Link copied!
Sign in / Sign up
0
Shares

உதட்டு சாயம் (லிப்ஸ்டிக்) நுரையீரல் பாதிப்பை ஏற்படுத்துமா?

அழகு என்னும் மோகம் ஆண், பெண் இருபாலருக்கும் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால், இன்றைய நவீன உலகில் இரசாயனம் கலந்த அழகுசாதனப் பொருள்களை அதிகமாகப் பயன்படுத்தும் பழக்கம் எங்கும் எதிலும் நிறைந்து காணப்படுகிறது. அவற்றின் ஆபத்துகள் பற்றி ஓரளவுக்குத் தெரிந்திருந்தாலும், அழகுப்படுத்திக்கொள்ளும் ஆர்வத்தில் இருந்து மீள விரும்புவதில்லை. அதில் ஒன்றுதான் பெண்களை பெரிதும் கவரும் உதட்டு சாயம்.இந்த உதட்டு சாயத்தில் கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும் விஷப் பொருள் இருப்பதை பல்வேறு ஆய்வுகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன.

சமீபத்தில், உதட்டு சாயத்தில் கலந்துள்ள இரசாயனங்கள், அதனைப் பயன்படுத்துபவர்களுக்கு ஏற்படும் உடல் பாதிப்புகள் பற்றி ஆய்வு செய்யப்பட்டது. அந்த ஆய்வில் 14 முதல் 19 வயதுக்குட்பட்ட 12 பெண்கள் இருந்தனர். அவர்கள் தொடர்ந்து பயன்படுத்தி வரும் உதட்டு சாயம், அதன் மேல் உபயோகிக்கும் திரவங்களின் பெயர்கள் பெறப்பட்டன. அவற்றை ஆய்வகத்தில் சோதனை செய்துபார்த்ததில், காட்மியம், குரோமியம், அலுமினியம் கலந்திருப்பது தெரிந்தது. மெக்னீசியம் உள்பட உடலுக்குத் தீங்கு செய்யும் டாக்சின்கள் உருவாவதும் கண்டறியப்பட்டது.

இவற்றை பெண்கள் ஒவ்வொருவரும் ஒரு நாளில் 24 மில்லிகிராம் முதல் 84 மில்லிகிராம் வரை பயன்படுத்துகின்றனர். இவை எச்சில் வழியாக வயிற்றுக்குள் செல்கின்றன. வண்ணம், மணம், ஒட்டும் தன்மைக்காகவும் பல்வேறு இரசாயனங்கள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகம் பயன்படுத்தி இருப்பதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் கலந்திருக்கும் பாரபின் மெழுகு, கிட்னி, நரம்பு சம்பந்தமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்கிறார்கள். இதில் உள்ள குரோமியம், நுகரும்போது நுரையீரல் பாதிப்பை ஏற்படும் என எச்சரிக்கிறார்கள்.

நமது நாட்டிலும் ஏராளமான பெண்கள் உதட்டு சாயத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இவர்களுக்கும் இதே பாதிப்புகள் ஏற்படும். இதில் ஒட்டும் தன்மைக்காக பாரபின் வேக்ஸ் பயன்படுத்தப்படுகிறது. வண்ணம் மற்றும் மணத்துக்காக குங்குமத்தில் கலக்கும் கார்மியம், துத்தநாகம், சல்பர் எனப் பல்வேறு இரசாயனங்கள் கலக்கப்படுகிறது. உலோக வர்ணம் கிடைக்க லெட் வர்ணப்பூச்சு போடப்படுகிறது. இந்த பாரபின் வேக்ஸ் கொஞ்சம் கொஞ்சமாக வயிற்றுக்குள் செல்லும். நாம் சாப்பிடும் உணவில் இருக்கும் சத்துக்களை உறிஞ்சுவதற்கு ஒருவிதமான வில்லைகள் வயிற்றில் இருக்கும். இந்த பாரபின் வேக்ஸ் வயிற்றில் படிய படிய ஒவ்வொரு விட்டமின் உறிஞ்சிகளும் பாதிக்கப்படும். இதனால், விட்டமின் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படும். எலும்புகளில் சத்துக்கள் குறையும்.

சீனாவின் அனைத்து தயாரிப்புகளிலும் இந்த லெட் வர்ணப்பூச்சு இருக்கும். சீனத் தயாரிப்பு பொம்மைகளை குழந்தைகளுக்கு வாங்கித் தருவதை தவிர்க்க வேண்டும். தொடர்ந்து குங்குமத்தை நெற்றியில் வைத்துக்கொள்ளும் பலருக்கும் அந்த இடமே கருப்பாக மாறியிருப்பதைக் காணலாம். அதுபோல தொடர்ந்து உதட்டு சாயத்தை பயன்படுத்துவதால் உதடுகள் பாதிக்கப்படும்.

சிலருக்குப் பல்லி எச்சம் எனப்படும் வைரல் தொற்று உண்டாகும். அவர்கள் முத்தமிடும்போது மற்றவருக்கும் பாதிப்புகள் வரும். தோலில் சிறிய கொப்பளங்கள், அரிப்பு, வெடிப்பு போன்றவையும் உதட்டு சாயத்தின் பயன்பட்டால் உண்டாகின்றன. விரைவிலேயே முதுமைத் தன்மையும் உண்டாக்குதிலும் உதட்டு சாயத்தின் பங்கு இருக்கிறது. எனவே, உதட்டு சாயத்தை தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon