Link copied!
Sign in / Sign up
12
Shares

உடலுறவு சார்ந்த அதிச்சியூட்டும் 5 தகவல்கள்

உடலுறவு எனப்படும் தாம்பத்தியம் திருமண வாழ்வின் அடிப்படையான ஒன்று. இது ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையே ஏற்படும் ஈர்ப்பு என்றால் தவறு. மனதால் இணைந்து பின் உடலால் இணைவதே தாம்பத்தியம். மனித உடலை போல் வியந்து பார்க்க கூடியது வேறு ஏதும் இல்லை. 

உடலுறவில் ஈடுபடும் முன் அதை பற்றி தெரிந்து கொண்டு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம். இரு பாலினத்தை சேர்ந்தவர்களும் எதிர் பாலினத்தவரின் உடலை பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். இங்கு உடலுறவு சார்ந்த அதிர்ச்சியூட்டும் தகவல்களை பார்க்கலாம்.

1 கொழுப்பு

உடலில் கொழுப்பு குறைவாக இருந்தால் உடல் எடை கட்சிதமாக இருக்கும் என்பது நாம் அறிந்தது தான். ஆனால், உடலில் குறைந்த கொழுப்பு இருந்தால், அவர்கள் உடலுறவில் அதிக ஈடுபாட்டுடன் இருப்பார்கள். உடலுறவில் சரிவர செயல்பட முடியவில்லை எனில், கொழுப்பு அதிகமாக கூட இருக்கலாம். மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது சிறந்தது.

2 விளையாடுதல்

பெரும்பாலும் தம்பதிகள் உடலுறவிற்கு முன் கொஞ்சி விளையாடுவார்கள். ஆனால், உடலுறவின் பின்னும் கொஞ்சி விளையாட வேண்டியது அவசியம். துணையை உடலுறவின் பின் கொஞ்சி விளையாடாமல் இருப்பது, அவர்களை முழுமையடைய செய்யாது. மேலும், உடலுறவின் பின் கொஞ்சி விளையாடுவதால், உடலிருந்து வெளிப்படும் ஆக்ஸிடாஸின் தான் பெண்களை முழுமையாக உடலுறவை அனுபவிக்க உதவுகிறதாம்.

 

3 விழிப்புணர்வு

உடலுறவு என்பது தவறான ஒன்றல்ல. கணவன் மனைவிக்கு இடையேயான உடலுறவு மதிப்பிற்குரியதாக இருக்கிறது. உடலுறவை பற்றிய போதுமான தகவல்களை தெரிந்து கொண்டு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது. அதனைப்பற்றி இருவருக்கும் இடையில் புரிதல் அவசியமாகிறது.

4 கலோரிகள்

உடலுறவில் ஈடுபடுவதால் உடலில் உள்ள கலோரிகள் குறையும். இது உடற்பயிற்சி செய்வதற்கு நிகரான ஒன்று. முழுமையாக உடலுறவில் ஈடுபட்டு முடித்தால், அரைமணி நேரம் நடைப்பயிற்சி செய்ததற்கு சமமான பலனை அடையலாம்.

 

5 மூளை

சிலருக்கு உடலுறவில் ஆர்வம் அதிகமாக இருக்கும். தினசரி உடலுறவுக்கு தயாராக இருப்பார்கள். அவர்களது மூளை தான் இதற்கு காரணமாகிறது. மூளை சுறுசுறுப்பாக இருக்கும் அளவிற்கு, உடலுறவு சார்ந்த எண்ணங்களும் அதிகரிக்கும். 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon