Link copied!
Sign in / Sign up
2
Shares

உலக நாடுகளின் உடலுறவு சார்ந்த சட்டங்கள்

உடலுறவு என்பது அனைத்து உயிரினங்களுக்கு இடையிலும் மிக இயல்பான ஒன்று. ஆனால் உடலுறவை வேண்டாதது, கூடாதது, தவறானது என்று தவிர்த்து வளர்ப்பதால் தான் இளம் வயதினர் தவறானவற்றை கற்றுக் கொள்கின்றனர். இது இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் பல நாடுகளில் காண முடிகிறது. குழந்தைகளுக்கு குறிப்பிட்ட வயது வந்தவுடன் அவர்களுக்கு எதிர்பாலினம் மற்றும் ஈர்ப்பை பற்றி கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம்.

சில மேற்கத்திய நாடுகள் அளவுக்கு மீறிய சுதந்திரம் அளித்து, இளம் வயதினரின் வாழ்க்கையை அழித்து விடுகிறார்கள். அளவுக்கு மீறினால் எதுவும் நஞ்சு என்பதை உணர்த்த வேண்டும். இங்கு உடலுறவு சார்ந்த சட்டங்களை பார்க்கலாம்.

1 சிங்கப்பூர்

பொது வெளியிலோ, வீட்டின் அருகிலோ அல்லது வீட்டின் ஜன்னல் அருகிலோ வெளியே தெரியும் படி நிர்வாணமாக நிற்பது குற்றம். இந்த தவறை செய்தால் நீங்கள் பெரும் சிக்கலில் மாட்டிக்கொள்ளும் நிலை நேரிடும்.

2 போலாந்து

சில மனிதர்களுக்கு மனிதர்கள் மீது கவர்ச்சி ஏற்படுவதை போல், விலங்குகளின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு உடலுறவில் ஈடுபடுகிறார்கள். போலாந்தில் விலங்குகளுடன் உடலுறவில் ஈடுபடுவது குற்றம். இது போன்ற செயலில் மூன்று முறைக்கு மேல் நீங்கள் சிக்கினால், மரண தண்டனை வழங்கப்படும்.

3 பெரு

பொதுவாகவே காரமான உணவுகள் பாலுணர்வை தூண்டக் கூடியவை. பெருவியன் சிறையில், கைதிகள் சாப்பிடும் உணவில் அதிக காரம் சேர்க்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. காரம் அவர்கள் மத்தியில் பாலுணர்வு அதிகரிக்க தூண்டும் என்பதால் இந்த தடை நிலவுகிறது. இங்கு சிறையில் கைதிகள் உடலுறவில் ஈடுபடுவது தவறு.

4 இந்தோனேசியா

சுய இன்பம் காணுதல் என்பது பெரும்பாலும் ஆண் மற்றும் பெண்களுக்கு இடையில் காணப்படும் ஒன்று. ஆனால், இந்தோனேசியாவில் சுய இன்பம் காண்பது கண்டுப்பிடிக்கப்பட்டால், இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும். குற்ற உணர்வு ஏற்படும் பட்சத்தில் அந்த நபருக்கு எட்டு மாதங்கள் வரை சிறை தண்டனை வழங்கப்படும்.

5 லண்டன்

எங்கு எங்குதான் உடலுறவுகொள்வது எனும் வரையறை இல்லாத அளவிற்கு எங்கும் உடலுறவில் ஈடுபடுகிறார்கள். இதை கலாசார இழிவாக பெரும்பாலான நாடுகளில் கருதப்படுகிறது. லண்டனில் இருசக்கர வாகனத்தில் உடலுறவில் ஈடுபடுவது தவறு. இதை சட்டங்கள் எதிர்க்கின்றன.

6 கொலம்பியா

திருமணத்தின் பின் தம்பதிகள் எப்போது இணைய வேண்டும் என்பது தம்பதிகளின் விருப்பம். ஆனால், கொலம்பியாவில் முதலிரவின் போது புதுமண தம்பதிகள் பிரிந்து இருக்க கூடாது. அன்றைய இரவு மணப்பெண்ணின் தாய் முன்பு அவர்கள் இணைந்திருக்க வேண்டும். 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
100%
Not bad
0%
What?
scroll up icon