Link copied!
Sign in / Sign up
12
Shares

உடலுறவு பற்றி ஆண்களுக்கு தெரியாதவை

அனைத்தும் தெரிந்தவர்கள் என யாரும் இருக்க முடியாது. சிலருக்கு பல விஷயங்கள் தெரிந்து இருந்தாலும், அவர்களுக்கும் சில விஷயங்கள் தெரியாமல் தான் இருக்கும். பொதுவாக உடலுறவில் ஆண்கள் அனைத்தும் அறிந்திருப்பார்கள் எனும் கருத்து பரவலாக காணப்படுகிறது. ஆனால் ஆய்வாளர்களின் முடிவு என்னவோ பெண்களுக்கு தான் சாதகமாக இருக்கிறது. இங்கு  யார் அறிந்தவர் என்பது அவசியமல்ல. தம்பதிகள் இருவரும் தெரிந்திருக்க வேண்டும் என்பதே அவசியம்.

உடலுறவில் எனக்கு அனைத்தும் தெரியும் என சொன்னாலும், பலருக்கும் சில சந்தேகங்கள் இருந்து கொண்டே தான் இருக்கும். வெளியில் கேட்டால் ஏதும் தெரியாது என கேலி செய்வார்களோ அல்லது தவறாக நினைத்து விடுவார்களோ என்று யாரிடமும் கேட்க மாட்டார்கள். இங்கு உடலுறவு பற்றி ஆண்களுக்கு தெரியாதவற்றை பார்க்கலாம்.

1 இஞ்சி

பாலுணர்வை தூண்டிவிடும் தன்மை இஞ்சிக்கு நிறைய இருக்கிறது. இஞ்சி இதய துடிப்பை சீராக்கவும், இரத்த ஓட்டத்தை வேகப்படுத்தவும் வல்லது. ஆண் விறைப்பை அதிகப்படுத்த இரத்த ஓட்டம் சீராக, வேகமாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

2 விந்தணு

வயதானால் ஏற்படும் சுருக்கத்தை போக்க விந்தணு உதவுகிறதாம். ஸ்பெர்மைன் எனப்படும் கூறு அதிக ஆண்டிஆக்ஸிடன்ட் கொண்டதாம், இது சுருக்கத்தை போக்கி மென்மையாக்க உதவுகிறது.

3 உணர்ச்சி

உணவும், உடலுறவும் உடலோடு ஒன்றுக்கொன்று இணைப்பு கொண்டுள்ளதாகும். மூளை மற்றும் லிம்பிக் மண்டலத்துடன் இவை இணைப்பு கொண்டுள்ளன. இவை உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவை.

4 ஆணுறை

பொதுவாக இரண்டு ஆண்டுகளுக்கு பழமையான ஆணுறைகள் பயனளிக்காது. எனவே, ஆணுறை வாங்கும் போது அதன் உற்பத்தி தேதியை பார்க்க வேண்டியது அவசியம்.

5 புற்றுநோய்

உடலுறவில் அதிக முறை விந்தை வெளிப்படுத்தும் ஆண்களுக்கு புற்றுநோய் அபாயம் குறைவு.

6 வலி நிவாரணி

உடலுறவில் உச்சம் காணும் போது ஆக்ஸிடாஸின் அளவு அதிகரிக்கிறது. இது எண்டோர்பின் வெளிப்பட காரணமாக இருக்கிறது. எண்டோர்பின் ஒரு இயற்கை வலி நிவாரணி என்பது குறிப்பிடத்தக்கது.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon