Link copied!
Sign in / Sign up
1
Shares

வீடியோ கேம்களால் குழந்தைகளுக்கு மனநல பாதிப்பா??

இன்றைய கால சிறுவர்கள் சந்தோஷமாக பொழுது போக்குவதற்காக வீடியோ கேம் விளையாடுகிறார்கள்; குழந்தைகள் தங்கள் ஒவ்வொரு நாளின், பல மணி நேரத்தையும் வீடியோ கேம்கள் விளையாடுவதிலேயே செலவிடுகிறார்கள். அவர்கள் விளையாடும் விளையாட்டில் எப்படியாவது வெற்றியினை பெற்றுவிட வேண்டும் என்ற துடிப்பு குழந்தைகளிடம் அதிகம் காணப்படுகிறது, இது தவறில்லை.    

ஆனால், அதுவே எதிர்மறை விளைவுகளை குழந்தைகளின் மனதில் ஏற்படுத்திவிடக்கூடாது. ஏனெனில் இஇன்றைய கால வீடியோ கேம் விளையாட்டுகளின் முடிவு பெரும்பாலும் சிறுவர்களின் மனநலனை பாதிக்கும் அம்சங்களைக் கொண்டிருக்கிறது; குழந்தைகள் விளையாடுகையில், அந்த விளையாட்டில் பல்வேறு தடைகளைக் கடந்து வெற்றி பெற வேண்டியிருக்கும்; இது குழந்தைகளிடத்தில் தன்னம்பிக்கையை அதிகப்படுத்தும்.

அதே நேரத்தில், விளையாட்டின் இறுதிகட்டத்தை நெருங்குகையில், குழந்தைகள் தோல்வியை சந்திக்கையில் அது அவர்களின் மனதை வெகுவாக பாதிப்புக்குள்ளாக்கிவிடுகிறது. அதே போல் குழந்தைகள், தொடக்கம் முதலே தொடர் தோல்விகளை சந்திக்கும்போது தடுமாற்றம் ஏற்பட்டு, ரிமோட்டின் கட்டுப்பாட்டில் மனம் இயங்கும் சூழல் உருவாகி விடுகிறது. 

தவறான பாதை!

பெரும்பாலான வீடியோ கேம்கள், கேமின் நாயகன் எப்படி பிரச்சினையிலிருந்து தப்பிக்கிறான் என்பதை சித்தரித்து காட்டும் விதத்திலேயே வடிவமைக்கப்பட்டிருக்கின்றன; அந்த நாயகன் பிரச்சினையிலிருந்து மீள்வதற்கு குறுக்கு வழிகளை கையாளும் விதங்களையும், வித்தைகளையும் வீடியோ கேம்கள் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கின்றன.

இந்த விஷயங்கள் குழந்தைகள் மனதில் பல விபரீத எண்ணங்களை விதைத்து, வெற்றி பெறுவதற்கு எது வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற தவறான சிந்தனையும் அவர்களின் மனதில் மேலோங்கிவிடும்; இது குழந்தைகள் தீய பழக்கங்களை கற்றுக்கொள்வதற்கு அச்சாரமிடக்கூடும். மேலும் சில வீடியோ கேம்கள் கொள்ளை, கொலை, தற்கொலை போன்ற சம்பவங்களை சித்தரிக்கும் வகையான பின்னணிகளைக் கொண்டிருக்கின்றன. இவை மேற்கூறிய குற்ற செயல்களிலிருந்து தப்பிக்க தவறான வழிமுறைகளையும் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுத்து, அவர்களை தவறான பாதையில் வழிநடத்துகின்றன.

மூளையில் பாதிப்பு!

தொடர்ந்து வீடியோ கேம் விளையாடும் குழந்தைகளின் மூளையின் செயல்திறன் பாதிப்புக்கு உள்ளாகும்; இதனால், குழந்தைகளுக்கு படிப்பில் கவனம் குறையும். குழந்தைகள், தம் பெற்றோர்களுடன் செலவிடும் நேரம் குறைந்து, வீடியோ கேம் விளையாட்டுக்குள்ளேயே தங்கள் வாழ்வை முடக்கி, முடிந்து போய்விடுவார்கள்; இது அவர்களில் மன அழுத்த பிரச்சனையையும் உருவாக்கிவிடும்.

நீங்களே! தேர்வு செய்து அளியுங்கள்..

வீடியோ கேம் விளையாடுவதில் விடாப்பிடியாக இருக்கும் சிறுவர்களிடம் அதிரடியான போக்கைக் கையாண்டு அதிலிருந்து அவர்களை மீளவைக்க முயற்சிக்காதீர்கள், பெற்றோர்களே! குழந்தைகள் வீடியோ கேம் விளையாட்டில் மிகத்தீவிரமாக இருந்தால், அவர்கள் விளையாட வேண்டிய விளையாட்டை நீங்களே, குழந்தைகளுக்கு தேர்வு செய்து கொடுங்கள்; நீங்கள் தேர்வு செய்து அளிக்கும் விளையாட்டில் எந்தவித தவறான விஷயங்களும் இல்லை என்பதை தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள். 

சில சமயங்களில், உங்களின் ஓய்வு நேரத்தில் பிள்ளைகளுடன் சேர்ந்து நீங்களும் கேம் விளையாடுங்கள்; விளையாட்டில் தவறான வழிமுறைகள் ஏதேனும் சொல்லப்பட்டிருந்தால் அதனை குழந்தைகளுக்கு சுட்டிக்காட்டுங்கள்.

குழந்தையை மீட்கும் வழி!

குழந்தை தொடர்ந்து கேம் விளையாட ஆசைப்பட்டால் அதிலிருந்து குழந்தை மீள்வதற்கான சில கட்டுப்பாட்டுகளை விதியுங்கள்; அதனை குழந்தைகள் செயல்படுத்துகிறார்களா? என்பதை கண்காணித்துக் கொண்டே இருங்கள். குழந்தைகள் வீட்டை விட்டு வெளியேறி, வெளி இடங்களுக்கு சென்று மற்ற சிறுவர்களுடன் விளையாடுவதற்கு குழந்தைகளை தூண்டுங்கள்; ஊக்கப்படுத்துங்கள். பெற்றோரான நீங்களும் குழந்தையாக மாறி, அவர்களுடன் இணைந்து விளையாடுங்கள்; இத்தகைய செயல்பாடுகள், குழந்தைகளை படிப்படியாக வீடியோ கேம் மோகத்திலிருந்து மீட்டெடுக்க உதவும்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon