Link copied!
Sign in / Sign up
1
Shares

வெண்ணைப்பழத்தின் நன்மைகள்!

வெண்ணைப்பழத்தில் பல மருத்துவ நன்மைகள் உள்ளன. பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு சிறந்த உணவு பொருள் என்றே இதை சொல்லலாம். அதிலும் இதை பச்சையாக சாப்பிடலாம் என்பது கூடுதல் சிறப்பு.

வெண்ணைப்பழத்தின் சில நன்மைகளை இப்போது பார்க்கலாம்.

1) எலும்புகளின் வலு:

வெண்ணைப்பழத்தில் கரோடினோய்ட்கள் உள்ளன. உதாரணமாக ஸிஅக்ஸான்தின் மற்றும் லூடின் உள்ளது. இவை தசைநார் குறைபாடுகளின் அபாயத்தை குறைக்கிறது. மேலும், துத்தநாகம், பாஸ்பரஸ், தாமிரம் மற்றும் கால்சியம் மற்றும் செலினியம் போன்ற அடிப்படைத் தாதுக்களின் அளவுகள், வெண்ணைப்பழத்தில் குறிப்பிடத்தக்க அளவு உள்ளது. இவை ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் எலும்புகளின் அடர்த்தி குறைவது போன்ற பிரச்சனைகளை தடுக்கிறது.

2) வைட்டமின் கே குறைபாடு:

வைட்டமின் கே குறைபாடு அதிகளவில் குழந்தைகளிடம் காணப்படுகிறது. இது ரத்தப்போக்கு கோளாறை உண்டாக்கும். கர்ப்பகாலத்தில் போதுமான அளவு வைட்டமின் கே சாப்பிடாதே இக்குறைபாடிற்கு காரணம். வெண்ணைப்பழத்தில் அதிகளவு வைட்டமின் கே அடங்கியுள்ளது. எனவே, கர்ப்பமான பெண்கள் வெண்ணைப்பழத்தை சாப்பிட்டால், குழந்தைகளுக்கு ரத்தப்போக்கு குறைபாடு ஏற்படாமல் இருக்கும்.

3) பல் பராமரிப்பு:

வெண்ணைப்பழம் சாப்பிடுவதால் வாய் துர்நாற்றம் ஏற்படாமல் இருக்கும். வாய் துர்நாற்றம் வயிற்றில் உண்டாகும் எரிச்சலால் ஏற்படுகிறது. பாக்டீரியா மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு சக்திகளை கொண்டுள்ள வெண்ணைப்பழத்தை சாப்பிடுவதன் மூலம் இந்த பிரச்சனையை சரி செய்ய முடியும். இதனால் வாய் துர்நாற்றமும் ஏற்படாது.

4) செரிமானம்:

உணவை பதப்படுத்துவதிலும், செரிமானத்திற்கும் வெண்ணைப்பழம் உதவுகிறது. செரிமானம் எளிதாக இருப்பதற்கு சில சால்வெண்ட்கள் வெண்ணைப்பழத்தில் உள்ளது. இதில் உள்ள ஒரு நார்ச்சத்து தினசரி வயிற்றுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளிக்கிறது.

5) ஆரோக்கியமான சருமம்:

வெண்ணைப்பழத்தில் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. புற ஊதா கதிர்களில் இருந்து சருமத்தை காப்பாற்ற உதவும் கரோட்டீனாய்டுகள் இதில் உள்ளன. சூரிய கதிர்களால் ஏற்படும் காயங்களை ஆற்றவும் இது உதவுகிறது.

6) இளமையாக இருக்க:

வெண்ணைப்பழத்தை தினமும் உட்கொண்டால், வயதானாலும் இளமையாக காட்சிதருவீர்கள். புற்றுநோயை தடுக்கும் சாந்தோபில் கொண்டுள்ளது. மேலும், சாந்தோபில் வயதாவதை தடுக்கும்.

7) காலை நோய்:

காலையில் தலைசுற்றல், வாந்தி, மயக்கம் ஆகியவை கர்ப்பமான பெண்களுக்கு ஏற்படும் ஒன்று.வெண்ணைப்பழத்தில் வைட்டமின் B6 உள்ளதால் வாந்தியை குறைக்கும்.

8) ஆரோக்கியமான இதயம்:

வெண்ணைப்பழத்தின் மற்றொரு பயன் என்னவென்றால் இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இதில் உள்ள பீட்டா-சிட்டோஸ்டிரால் கொழுப்புகளின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. மேலும், ஆய்வுகளில் இது atherosclerosis ஏற்படுவதை தடுக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. வெண்ணைப்பழத்தில் உள்ள அதிகளவு பொட்டாசியம் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவுகிறது. மேலும், பொட்டாசியம் களைப்பு, மாரடைப்பு, மற்றும் பக்கவாதம் ஆகியவற்றின் அபாயத்தை குறைக்கிறது.

9) மூட்டுவலி:

பைடோகெமிக்கல்கள், ஃபிளாவோனாய்டுகள், கரோட்டினாய்டுகள், பைட்டோஸ்டெரோல்ஸ், க்ரீஸ் ஆல்கஹால்ஸ் மற்றும் ஒமேகா -3 சீர்கெடாத கொழுப்பு ஆகியவை வெண்ணைப்பழத்தில் இருப்பதால் தசைகள், திசுக்கள், மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கிறது.

10) ஆரோக்கியமான கண்கள்:

வெண்ணைப்பழம் உங்கள் கண்களை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. மேலும், லுடீன் மற்றும் ஜியாக்சாமைன் போன்ற கரோட்டினாய்டுகளைக் கொண்டுள்ளதால், இது கண்புரை, கண்பார்வை குறைபாடுகளில் இருந்து உங்கள் கண்களை பாதுகாக்கிறது.

11) உடல் எடை:

தினசரி உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவு தான்

உடல் எடையை குறைக்க உதவும். வெண்ணைப்பழம் உங்களின் எடையை சீராக வைத்திருக்க உதவும்.

12) கல்லீரல் பராமரிப்பு:

கல்லீரல் சேதத்தை குறைக்க வெண்ணைப்பழம் உதவுகிறது. இதில் இருக்கும் இயற்கை பொருட்கள் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ஆய்வுகளில், வெண்ணைப்பழம் கல்லீரலை பல நிலைகளில் இருந்து பாதுகாக்கிறது என கண்டறிப்பட்டுள்ளது.

13) விளையாட்டு வீரர்களுக்கு பயனுள்ளது:

விளையாட்டு வீரர்களுக்கு ஒரு கணிசமான அளவு ஆற்றல் தேவை. அவர்களுக்கு தேவையான சத்துக்களையும் ஆரோக்கியத்தையும் வெண்ணைப்பழம் வழங்குகிறது. மேலும், இதிலுள்ள பைட்டோகெமிக்கல் உடலுக்கு தேவையான சக்தியை வழங்குகிறது.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon