Link copied!
Sign in / Sign up
2
Shares

இந்த 7 உணவை சாப்பிட்டு உடற்பயிற்சி செய்தால் உயிருக்கே ஆபத்து!

இன்றைய தலைமுறையை பெரிதும் பாதிக்கும் கொடிய நோய் உடல் பருமன். சிறிய குழந்தைகள் முதல் வயது முதிர்ந்தவர்கள் வரை அனைவரும் இதனால் பாதிப்படைகிறார்கள். இது உடலில் பலவித பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. உடல் எடையை குறைக்க பலரும் பல வழிகளை முயற்சிக்கிறார்கள். சிலர் உடல் எடையை குறைக்கிறேன் என்று சரியாக சாப்பிடாமல் இருப்பார்கள். சிலர் கடுமையாக உடல் பயிற்சி செய்தும் பலனில்லை என கவலைப்படுகிறார்கள். நாம் செய்யும் சில இயல்பான விஷயங்கள் உடல் எடை குறைப்பதில் சிரமத்தை ஏற்படுத்தும். உடற்பயிச்சிக்கு பின் சில உணவுகளை நாம் தவிர்க்க வேண்டும். இங்கு அவற்றை பற்றி பார்க்கலாம்.

1 பாலாடைக்கட்டி

பாலாடைக்கட்டி எனப்படும் சீஸில் நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் உப்பு அதிக அளவில் இருக்கும். காலை நேர உடற்பயிற்சிக்கு பின் இவற்றை தவிர்ப்பது சிறந்தது.

2 பச்சை காய்கறி

காய்கறிகளை நறுக்கி வேக வைத்து சாப்பிடுவதன் மூலம் சத்துக்கள் குறையும். வேக வைக்காமல் சாப்பிட வேண்டும் என பலர் அறிவுரை கூறுவார்கள். ஆனால், பச்சை காய்கறிகளை உடற்பயிற்சிக்கு பின் சாப்பிட்டால், நீங்கள் செய்த அனைத்தும் வீண் என்பதை போல் ஆகிவிடும்.

3 முட்டை

முட்டை மற்றும் சூப் உடற்பயிற்சிக்கு பின் சாப்பிட வேண்டிய உணவுப் பொருள் என நீங்கள் கோபப்படலாம். முட்டையை உடற்பயிற்சிக்கு பின் பச்சையாகவோ அல்லது வேக வைத்து வைத்தோ சாப்பிடுங்கள். அவற்றை எண்ணெய் உடல் சேர்ந்து இருக்குமாறு பொரியல் செய்து சாப்பிட கூடாது. இது உடலின் கொழுப்பை அதிகரிக்க செய்யும்.

4 பழச்சாறு

பழங்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை தரவல்லதாக இருந்தாலும், உடற்பயிற்சிக்குப் பின்னர் உடனே சாப்பிடக் கூடாது. இதனால் பழங்களில் உள்ள சர்க்கரை, இரத்தத்தின் சர்க்கரை அளவை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. உங்களுக்கு ஏதும் குடிக்க வேண்டும் போல் தோன்றினால், தண்ணீர், இளநீர் மற்றும் தேனீர் போன்றவற்றை குடிக்கலாம்.

5 மில்க் ஷேக்

பால் மற்றும் பழங்களின் கலவையான மில்க் ஷேக் உண்டலுக்கு ஆரோக்கியத்தை தரக் கூடியது என்றாலும், உடற்பற்சியை முடித்தவுடன் சாப்பிட்டால் உடலின் சர்க்கரை அளவை அதிகரிக்கும். இதற்கு பதிலாக வெறும் பால் சேர்த்து கொள்ளலாம்.

6 பிரட்

மைதாவினால் செய்யப்பட்ட பிரட்டை உடற்பயிற்சிக்கு பின் சாப்பிடும் போது, அவை எளிதில் சர்க்கரையாய் மாறி, உடலில் தங்கி விடும். உங்கள் உடற்பயிற்சிக்கு பலனின்றி போய் விடும். முடிந்த வரை தானியங்களை சேர்த்துக் கொள்வது சிறந்தது.

7 பதப்படுத்தப்பட்ட இறைச்சி

பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் உப்பு மற்றும் கொழுப்புகள் அதிக அளவில் சேர்த்து பதப்படுத்தப்பட்டிருக்கும். இவை செரிமான மண்டலத்தின் இயக்கத்தை குறைத்து பாதிப்பை ஏற்படுத்தும். உடல் பயிற்சிக்கு பின் இவற்றை சாப்பிடாமல் தவிர்க்க வேண்டும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon