Link copied!
Sign in / Sign up
1
Shares

உடல் எடையை குறைக்க உதவும் தேநீர்

மிகவும் சுவையான உணவு பொருட்களை நம் முன் வைக்கும் போது, நம் நாவை கட்டுப்படுத்தி உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்வது சற்று கடினமான ஒன்று தான். ஏனெனில் இவற்றைப் பார்க்கும் போது பசியுணர்வு அதிகரித்து, ஒரு கட்டத்தில் நம்மை மீறியே அதனை சாப்பிட்டு விடுவோம்.

அப்படி சாப்பிட்ட பின்னர், அதனால் ஏற்பட்ட உடல் எடையை உடற்பயிற்சியை மட்டும் செய்து குறைக்க முயற்சிப்போம். ஆனால் உடற்பயிற்சி செய்ய நேரம் ஒத்து வரவில்லை என்றால் உடல் எடை தொடர்ச்சியாக அதிகரித்து கொண்டிருப்பதை யாராலும் தடுக்க முடியாது. அவற்றை விட உடல் எடையை குறைக்க நினைப்போர் மனதில் கொள்ள வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், எப்போதும் உடற்பயிற்சி மற்றும் உணவுக்கட்டுப்பாடு மட்டுமின்றி மற்ற வழிகளிலும் உடல் எடையை குறைக்க முயற்சிக்கலாம்.

ஏனெனில் உடல் எடையை குறைக்க காய்கறிகள், பழங்கள் மற்றும் பானங்கள் கூட பெரிதும் உதவியாக இருக்கும். அவற்றில் பானங்கள் என்று வரும் போது தேநீர் மற்றும் பழச்சாறுகள் தான் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் தேநீரில் நிறைய ஆரோக்கிய நன்மைகளும் நிறைந்துள்ளது. அதில் உடலின் ஆற்றலை அதிகரிப்பதில் இருந்து, மாரடைப்பு ஏற்படுவதை தடுப்பது, புற்றுநோயை எதிர்த்து போராடுவது என்று பல உள்ளன. இங்கு உடல் எடையை குறைக்க உதவும் தேநீர் பற்றி பார்க்கலாம்.

1 க்ரீன் டீ

உடல் எடையை குறைக்க நினைப்போர் நிச்சயம் குடிக்க வேண்டிய ஒரு பானம் தான் க்ரீன் டீ. அதிலும் இதனை காலை வேளையில் குடித்து வந்தால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து, உடல் எடை குறையும்.

2 ப்ளாக் டீ

பொதுவாக உணவுக்கட்டுப்பாட்டில் இருப்போர் ப்ளாக் டீ தான் அதிகம் பருகுவார்கள். அதிலும் அந்த ப்ளாக் டீயில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து குடித்து வந்தால், உடலின் ஆற்றல் அதிகரிப்பதுடன், ஸ்டாமினா அதிகரிக்கும். மேலும் அது உடலில் தங்கியுள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, உடல் எடை குறைய உதவியாக இருக்கும்.

3 ரோஸ் டீ

ரோஸ் டீ என்பது ரோஜாப்பூ இதழ்களை டீ கொதிக்கும் போது சேர்த்து செய்யப்படும் ஒரு டீ ஆகும். இந்த டீயானது மலச்சிக்கல் பிரச்சனையை போக்கி, வயிற்று உப்புசத்தைத் தடுக்கும். மேலும் ரோஸ் டீயானது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, சருமத்தை பொலிவோடும், உடல் எடையை குறைக்கவும் பெரிதும் உதவியாக இருக்கும்.

4 இந்தியன் பால் டீ

சாதாரணமாக வீட்டில் பால் கொண்டு செய்யப்படும் டீயில் சர்க்கரைக்கு பதிலாக, நாட்டுச்சர்க்கரை/சுகர் ப்ரீ சேர்த்து சாப்பிட்டால், அது பசியுணர்வைக் கட்டுப்படுத்தும். அதிலும் பாலில் ஸ்கிம்டு மில்க் கொண்டு டீ போட்டு குடிக்க வேண்டும். குறிப்பாக அத்துடன் ஏலக்காய் அல்லது இஞ்சி சேர்த்துக் கொண்டு சுவையுடன் இருப்பதோடு, உடல் பருமன் குறைய உதவியாகவும் இருக்கும்.

5 ஊலாங் டீ

சைனா டீயான ஊலாங் டீ, இரத்த சர்க்கரையையும், கார்டிசால் அளவையும் குறைக்கும். இதனால் உடலில் கொழுப்பு தேங்குவதை கட்டுப்படுத்த முடியும். முக்கியமாக அலுவலகம் செல்பவர்கள் இடை இடையிடையே இந்த டீயை அருந்தி வந்தால் மிகவும் நல்லது.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon