Link copied!
Sign in / Sign up
12
Shares

உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உதவும் 10 உணவுகள்

இன்றைய கால மற்றும் உணவு முறை மாற்றத்தால், சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடல் பருமனால் அவதிப்படுகிறார்கள். அதிக உடல் எடை அதிகரிக்க உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பே காரணமாகிறது. உண்ணும் உணவில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பே உடலில் சேர்ந்து எடையை அதிகரிக்கிறது. இங்கு உடலில் சேரும் கொழுப்புகளை கரைக்க உதவும் 10 உணவுகள் பற்றி பார்க்கலாம்.

1 பார்லி

பார்லி தானியங்களில் ஒன்று. இதில் கரையக் கூடிய நார்ச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்திருக்கின்றன. இது உடலில் கொழுப்பு சேர்வதை தடுப்பதோடு, சேர்ந்திருக்கும் கொழுப்பையம் கரைத்து விடும்.

2 கத்திரிக்காய்

காய்களில் ஒன்றான இதில் கலோரிகள் மிகவும் குறைவு. இல்லை என்றே சொல்லும் அளவிற்கு கலோரிகள் குறைவாக இருந்தாலும், நார்ச்சத்துக்கள் அதிகம். இது தேவையற்ற கொழுப்பை குறைக்க உதவுகிறது. 

3 மீன்

மீன்களை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இதில் நல்ல கொழுப்புகள் நிறைந்திருப்பதால், தேவையற்ற கொழுப்பு சேர்வதை குறைக்கும். மீன்களில் சால்மன் மற்றும் டூனா போன்றவற்றில் அதிக அளவில் நல்ல கொழுப்புகள் நிறைந்திருக்கின்றன. 

4 ஆப்பிள்

ஆப்பிளில் வைட்டமின் சி மற்றும் பெக்டின் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளது. தினசரி ஆப்பிள் சாப்பிடுவதன் மூலம், தேவையற்ற கொழுப்பு உடலில் சேர்வதை தவிர்க்கலாம். 

5 நட்ஸ்

நட்ஸில் ஒமேகா-3, ஃபேட்டி ஆசிட் அதிகமாக நிறைந்திருக்கிறது. இது தேவையற்ற கொழுப்பை கரைக்க உதவுகிறது. நொறுக்குதீனிகளுக்கு பதிலாக பாதம், வால்நட் போன்றவற்றை எடுத்து கொண்டால், தேவையற்ற கொழுப்பு குறைவதோடு, இதயத்தை பலப்படுத்தும். 

6 தேநீர்

தேநீரில் புற்றுநோயை தடுக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் அதிக அளவில் நிறைந்திருக்கின்றன. பால் சேர்க்காத தேநீரை குடித்து வந்தால், உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பு குறையும். 

7 வெங்காயம்

வெங்காயத்தில் உள்ள க்யூயர்சிடின் என்னும் ஃப்ளே வோனாய்டு, இரத்த குழாய்களில் இருக்கும் தேவையற்ற கொழுப்பை குறைக்கும் ஆற்றல் கொண்டது. எனவே, வெங்காயத்தை உணவில் அதிக அளவில் சேர்த்து கொண்டால், உடலில் இருக்கும் கொழுப்பு குறைவதோடு, இருதயத்தையும் பாதுகாக்கும்.

8 ஓட்ஸ்

ஓட்ஸை தினமும் காலை உணவிற்கு பதிலாக சாப்பிடால், உடலில் கொழுப்பின் அளவு அதிகரிப்பதை குறைக்கலாம். மேலும், இதில் அதிக அளவில் நார்ச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், உடலில் இருக்கும் கொழுப்பையும் கரைக்கும். 

9 முழு தானியங்கள்

இதயத்தை பலப்படுத்தும் ஆற்றல் கொண்டவை முழு தானியங்கள். இதில் அதிக அளவில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. முடிந்தவரை, உணவில் தினை, கேழ்வரகு போன்றவற்றை அதிகம் சேர்க்கவும். 

10 சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, பெர்ரி போன்வற்றில் கரையக் கூடிய நார்ச்சத்தான பெக்டின் வளமையாக உள்ளது. இது இரத்த நாளங்களில் படிந்திருக்கும் கொழுப்புக்களை கரைத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon