Link copied!
Sign in / Sign up
6
Shares

உடலுறவில் பெண்கள் செய்யும் 6 தவறுகள்

மனதால் ஒன்றிணைந்து திருமணத்தில் சங்கமித்த தம்பதிகள் உடலால் இணையும் நிகழ்வே தாம்பத்தியம் எனப்படுகிறது. தாம்பத்தியத்தில் ஆண்களை காட்டிலும் பெண்களே அதிக ஈடுபாட்டுடன் இருப்பார்கள். அதே சமயத்தில் ஆண், பெண் இருபாலாரும் தவறு செய்வார்கள். ஆண்கள் உடல்ரீதியான தவறுகளையும், பெண்கள் மனரீதியான தவறுகளையும், சுகாதாரம் ரீதியான தவறுகளையும் செய்வார்கள். இங்கு தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது பெண்கள் செய்யும் 6 தவறுகளை பார்க்கலாம்.

1 பெரும்பாலான பெண்கள் உடல் உருவத்தை பற்றி கவலை கொள்வார்கள். அதிலும் உறவில் ஈடுபட்டு உச்சம் அடையும் போது ஏற்படும் பாவனை ஒரு மாதிரியாக இருக்குமோ என்கிற எண்ணத்தில் உணர்வுகளை வெளிப்படுத்த மாட்டார்கள்.

2 சில பெண்கள் உடலுறவில் அவர்களின் விருப்பம் போல் செயல்பட விரும்புவார்கள். ஆனால், ஆண்கள் தான் இதில் ஆதிக்கம் செலுத்துவார்கள். ஆண்களின் ஹார்மோனால் அவர்களின் செயல்பாடு அப்படி இருக்கும். இதை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

3 தாம்பத்தியத்தின் போது சில பெண்கள் சுத்தமான உள்ளாடை அணியாமல் இருப்பார்கள். இதனால் எளிதில் நோய் தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

4 சில பெண்கள் தாம்பத்தியத்தில் உச்சம் அடையும் முன்பே, உச்சம் அடைந்தது போல் உணர்வை வெளிப்படுத்துவார்கள். இது அவர்களின் துணையை ஏமாற்றமடையவும், சில நேரத்தில் வெறுப்படையும் செய்யும்.

5 பெரும்பாலான பெண்கள் உடலுறவில் ஈடுபடும் போது, பெண்ணுறுப்பை சுத்தமாக வைத்து கொள்வதில்லை. இது அலர்ஜி மற்றும் நோய் தொற்றை ஏற்படுத்தும்.

6 உடலுறவின் போது ஆண்கள் சில உடல் ரீதியான தவறுகளை செய்வது இயல்புதான். அது உங்களுக்கு பிடிக்கவில்லை எனில், அதற்காக அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்ள கூடாது. இது மொத்த செயல்பாட்டையும் சீர்குலைத்து விடும். அவர்களுக்கு புரியும் படி எடுத்து சொல்ல வேண்டும்.

தாம்பத்தியம் என்பது உடல் ரீதியான செயல்பாடாக இருப்பினும், மனம் ஒத்து போகும் போது தான் முழுமையடைகிறது. விட்டு கொடுத்து செயல்படும் போகும் போது தான், வாழ்வில் அர்த்தங்கள் புலப்படும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon