Link copied!
Sign in / Sign up
0
Shares

விரக்தியில் கண்ணாடியை உடைத்த மகன், தாய் என்ன செய்தார் தெரியுமா?

பிள்ளைகளுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டியது பெற்றோர்களே. அப்படி இருக்க, அவர்கள் கோபமாக இருக்கும் போது அதற்கு ஏற்று நாம் நடந்துக்கொள்வது தான் முறை. அதேபோல் உங்களுக்கு கோபம் வரும் நேரத்தில் அதை தன் பிள்ளைகளிடமிருந்து மறைப்பது அவர்கள் எதிர்க்காலத்தில் அமைதியுடன் விஷயங்களை கையாள பெரிதும் உதவக்கூடும்.

அப்படிப்பட்ட தாய்மைக்கு எடுத்துக்காட்டான ஒரு சம்பவத்தை கேத்லீன் பிளெமிங் என்பவர் தன் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.

நீங்கள் பார்க்கும் புகைப்படம் புதன்கிழமை எடுக்கப்பட்ட ஒன்று...

எங்கே பார்த்தாலும் கண்ணாடி தெறிப்பு, கூர்மையான கண்ணாடிகள் கால்களை பதம் பார்க்க காத்திருந்தது.

துரோகி ஒருவன் வீட்டில் நுழைந்து தன் ஆத்திரத்தை காட்டினால்... எப்படி இருக்கும்? அப்படி ஒரு கொடூர தாக்குதல்.

செய்தது வேறு யாருமல்ல, என் மகன் தான்...

ஒருசில சமயத்தில் ஈடுசெய்யக்கூடிய பொருள் இழப்பால், இழந்ததை நம்மால் மீட்க முடியும். அதுபோல் ஒரு சம்பவம் தான் அதுவும்...

என் மகன் குளியலறை கண்ணாடியை, ஆத்திரத்துடன் உடைத்திருக்கிறான். கண்ணாடிகள் எங்கும் சிதற, எனக்கு ஓர் பயம் ஏற்பட்டது. ஆம், கண்ணாடியே, இப்படி சிதறி இருந்தால்...என் மகனின் கைகள் எப்படி இருக்கும்?

இந்த கண்ணாடி இழப்பை என்னால் சரி செய்ய முடியும். ஆனால், இந்த விரக்திக்கு காரணமான என் மகனின் மனதை எப்படி சரி செய்ய போகிறேன் என யோசித்தேன். இருப்பினும், என்னால் அழாமல் இருக்க முடியவில்லை. என் வீட்டு செல்ல பிராணிகளை மெல்ல வீட்டின் வெளியில் விட்டு, நான் என் வீட்டின் பின்புறம் சென்றேன். தனியாக அழுதேன். அப்போதுதான் தனிமையின் கடினம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 

என் மகன் குளியலறை உள்ளே அழுதுக்கொண்டிருந்த ஒலி ஜன்னல் வழியாக கேட்டது. எனக்கு அவன் அழும் குரலை கேட்க ஆற்றல் இல்லை.

அவன் மனது வெறுக்கப்பட்டு வேதனை அடைந்துக்கொண்டிருக்கிறது என்பதை புரிந்துக்கொண்டேன். நான் அழைத்திடாத அழையா விருந்தாளிகளான...

பயம், வெட்கம், கவலை எல்லாம் அவனை விரக்தியில் தள்ளியிருப்பதை நான் புரிந்துக்கொண்டேன்.

எனக்குள் நானே பேசிக்கொண்டேன். "நான் தான் அவன் தாய். அவன் விரக்திக்கு நான் முற்றுப்புள்ளி வைக்காமல், வேறு யார் வைப்பார்கள்? என்னால் முடிந்தவரை அவன் செயலை ஏற்றுக்கொண்டு, அதற்கான தீர்வை தர வேண்டும். நான் இப்போது செல்ல வேண்டும். நான் அவனுடன் இருந்தால், அவன் கோபம் குறையும்..." என நம்பி நான் அவனை நோக்கி மெல்ல சென்றேன்.

அங்கே உடைந்திருந்த கண்ணாடி துண்டுகளை மெல்ல என் கைகளால் எடுத்தேன். அவன் என்னை பார்த்தான். என்ன நினைத்தானோ, என் மடியை தேடி ஓடி வந்து சரணடைந்தான். என்னை மன்னித்துவிடுங்கள் அம்மா, இனிமேல் இவ்வாறு செய்ய மாட்டேன் என கதறி அழுதான். அவனை கட்டி அணைத்து என் மனதில் இருந்த காதலை வெளிப்படுத்தினேன்.

"நான் உன் மீது அன்பு வைத்திருக்கிறேன் என் ஆசை மகனே. நீ பாதுகாப்பான இடத்தில் இருக்கிறாய். உன் கவலைகள் எல்லாம் என் மடியில் இறக்கப்பட்டுவிட்டது. நான் எப்போதும் உன்னுடன் தான் இருப்பேன். உன் எல்லா இன்ப/துன்பங்களிலும்..." என நான் கூற, அவன் ஆற்றல் பெற்ற உணர்வை..அவன் கண்கள் கொண்டு என்னிடம் வெளிப்படுத்தினான்.

இனிமேல் நான் இப்படி நடந்துக்கொள்ள மாட்டேன் அம்மா என்றான் என் மகன். அவன் சொல்லிய வார்த்தைகள் இதழிலிருந்து வரவில்லை. இதயத்திலிருந்து வருகிறது என்பதை நானும் புரிந்துகொண்டேன்.

ஒருவேளை, அவன் கண்ணாடியை உடைத்ததால்... கோபத்துடன் நானும் ஏதாவது சொல்லி இருந்தால் என்ன ஆகி இருக்கும்? உடைந்த கண்ணாடியால் தன்னை அவன் என்ன வேண்டுமென்றாலும் செய்துக்கொள்ளலாம்... இப்போது, எனக்கு துணையாக அவனும் என்னுடன் சேர்ந்து கண்ணாடியை சுத்தம் செய்கிறான். 

இந்த கண்ணாடி துகள்களோடு அவன் கோபம், கவலை, பதட்டம், பயம் எல்லாம் போகுமென நானும் நம்புகிறேன்.

இதுதான் அந்த தாயின் செயல். இப்போது சொல்லுங்கள்... நீங்களாக இருந்திருந்தால் என்ன செய்து இருப்பீர்கள்?

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon