Link copied!
Sign in / Sign up
23
Shares

வெளிச் சோதனை முறை கருவூட்டல் (IVF) - வீடியோ

குழந்தை பெற முடியாமல், குழந்தைக்கு ஏங்கி கொண்டிருக்கும் தம்பதிகளுக்கான சிறந்த சிகிச்சை முறை IVF. இங்கு சிகிச்சை முறை பற்றி தெளிவான வீடியோ பதிப்பு.

வெளிச் சோதனை முறை கருவூட்டல் (In Vitro Fertilization - IVF)

Video Credits : GRB Fertility Centre & Hospitals

இந்த வெளிச் சோதனை முறை கருவூட்டல் மிகவும் பரவலாக அறியப்படும் தொழில்நுட்பமாகும். முதிர்ச்சி அடைந்த கருமுட்டையானது பெண்ணின் கருப்பையிலிருந்து அகற்றப்பட்டு, வெளியே சோதனை அறையில் வைத்து, கணவரிடமிருந்து பெறப்படும் விந்துடன் கருவுறச் செய்து பின்னர், வளர ஆரம்பித்த உடன் கருப்பையினுள் வைக்கப்படும்.

சிறந்த முட்டைகளைப் பெறுவதற்காக ஆரம்பத்தில் முட்டை உருவாக்கத்தைத் தூண்டும் சிகிச்சை வழங்கப்படும்போது, சிலருக்கு அளவுக்கதிகமான தூண்டல் நிகழ்வதனால் சில பிரச்சனைகள் ஏற்படும். சூலகம் பெரிதாவதனால் வயிற்றில் வலி, குமட்டல், வாந்தி, பசியின்மை போன்ற அறிகுறிகள் தோன்றலாம். பொதுவாக இவை குறைந்தளவிலேயே இருப்பினும் 1 % ஆனவர்களில் தீவிரமான பிரச்சனையாக வரக் கூடும்.

விந்தணு செலுத்தும் சிகிச்சை (IUI)

க‌ணவனின் விந்தணுக்களை ஒரு குழாய் மூலமாக மனைவியின் கருப்பையினுள் செலுத்தி பெண்ணை கருவறச் செய்ய‍லாம் இந்த முறைக்கு ஆங்கிலத்தில் IUI என்பார்கள். இதற்காக கணவன் சுய இன்பத்தின் மூலம் பெறப்படும் விந்தணுக்களை சேகரித்து கொடுக்க, இது நேரடியாக கருப்பையினுள் குழாய் மூலம் மருத்துவர்களால் செலுத்தும் இந்த‌ முறை மூலம் குழந்தை உருவாகும் சந்தர்ப்பத்தை மேலும் அதிகரிக்க கணவனின் விந்தணுக்களை பதப்படுத்தப்பட்ட பின்பு செலுத்தப்படலாம். அதாவது அவரது ஆணுறுப்பில் இருந்து சுய இன்பம் மூலமாக வெளியேறும் திரவத்தில் உள்ள திறன் கூடிய விந்துகளை மட்டுமே பிரித்தனுப்புவதன் மூலம் குழந்தை உருவாகும் சந்தர்ப்பம் அதிகரிக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

பாலோப்பியன் குழாய் உள்ளான புணரி/பாலணு இடமாற்றம் (Gamete Intrafallopian Transfer - GIFT)

இம்முறையில் கருமுட்டை கருப்பையிலிருந்து அகற்றப்பட்டு, பின்னர் கருமுட்டையும், விந்தும் கருவுற செய்யப்படும் நோக்குடன் பாலோப்பியன் குழாயினுள் செலுத்தப்படும். உடலுக்கு வெளியே, சோதனை அறையில் வைத்துக் கருவுறுதலை தவிர்த்து, பாலணுக்களான கருமுட்டையும், விந்தும் உடலின் உள்ளேயே வைத்துக் கருவுற தூண்டப்படுவதனால், இது வெளிச் சோதனை முறை கருவுறும் முறையிலிருந்து வேறுபடுகின்றது.

பாலோப்பியன் குழாய் உள்ளான இருபாலணு இணைவுக்கரு இடமாற்றம் (Zygote Intrafallopian Transfer - ZIFT)

இங்கு கருமுட்டை அகற்றப்பட்டு, உடலுக்கு வெளியே, சோதனை அறையில் வைத்து விந்துடன் கருவுற செய்யப்பட்டு, முளைய விருத்திக்கு முன்னராகவே, அதாவது கருவணுக் கலமாகவே (zygote) பாலோப்பியன் குழாயினுள் செலுத்தப்படும்.

குழியமுதலுரு உள்ளான விந்து உட்செலுத்தல் (Intracytoplasmic Sperm Injection - ICSI)

இந்த முறையும் தற்போது பிரபலமடைந்து வருகின்றது. இங்கே முதிர்ந்த கருமுட்டையானது பெறப்பட்டு, அதனுள் வளமான ஒரு விந்து நேரடியாகச் செலுத்தப்பட்டு, கருவுற செய்து, பின்னர் முளையமானது கருப்பையினுள் வைக்கப்படும்.

இவைதவிர, இம்முறைகளிலிருந்து சில மாற்றங்களுடன் செய்யப்படக் கூடிய வேறு சில முறைகளும் உள்ளன.

 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon