Link copied!
Sign in / Sign up
5
Shares

விரல் சூப்பும் பழக்கத்திலிருந்து குழந்தைகளை விடுவிப்பது எப்படி?

குழந்தைகளுக்குத் தாய்ப்பால் ஒரு முக்கியமான உணவாகும். தாய் தன் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பது, அது தாய் மற்றும் சேய் என இருவருக்குள்ளும் ஒரு நெருக்கத்தை உருவாக்குகிறது. இவ்வாறு தாயுடன் அதிகம் நெருக்கமில்லாத குழந்தைகளே அதிகமாக விரல் சூப்பும் பழக்கத்தை உருவாக்கிக்கொள்கின்றனர்; இதிலிருந்து புட்டிப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு இப்பழக்கம் அதிகமுள்ளது.

இப்போது எல்லாக் குழந்தைகளிடமும் விரல் சூப்பும் பழக்கம் இருக்கிறது; 3 வயது வரை குழந்தைகளின் இப்பழக்கத்தைத் தவறாக நினைக்க வேண்டியதில்லை. அவ்வயதிற்குப் பின்பும் இப்பழக்கம் நீடித்தால், குழந்தையின் இப்பழக்கத்தை எப்படி தடுப்பது என்று இந்த பதிப்பில் படித்தறியலாம்..!

குழந்தைகள் விரல் சூப்புவதை தடுப்பது எப்படி??

1. விரல்களைச் சூப்பும் குழந்தைகளுக்கு, சூப்பும் விரல்களுக்கு ஏதாவது வேலை இருக்கும் படி - அதாவது ஓவியம் வரைதல், புத்தகங்களைப் படிக்க வைத்தல் போன்ற மாற்று வழிகளில் குழந்தைகளை ஈடுபடுத்தல் வேண்டும்; இதன் மூலம் குழந்தைகளின் கவனத்தை திசை திருப்பி, சிறிது சிறிதாக இப்பழக்கத்தை அவர்கள் விட்டு விடுமாறு செய்யலாம்.

2. குழந்தைகளில் சிலர், இரவில் தூக்கத்தின் போது கை சூப்புவர்; இந்நிலையில் இவர்தம் பெற்றோர் குழந்தைகளின் விரல்களை எடுத்து விட்டு, குழந்தைகள் தூங்கும் போது, அவர்களின் கையில் ஏதாவதொரு விளையாட்டுப் பொருளையோ அல்லது பொம்மையைக் கொடுத்தால், குழந்தை அதை பிடித்துக்கொண்டே, விரல் சூப்பாமல் தூங்கிவிடும்.

3. குழந்தைகளின் விரல்களில் வேப்பெண்ணெய் தடவுதல், பேண்டேஜ் போடுதல் போன்ற வன்முறையான செயல்களைத் தயவு செய்து தவிர்த்து விடுவது நல்லது; ஏனெனில் இது உங்களுக்கும், குழந்தைக்கும் இடையே ஒருவித இடைவெளியை துவக்கத்திலேயே ஏற்படுத்திவிடும் வாய்ப்புண்டு.

மேலும் விரல் சூப்பும் குழந்தைகளிடம் அப்பழக்கத்தை மாற்றுவதற்காக, விரல்களில் சூடு போடுவது, குழந்தைகளை அடிப்பது போன்ற வன்முறையான, தவறான செயல்களில் ஈடுபடுவதை விட ஹோமியோபதி மருத்துவரிடம் அழைத்து சென்று மருத்துவ ஆலோசனை பெறுவது சாலச் சிறந்தது; இது அதிக வயதாகியும், அதிகம் விரல் சூப்பும் குழந்தைகளுக்கானது.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon