Link copied!
Sign in / Sign up
6
Shares

வேலைக்குச் செல்லும் பெண்கள் வாழ்வின் சமநிலை..!

பொதுவாக அம்மாக்கள் என்றாலே அதிக பொறுப்பானவர்கள்; பொறுமைசாலிகள். எவ்வளவு வயதானாலும் அம்மாவின் பொறுப்புகளும் பணிகளும் மட்டும் மாறுவதேயில்லை. வேலைக்குச் செல்லும் அம்மாக்கள், தாங்கள் செய்யும் பணியையும், தன் வீட்டு சூழ்நிலையையும், குழந்தையையும் எதிலும் குறை ஏற்படாது சமாளிக்க வேண்டியுள்ளது. அவர்கள் வாழ்வின் சமநிலை எப்படி இருக்கும் என்று இப்பதிப்பில் காணலாம்.

வேலைக்குச் செல்லும் பெண்கள், வேலையோடு சேர்த்து, தாங்கள் மேற்கொண்ட வாழ்க்கையையும் சமநிலையோடு கையாள வேண்டிய நிலையில் உள்ளனர். வேலைக்குச் செல்லும் இடங்களில், எவ்வளவு பிரச்சனைகள் ஏற்பட்டாலும், மன உளைச்சலுக்கு ஆளானாலும் அவற்றை அங்கேயே விட்டுவிட்டு, வீட்டில் வந்து தனது குடும்பத்தின் தேவையையும், தன் குழந்தையின் வளர்ச்சியையும், அதன் படிப்பையும் கவனிக்க வேண்டியுள்ளது.

பெண்கள் வேலைக்கு சென்று விடுவதால், தங்கள் குழந்தைக்கு உணவு ஊட்டுவது, அதன் தேவைகளை கவனிப்பது, அதற்கு கற்றுக் கொடுப்பது என தாயின் கடமைகளை கவனிக்க நேரம் இல்லாது, இவர்கள் வேறு வேலைக்கு சென்று, தன் வீட்டில் வேலைக்கு ஆள் வைக்கும் நிலை உருவாகிறது. இதனால், வீட்டில் எப்பொழுது, என்ன நடக்கிறதென்பதை ஒரு மூன்றாம் நபர் மூலம் அறிய நேரிடுகிறது.

குழந்தையின் மீது எவ்வளவு தான் பாசம் கொண்டாலும், அதைக் காட்டி வளர்க்க அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை. சில சமயங்களில், வேலைக்கு செல்வதால், சொந்த பந்தங்களுடன் நேரம் செலவழிக்க இயலாமை, நண்பர்களுடன் நேரம் செலவழிக்க இயலாமை, விழாக்களுக்கு செல்ல இயலாமை என பல விஷயங்களை இழக்கிறாள்.

சில பெண்களோ வெளியிலும் வேலை செய்து, வீட்டிலும் வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இச்சமயங்களில், பெண்கள் தங்களைத் தானே கூட கவனித்துக் கொள்ள மறந்து எல்லா இடங்களிலும், வேலையையே செய்து கொண்டிருப்பர்.

வேலைக்குச் செல்லும் பெண்களே! சிந்தியுங்கள் உங்கள் வாழ்வில் சமநிலை உள்ளதா..?? உங்கள் வாழ்வில் சமநிலையைக் கொண்டு வர உங்களால் இயலாதா? ஓடி ஓடி உழைத்து, எதிர்காலத்தை காக்கிறேன் என்ற பெயரில், நிகழ்காலத்தை விட்டுவிடாதீர்கள்.. உங்கள் வாழ்வில் நடக்கும் எந்தவொரு செயலும், உங்கள் கையிலே!

அதனால், வேலைக்குச் சென்றாலும், வேலையில் உங்கள் முழுத்திறனையும் காட்டி, முன்னேறுங்கள்; அதேசமயம் வீட்டையும் அதேயளவு திறனுடனும், தாய்மைக்கான மற்றும் வீட்டுத் தலைவிக்கான பாசத்துடனும், பண்புடனும் வழிநடத்தி, வாழ்வில் வெற்றி காணுங்கள்..

பெண்களே! உங்களை விட வேறு எவராலும், இத்தனை வேலைகளையும் ஒருசேர செய்ய இயலாது; உங்கள் இடத்தை வெளியில் வேண்டுமானால் யாரேனும் நிரப்பலாம்; ஆனால், வீட்டில் உங்களுக்கு நிகர் நீங்களே! பெருமிதம் கொள்ளுங்கள் உங்களை எண்ணி…! பெருமை அடையுங்கள் நீங்கள் செய்யும் செயல்களை எண்ணி..!!

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

Recently, we launched a baby-safe, natural and toxin-free floor cleaner. Recommended by moms and doctors all over India, this floor-cleaner liquid gets rid of germs and stains without adding harmful toxins to the floor. Click here to buy it and let us know if you liked it.

Stay tuned for our future product launches - we plan to launch a range of homecare products that will keep your little explorer healthy, safe and happy!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon