Link copied!
Sign in / Sign up
1
Shares

உடலுறவுக்கு முன் கட்டாயம் செய்ய கூடாத 5 விஷயங்கள்

தாம்பத்தியம் என்பது கணவனும் மனைவியும் மனம் மற்றும் உடலால் இணையும் செயலாகும். இங்கு எவ்வித பாகுபாடும் இன்றி இருவருக்கும் சம உரிமை இருக்கும். விட்டு கொடுத்தல், உணர்வுகளை மதித்தல், ஒழுக்கம் போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும். உடலுறவு தம்பதிகளின் காதலை, அன்பை மற்றும் புரிதலை அதிகரிக்கும். இது இருவரிடையேயும் நெருக்கத்தை ஏற்படுத்தி, பிரச்சனைகளை குறைக்கும். இங்கு உடலுறவிற்கு முன் செய்ய கூடாத 5 விஷயங்களை பார்க்கலாம்.

1 சூயிங்கம்

சூயிங்கம் சாப்பிடுவது பெரும்பாலானவர்களுக்கு பிடித்தமான ஒன்று. சிலர் வாயில் ஏற்படும் துர்நாற்றத்தை தடுக்க சூயிங்கம் சாப்பிடுவார்கள். பெரும்பாலும் புகை பிடிப்பவர்கள் இதை சாப்பிடுவார்கள். மேலும் சிலர் எந்நேரமும் அதை மென்று கொண்டே இருப்பார்கள். உடலுறவிற்கு முன் சூயிங்கம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். உடலுறவிற்கு முன் சூயிங்கத்தை மெல்லும் போது, நாம் எதையோ சாப்பிடுகிறோம் என நம் செரிமான உறுப்புகள் வேலை செய்ய துவங்கும். இது வாயு பிரச்சனைகளை, நெஞ்செரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும்.

2 உணவு

உணவு நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கியத்தை கொடுப்பவை என்றாலும், உடலுறவிற்கு முன் அவற்றை தவிர்க்க வேண்டும். உடலுவிற்கு முன் உணவு எடுத்து கொண்டால், உடலுறவில் முழுமையாக ஈடுபட முடியாது. இது வாயு பிரச்சனைகளை ஏற்படுத்தும். உடலுவிற்கு பின் சேர்த்து சமைத்து சாப்பிடுங்கள். உணவிற்கு பதிலாக சாக்லேட் சாப்பிடுங்கள், அது உடலுறவில் ஈடுபாட்டை அதிகரிக்கும்.

3 மது அருந்துதல்

மது அருந்துவது உடல் நலத்திற்கு கேடு என்றாலும், யாரும் அதை விடுவதாய் இல்லை. இப்போதைய காலகட்டத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் மது அருந்துகிறார்கள். இப்போது குடும்பமாக சேர்ந்து மது அருந்தும் பழக்கமும் அதிகரித்து வருகிறது. உடலுறவிற்கு முன் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.மது அருந்திவிட்டு உடலுறவில் ஈடுபடும் போது, அது உடலுறவின் செயல்பாட்டை குறைக்கும். இது உங்கள் துணைக்கு அதிருப்தியை ஏற்படுத்தலாம். மது அருந்துவதை தவிர்ப்பது சிறந்தது.

4 பாலாடைக்கட்டி(சீஸ்)

பெரும்பாலானவர்களுக்கு பாலடைக்கட்டியில் இருக்கும் லாக்டோஸ் ஒவ்வாமையை ஏற்படுத்தும். உடலுறவிற்கு முன் இதை எடுத்து கொண்டால், உடலுறவில் சரிவர ஈடுபட முடியாது. எனவே சீஸ் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

5 இறைச்சி

உடலுறவிற்கு முன் இறைச்சியை தவிர்ப்பது சிறந்தது. இது செரிக்க 6 மணி நேரம் வரை எடுத்துக் கொள்ளும். இதனால், தூக்க உணர்வை ஏற்படுத்தும். இதனால், உடலுறவில் முழுமையாய் ஈடுபட முடியாது.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon