு உருவாக சரியான நேரம் என்பது அறியாது இருக்கின்றனர் என்பதே உண்மை. இதனாலே ஒரு சிலர் கர்ப்பமாக இருக்கும்போது மிகுந்த மன வேதனையுடன் காணப்படுகின்றனர். ஆம், "நான் கர்ப்பமாக இருக்கிறேன். என்னுடைய குழந்தை நல்லபடியாக பிறக்கும் அல்லவா?" என்ற குழப்பம் எல்லா தாய்மார்களின் மனதில் எழும் முதல் குழப்பமாகும். அடுத்தது என்னவென்றால், பிறக்க போகும் குழந்தை ஆணா? அல்லது பெண்ணா? என்றதோர் குழப்பம். 

இதற்கு காரணம் பெண் இனப்பெருக்க உறுப்பு என்பது ஒரு தனி உலகம் போல. அதை புரிந்துக்கொள்வது அவ்வளவு எளிதல்ல. நன்கு படித்தறிந்த ஒருவரால் கூட கருமுட்டை உருவாகுவது முதல் குழந்தை பிறப்பு வரை ஏற்படக்கூடிய அதிசயத்தை அவ்வளவு துல்லியமாக சொல்லிவிட இயலாது. ஒரு சிலர் இணையத்தளங்களை நாடி தனக்கு தேவையான தகவலை ஓரளவு பெற்றுக்கொள்கின்றனர்.

கருத்தரித்தல் கடினமாவது ஏன்?

உங்களுடைய வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்களால் கருத்தரிப்பது என்பது கடினமாக ஒரு சில சமயத்தில் பிறக்கும் குழந்தையையும் அது பாதிக்கிறது. ஆம், மன உளைச்சல், உடல் அலைச்சல் போன்றவை ஒரு பெண்ணின் கர்ப்பத்தில் சிக்கலை உண்டாக்குகிறது. சில சமயத்தில் தாமதமான திருமணம், சரியான உணவு முறை அல்லாமல் இருப்பது, எந்நேரமும் ஏதாவது எதிர்மறை எண்ணங்களுடன் இருப்பதுக்கூட கர்ப்ப நிலையில் கடினத்தை புகுத்துகிறது.

மற்ற காரணங்கள் என்ன?
ஆண் காரணமாக அமைவது:

1. விறைப்பு செயலிழப்பு

2. 30 வயது தாண்டி காணப்படுவதால்

3. மன அழுத்தம்

4. பாலியல் பரவுதல் நோய்

5. விந்தணுக்கள் தரக்குறைபாடு

பெண்கள் காரணமாக அமைவது:

1. முறையற்ற நேர மாதவிடாய் 

2. பல்பையுரு கருப்பை நோய் (PCOD)

3. மாதவிடாய் குறைபாடு

4. ஹார்மோன் சமநிலை அற்று இருப்பது

5. 30 வயது தாண்டிய பெண்கள்

6. பலோபியன் குழாய் அடைப்பு

7. முன்பு உண்டான கருச்சிதைவு

இப்போது எளிதில் கருத்தரிப்பது எப்படி என நாம் பார்க்கலாம்...

1. கருப்பை முட்டை வெளியேற்ற நாள்:

ஆரோக்கியமான பெண்ணுக்கு கருப்பையிலிருந்து முட்டை வெளியேறிய நாள் முதல் எளிதில் கருத்தரிக்க வாய்ப்பிருக்கிறது. இவர்களுக்கு மாதவிடாய் என்பது 28 நாட்களில் வர, அண்டவிடுப்பு என்பது இந்த சுழற்சியின் 14ஆவது நாளில் தொடங்கிடலாம். கருப்பை வெளியிடும் முட்டை பலோபியன் குழாய்க்கு செல்ல, கருத்தரித்தல் எளிதாக நடக்கிறது. கருப்பை சுவற்றில் முட்டை பொருத்தப்பட, குழந்தையும் வளர தொடங்குகிறது.

2. முட்டை வெளியேறும் முன் உடலுறவு:

நீங்கள் செக்ஸ் வைத்துக்கொள்ளும் போது ஆணின் விந்தணுக்கள் என்பது மூன்று நாட்கள் வரை உங்கள் உடலில் தங்கிவிடும். ஆனால், முட்டை வெளியேறிய 12 லிருந்து 24 மணி நேரத்திற்குள் சிதைந்துவிடும். அதனால், நீங்கள் உடலுறவு கொள்ளும் நாட்களில் கவனம் வேண்டும். இதனால் விந்தணுக்கள் உங்கள் உடலில் இருந்து வெளியாகும் புதிய முட்டையுடன் எளிதில் இணைகிறது.

3. உடலுறவு நிலை மற்றும் நேரம்:

ஒரு பெண் கருத்தரிக்க காரணமாக அமைவதில் முதன்மையானது உடலுறவு கொள்ளும் நிலையாகும். இதனை எண்ணற்ற பெண்கள் முயற்சி செய்ய நல்ல பலனை உடளவிலும், மனதளவிலும் தருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். உடலுறவுக்கு பிறகு கணவன் மார்களை உங்கள் பின் பக்கம் படுக்க சொல்லுங்கள். இதனால் உங்கள் பிறப்புறுப்பு சாய்வற்று பாதுகாக்கப்படும். உங்களுடைய கால்களை உயர்த்தி வைத்துக்கொள்ளுங்கள். இதனால் விந்தணுக்கள், கருமுட்டையுடன் இணைய வாய்ப்பாக அமைகிறது.

அதேபோல் உராய்வு நீக்கி பயன்படுத்துவதை தவிர்த்திடுங்கள். இல்லையேல் விந்தணுக்கள் நகர்வு என்பது குறைவுடன் காணப்பட, கருத்தரிக்க சிரமத்தையும் சில சமயத்தில் ஏற்படுத்திவிடும். புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்ற பழக்கங்கள் கருத்தரிப்பதில் மலட்டு தன்மையை உண்டாக்கக்கூடும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon