Link copied!
Sign in / Sign up
4
Shares

வாஷிங் மெஷினுக்குள் மாட்டிக்கொண்ட இரண்டரை வயது குழந்தை..!

சீனாவில், வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு இரண்டரை வயது குழந்தை பரிதாபமாக, வாஷிங் மெஷினில் மாட்டிக் கொண்டது. அதாவது ஒரே வயதை சேர்ந்த குழந்தைகள் ஒன்றாக இணைந்து கண்ணா மூச்சி ஆட்டம் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்பொழுது ஒளிந்து கொள்ள இடம் தேடிய குழந்தை, வாஷிங் மெஷினை பார்த்து அதில் ஒளிந்து கொண்டது. பின்னர் வெளியே வர எண்ணிய போது, அக்குழந்தையால் வெளிவர இயலவில்லை. 

குழந்தையின் நிலையை பார்த்த பெற்றோர், உதவிக்கு ஆட்களை அழைத்து, வாஷிங் மெஷினை வெட்டி, குழந்தையை வெளியே எடுத்து, குழந்தையை காப்பாற்றினர். குழந்தை மாட்டிக்கொண்ட அந்த நொடியில் குழந்தையும், அதன் பெற்றோரும் பெரிதும் பதறிப்போயினர். குழந்தையை காப்பாற்றி கொடுத்த பின்னரே, அவர்களுக்கு உயிர் வந்தது, அதாவது பயம் தெளிந்தது.

ஆகையால், பெற்றோர்களே! உங்கள் குழந்தைகள் எங்கு, எப்படி, யாருடன் விளையாடுகின்றனர் என்பதை கவனித்து, கண்காணியுங்கள். நீங்கள் குழந்தையை தனியே விட்டு விட்டு வேலைக்கு செல்பவராய் இருந்தாலும், குழந்தையை கவனித்துக் கொள்ள ஒரு நம்பிக்கையான ஆளை வைத்து விட்டு செல்லுங்கள். வாழ்க்கைக்கு பணம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு நம் உயிருக்கு உயிரான குழந்தைகளும் முக்கியம். அவர்களை பாதுகாத்து, அரவணைத்து அன்புடன் வளருங்கள்..! இது எங்களது சிறு வேண்டுகோள்..!

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon