Link copied!
Sign in / Sign up
1
Shares

உடலுறவுக்கு முன் கட்டாயம் செய்யக் கூடாத 6 விஷயங்கள்

ஒரு சிறப்பான இரவில் நீங்கள் உங்கள் கணவருடன் இருக்க திட்டமிடுகிறீர்கள் அல்லது உங்கள் திருமண நாளில் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கிறீர்கள். அதை உங்கள் கணவருக்கு தெரியப்படுத்துங்கள். தாம்பத்தியம் என்பது வெறும் உடலால் இணைவதில்லை, இரு மனமும், ஆத்மாவும் இணையும் நிகழ்வாகும். இது எப்போதும் உங்கள் கனவை போல் நிகழாது. இங்கு உடலுறவிற்கு முன் கட்டாயம் செய்யக் கூடாத 6 விஷயங்களை பார்க்கலாம்.

1 உணவு

காரமான மற்றும் அதிக நிறைவுற்ற கொழுப்பு நிறைந்த உணவுகளை உடலுறவிற்கு முன் கட்டாயம் தவிர்க்க வேண்டும். இது நீங்கள் அடிக்கடி கழிவறை செல்ல வேண்டிய சூழலை ஏற்படுத்துவதால், உங்கள் மொத்த மனநிலையை பாதிக்கும். இது வயிற்று உப்பசம், வாயு பிரச்சனை போன்றவற்றை ஏற்படுத்தும்.சில உணவுகள் உங்கள் அந்தரங்க பகுதி வாசனையையும் சுவைகளையும் மாற்றலாம். அதனால் மிகவும் வினோதமான ஒன்றுக்கு போகாதீர்கள். ஏனென்றால் நீங்கள் அதற்குப் பிறகு வருத்தப்பட நேரிடலாம்.

2 வெக்சிங்

உங்களது இனிமையான இரவிற்காக, நீங்கள் உங்கள் அந்தரங்க பகுதி முடிகளை சுத்தம் செய்ய வேண்டும் என நினைக்கலாம். ஆனால், அதை செய்ய கூடாது. மிகவும் கொடுமையான அந்த வெக்சிங்கின் போது, உங்கள் முடி துவாரங்கள் திறக்கப்பட்டு உங்களுக்கு அதிகப்படியான வலி மற்றும் எரிச்சலை கொடுக்கும். உங்கள் காதல் விளையாட்டில் ஈடுபடும் போது ஏற்படும் உராய்வினால் அதிக வலி ஏற்படும்.

3 பரிந்துரைக்கப்பட்ட மாத்திரைகள்

உங்களது ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சில மருத்துகள் பரிந்துரைக்கப்பட்டிருந்தால், உங்கள் துணையுடன் நேரம் செலவிடுவதற்கு முன் அவற்றை எடுத்துக் கொள்ளாதீர்கள். நீங்கள் உடலுறவில் ஏற்படும் போது, மருந்துகள் சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். மன அழுத்தம் போன்ற சில மருந்துகள் செரோடோனின் அளவுகளை அதிகரிக்கும், அதனால் அவை உங்கள் ஆர்வத்தை குறைக்கலாம். அத்தகைய சூழ்நிலை ஏற்படும் போது என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி உங்கள் மருத்துவரிடம் பேசி, அதற்கான மாற்றுக்களை பெறுங்கள்.

4 மது

ஆண்கள் அதிகமாக குடிக்கும் போது விறைப்பு செயலிழப்பு நோய் ஏற்படும் அபாயம் அதிகம். அதே போல் பெண்கள் குடித்தால், அது உச்சநிலையை அடைவதை கடினப்படுத்தும். இது உங்களை மந்தமடைய செய்து உங்களை சுற்றி செய்யும் செயலின் வேகத்தை குறைக்கும். யாருக்கும் இது பிடிக்காத ஒன்றாக இருக்கும். இது உடலுறவின் ஈடுபாட்டை குறைப்பதால், உடலுறவிற்கு முன் தவிர்ப்பது சிறந்தது.

5 காப்பி

காப்பியில் இருக்கும் காஃபின் அட்ரீனல் சுரப்பியின் மீது அழுத்தம் கொடுக்கிறது மற்றும் உங்கள் உடலுறவு ஹார்மோன்களை கட்டுப்படுத்தி உங்களை சாதாரண நிலையில் இருக்க செய்கிறது. இது உங்களை அதிவேக ஆற்றலுடன் செயல்பட வைத்து, விரைவில் ஆற்றலை இழக்க செய்து விடும். இதனால் ஆர்வம் குறைந்து, உங்களுக்கு சோர்வை ஏற்படுத்தும்.

6 வேலை

வேலை என்பது எப்போதும் செய்வதல்ல. நீங்கள் எப்போதும் செய்யும் வேலையை விட அதிக வேலை செய்வது. உங்களது நேரத்தை வேலையில் செலவிடும் போது, உங்கள் துணையுடன் செயல்படும் நேரத்தை குறைக்கிறது. நீங்கள் உங்கள் படுக்கைக்கு செல்லும் போது, தூக்கம் உங்கள் கண்களை தழுவுவதால், நீங்கள் திட்டமிட்டபடி செயல்பட முடியாது.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon