Link copied!
Sign in / Sign up
0
Shares

உடற்பயிற்சி செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்

எல்லோரும் உடற்பயிற்சி செய்யுங்கள் என்று உங்களுக்கு பரிந்துரை செய்வார்கள். ஏனென்றால், அது உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். ஆனால், உடற்பயிற்சி செய்யும் போது உங்கள் உடலில் என்ன நடக்கின்றது என்று தெரியுமா? உங்களின் இதய துடிப்பை அதிகரித்து, வியர்வையை வெளியேற்றுவது மட்டுமில்லாமல் வேறு எந்த உறுப்புகளில் என்ன மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதை இந்த பகுதியில் பார்ப்போம்.

1 இதய துடிப்பு அதிகரிக்கும்

உங்கள் உடல் உங்களின் தசைகளுக்கு விரைவாக இரத்தத்தையும் ஆக்ஸிஜனையும் வழங்க வேண்டும் என்பதால் உங்களின் இதய துடிப்பு அதிகரிக்கும். ஆனால் நீங்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்துக்கொண்டிருந்தால் உங்களின் இதய துடிப்பு சீராகிவிடும். ஏனெனில், தொடர்ந்து பயிற்சி செய்ய செய்ய உங்களின் இதயம் இரத்தம் மற்றும் ஆக்ஸிஜன் வழங்குவதில் சிறப்பாக செயல்பட ஆரம்பித்துவிடும்.

2 கலோரிகள் எரிக்கப்படும்

உங்களின் உடல் நீங்கள் சாப்பிட்ட உணவை உடைக்கும் போது, அது ATPயாக மாற்றும். இந்த ATP மீண்டும் ADP ஆக மாற்றப்படும். இந்த செயல்முறையில் கிடைக்கும் ஆற்றலினால் தான் உங்களின் தசைகள் சுருங்கி விரியும். இந்த முறைக்கு பெயரே " கலோரிகள் எரிப்பு " என்று அழைக்கப்படுகிறது.

3 உடலின் வெப்பம் அதிகரிக்கும்

உங்கள் உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்படுவதால், உங்கள் உடலின் வெப்பம் அதிகரிக்கும். இதனால், உங்களுக்கு வியர்த்து, வியர்வை வெளியேறும். உங்களின் உடல் மிகவும் அதிகமாக சூடாகி விடக்கூடாது என்பதால், உங்களின் உடலின் வெப்ப நிலையை கட்டுக்குள் வைத்திருக்கவே உங்கள் உடலில் இருந்து வியர்வை வெளியேறுகிறது.

4 செரிமானத்தில் மாற்றங்கள் ஏற்படும்

சில சமயங்களில், உடற்பயிற்சி செய்த உடன் வயிறு கலக்குவது போன்று தோன்றும். இது ஏன் ஏற்படுகிறது என்றால் உடற்பயிற்சி செய்யும் போது, உங்களின் இரத்தம் மற்றும் ஆக்ஸிஜன் உங்களின் தசைகளில் பாயும். இதனால், வயிற்றுப்போக்கு ஏற்படும். இதனாலே, மருத்துவர்கள், உடற்பயிற்சி செய்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் எந்த உணவையும் சாப்பிட கூடாது என்று அறிவுறுத்துவார்கள்.

5 மூளையின் செயல்திறன் அதிகரிக்கும்

ஒரு ஆய்வில், உடற்பயிற்சி செய்வதால் ஒரு மனிதனின் யோசிக்கும் திறன் மற்றும் நியாபக சக்தி அதிகரிப்பதாக கண்டறிப்பட்டுள்ளது. உடற்பயிற்சி செய்யும்போது உடலில் அதிக இரத்தம் பாய்வதால், மூளையின் செயல்திறன் அதிகரிப்பதாக தெரிகிறது. மேலும், உடற்பயிற்சி செய்யும்போது மூளையின் வளர்ச்சியும் அதிகரிப்பதாக கண்டறிப்பட்டுள்ளது.

6 ஹார்மோன் உற்பத்தி

உடற்பயிற்சி செய்யும் போது அட்ரீனலின் மற்றும் கார்டிசோல் ஆகிய ஹார்மோன்களின் உற்பத்தி அதிகரிக்கும். இவை இரண்டும், மன அழுத்த ஹார்மோன்கள் என்று அழைக்கப்படுகிறது. மேலும், இந்த ஹார்மோன்கள் சுரப்பதால், இவை உங்களின் தசைகளில் ஏற்படும் வலியை குறைக்கும். அதுமட்டுமில்லாமல், உங்களின் மனநிலையை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும்.

7 தசை நீட்சி

உடற்பயிற்சியினால், உங்களின் உடலில் உள்ள தசைகள் அனைத்தும் அழுத்தத்தில் இருக்கும். சிறிய தசை முறிவு கூட ஏற்படலாம். ஆனால், அவை ஆபத்தானவை அல்ல. இவை உங்களின் தசைகளின் வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்கும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon