Link copied!
Sign in / Sign up
1
Shares

வெயிற்காலத்தில் கட்டாயம் தவிர்க்க வேண்டிய 10 உணவுகள்..!

வெயில் மக்களை வாட்டி வதைக்கும் கோடை காலத்தில், அதாவது வெயிற்காலத்தில் நாம் உண்ணும் உணவுகளை மிகவும் கவனத்துடன் தேர்வு செய்து உண்ணுதல் வேண்டும்; எவ்வாறு மழைக்காலத்தில் நாம் நோய்தொற்றுகளுக்கு உள்ளாகிறோமோ அதேபோல், வெயிற்காலத்திலும் நமக்கு உடல் உபாதைகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே, வெயிலின் கொடுமையிலிருந்து நம்மை காக்க, உடலில் நோய்த்தொற்றுகள் ஏற்படுவதிலிருந்து காக்க நாம் வெயிற்காலத்தில் தவிர்க்க வேண்டிய சில உணவுப்பொருட்கள், காய்கள், பழங்கள் குறித்து இந்த பதிப்பில் படித்தறிவோம்..!!

1.வெயிற்காலத்தில் புளிப்பு, உப்பு, காரம் நிறைந்த உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது

2. மசாலா பொருட்களான பட்டை, மிளகு, இலவங்கம் போன்ற பொருட்கள் அதிகமுள்ள உணவுகள் உண்பதை குறைத்தல் நல்லது

3. எண்ணெய்ப் பலகாரங்கள் சாப்பிடுவதை மற்றும் காபி, தேநீர் குடிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும் 

4. சர்க்கரை மற்றும் கிரீம் அதிகமுள்ள இனிப்பு பண்டங்கள், பலகாரங்கள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது

5. குளிர்ச்சியான குளிர்பானங்கள் மற்றும் ஐஸ் தண்ணீரில் உள்ள குளிர்ச்சி, இரத்தக் குழாய்களை சுருக்கி, உடலின் வெப்பத்தை மேலும் அதிகமாக்கிவிடுகிறது; மேலும் அதிகளவில் சிறுநீரை வெளியேற்றிவிடும்; ஆகவே, கோடையில் ஐஸ் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை தவிர்த்து பழச்சாறுகள், இளநீர் போன்றவற்றை பருக வேண்டும்

6. வெயில் காலத்தில் கத்திரிக்காய், கிழங்கு வகை மற்றும் மாவு வகை உணவுகளை அடிக்கடி உண்பதை தவிர்க்க வேண்டும்

7. பயிறு, எள்ளு, ராகி, அதிக மைதா உணவுகள், வேர்க்கடலை போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்த்தல் வேண்டும்

8. அன்றாடம் நாம் சாப்பிடும் பால் பொருட்களான சீஸ், பால், தயிர் போன்றவை உடல் வெப்பத்தை அதிரிக்கும் தன்மை கொண்டவை; எனவே, இவற்றை கோடையில் அளவாக சாப்பிடுவது நல்லது

9. கோடை காலத்தில் நண்டு, சிக்கன், இறால் போன்ற அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது; ஏனெனில் அவை சில சமயங்களில் சூட்டை கிளப்பி, வயிற்றுப் போக்கை உண்டாக்கி, உடலிலிருந்து நீரை வெளியேற்றிவிடும் வாய்ப்புள்ளது

10. உலர் பழங்கள் மிகவும் ஆரோக்கியமானவை தான்; ஆனால், அதில் உடலை வெப்பப்படுத்தும் தன்மையும் அதிகமுள்ளது; எனவே, இதனை கோடை காலத்தில், அளவாக சாப்பிட வேண்டும்

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon