Link copied!
Sign in / Sign up
26
Shares

உடல் ஆரோக்கியத்தை பற்றி சொல்லும் மாதவிடாய் இரத்தம்

மாதவிடாய் என்பது ஒரு இயற்கை நிகழ்வு. அது மனநிலையில் மகிழ்ச்சி கோபம் என அனைத்தின் கலவையாய் உணர்ச்சிகளை வெளிக்கொண்டுவரும். உங்களுக்கு தெரியுமா? தொடர்ந்து மாதவிடாய் சுழற்சி சீராக இருக்கிறது என்றால் நீங்கள் மலட்டு தன்மையற்றவர்காளாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். மாதவிடாய் சுழற்சியில் குழப்பம் ஏற்படும் போது, கருத்தரிப்பதில் சிரமம் ஏற்படும்.

நீங்கள் வெளியில் இருந்து பார்ப்பதற்கு ஆரோக்கியமாக தோன்றினாலும், உடல்நலனில் ஏற்படும் மாற்றங்களும் குறைபாடுகளும் வெளியில் தெரிவதில்லை. உங்கள் உடலின் உட்பகுதில் ஏற்பட்டிருக்கும் ஆரோக்கிய குறைபாடு பற்றி உங்கள் மாதவிடாய் இரத்தத்தை வைத்து அறிந்து கொள்ள முடியும். அது எப்படி என்று உங்களுக்கு சந்தேகம் எழலாம். இங்கு உடல் ஆரோக்கியத்தை பற்றி எப்படி அறிவது என்பதை பற்றி பார்க்கலாம்.

1 ப்ரவுன் (பழுப்பு)

பழுப்பு நிற இரத்தம் பழைய இரத்தத்தை குறிக்கிறது. இந்த இரத்தம் கருப்பையில் நீண்ட காலமாக இருப்பதால் அவ்வாறு மாறுகிறது. இந்த இரத்தமானது கருப்பை சுவரிலிருந்து பிறப்புறுப்பு பகுதி திறப்பிற்கு கீழிறங்குவதற்கு நீண்ட காலம் எடுத்து கொள்வதால் இந்த நிற மாற்றம் ஏற்படுகிறது. மேலும் உடலில் ஏற்படும் ஆக்சிஜனேற்றமும் இதற்கு காரணமாகிறது. இது பெரும்பாலும் மாதவிடாய் துவக்கத்திலும், இறுதியில் இரத்தத்தின் நிறம் குறையும் போதும் ஏற்படும்.

2 அடர்சிவப்பு

இது மாதவிடாய் சுழற்சியின் நடுவில் அல்லது ஓட்டத்தின் முதல் நாளில் காணப்படுகிறது. இது உங்கள் உடலில் சிறிது நேரம் இருந்திருப்பதை குறிக்கிறது. இது நீங்கள் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்பதற்கான சான்றாகும்.

3 இளஞ்சிவப்பு

இரத்தப்போக்கு மிக குறைவாக இருக்கும் போது, இந்த நிறத்தை நீங்கள் பார்த்திருக்க முடியும். மேலும் இது உங்கள் உடலில் ஈஸ்ட்ரோஜென் அளவு குறைவாக இருப்பதை உணர்த்தும். அதிக உடற்பயிற்சியும் இதற்கு காரணமாக இருக்க முடியும். கடினமாக உடற்பயிற்சி செய்வது உடலின் ஈஸ்ட்ரோஜென் அளவை குறைக்கிறது.

இந்த ஈஸ்ட்ரோஜென் குறைபாடு எலும்புறை நோய், மனநிலை மாற்றம், இதய பிரச்சனைகள் மற்றும் அந்த உறுப்பில் வறட்சி போன்றவை ஏற்படும்.

4 ஆரஞ்சு

இது உங்கள் அந்தரங்க பகுதியில் நோய் தொற்று இருப்பதற்கான அறிகுறியாகும். இது பாலியல் நோய் அல்லது பாலியல் நோய் தொற்று இருப்பதற்கான அறிகுறியாகவும் இருக்கலாம். அங்கு அதிக துர்நாற்றம் காணப்படுவதோடு, உடல்நல கோளாறுகள் மற்றும் அதிகளவு வலியையும் ஏற்படுத்தும்.

5 சாம்பல் வண்ணம் (கிரே)

இது கருச்சிதைவு ஏற்பட போவதற்கான ஆரம்ப அறிகுறியாகும். இது பெரும்பாலான பெண்களுக்கு ஏற்படுகிறது. ஆனால், அவர்கள் அதில் அதிக கவனம் எடுத்துக் கொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள். உங்களுக்கு அதிகப்படியான இரத்தப்போக்குடன் சாம்பல் நிற துகள்கள் காணப்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

என் இனிய தமிழ் தோழிகளே! நீங்கள் மாதவிடாய் நாட்களில் உபயோகிப்பது எதுவாயினும், அது உங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஆரோக்கியம் அளிக்கிறதா என்று எண்ணிப்பாருங்கள்..! உங்களுக்கே சரியான பதில் கிடைக்கும்..! நீங்கள் பயன்படுத்துவதோ துணிகளோ நாப்கின்களோ அல்லது கப்களோ எதுவாயினும் 4 மணி நேரத்திற்கு ஒருமுறை மாற்றி மாற்றி பயன்படுத்தவும்..! சுற்றுச்சூழல் கெடாவண்ணம் அப்புறப்படுத்தவும்.! பெரும்பாலும் நல்ல பாதுகாப்பான நாப்கின்களை உபயோகிப்பது நல்லது..! அதுவே, எளிதானது, பொருளாதாரத்திற்கும் ஏற்றது..! 

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

Recently, we launched a baby-safe, natural and toxin-free floor cleaner. Recommended by moms and doctors all over India, this floor-cleaner liquid gets rid of germs and stains without adding harmful toxins to the floor. Click here to buy it and let us know if you liked it.

Stay tuned for our future product launches - we plan to launch a range of homecare products that will keep your little explorer healthy, safe and happy!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon