இன்றைய காலகட்டத்தில் போதுமான உடற்பயிற்சி, துரித உணவுகள் மற்றும் பல்வேறு காரணங்களுக்காக உடல் எடை அதிகரிக்கிறது. உடல் எடை அதிகரிப்பால் நாம் பல உடல் நல பிரச்சனைகளை சந்திக்கிறோம். குறிப்பாக பெண்கள் உடல் எடையால் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். உடல் எடையால் அவஸ்தைப்படுபவர்களுக்கு காலை வேளையில் இந்த கற்றாழை ஜூஸை குடித்து வருவது மிகவும் நல்லது. இது உடலுக்கும் குளுமை தருகிறது. இப்போது எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கற்றாழை ஜெல் – 100 கிராம்
எலுமிச்சை – 1
தேன் – தேவையான அளவு
இஞ்சி – 1/2 இன்ச்
உப்பு – 1 சிட்டிகை
செய்முறை :
1 கற்றாழையில் உள்ள ஜெல் பகுதியை மட்டும் எடுத்து நன்றாக கழுவி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
2 எலுமிச்சை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும்.
3 இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
4 மிக்ஸியில் எலுமிச்சை சாறு, தேன், உப்பு மற்றும் இஞ்சி சேர்த்து அரைத்து, வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
5 பின்பு அத்துடன் கற்றாழை ஜெல், தண்ணீர் 1 கப் சேர்த்து மீண்டும் ஒருமுறை மிக்ஸியில் நன்றாக அடிக்கவும். இஞ்சி கற்றாழை ஜூஸ் ரெடி!!!
