Link copied!
Sign in / Sign up
1
Shares

வீட்டின் தரை, கீறல்களில்லாமல் பளபளக்க..!!

இல்லத்தரசியோ, வேலைக்குச் செல்லும் பெண்ணோ யாராயினும் தான் இருக்கும் வீட்டையும், குடும்பத்தையும் குழந்தையையும் இமைக்குள் வைத்து காக்க வேண்டியது அவர்களின் கடமையாகும். மேலும் பெண்கள் அனைவர்க்கும் தங்கள் இல்லம் அழகாக பொலிவுடன் விளங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். வீட்டின் தரையை என்னவெல்லாமோ முயன்று பளபளப்பாக்க முயற்சி செய்வர். நீங்களும் கூட அப்படி முயற்சித்திருக்கலாம்.. என்ன முயன்றும் தரையின் அழுக்கு மற்றும் கறை போகவில்லை என்ற கவலையா? கவலையை விடுங்கள்..! உங்கள் கவலையை போக்கும் வகையிலேயே இந்த பதிப்பு..! படித்து  பயனடையுங்கள்..! 

கீறல்கள் மறைய

தரையிலுள்ள கீறல்கள் மறைய ஒரு கரண்டி பேக்கிங் பொடி கலந்த நீரினை ஒரு வாளி நிறைய எடுத்து கொள்ளுங்கள். அதனில் வெள்ளைத்துணியை நனைத்து பின்னர் பிழிந்தெடுத்து, கீறல்கள் உள்ள இடத்தில் நன்றாக அழுத்தித் தேய்த்து விடவும். காய்ந்த பின் பார்த்தால், கீறல் விழுந்த தடமேயில்லாமல் போய்விடும்.

வினைல் தளம்

இவ்வகை தளத்தில், பேக்கிங் பொடியை சிறிதளவு எடுத்து தரையில் தூவி விடவும். கறைபடிந்த தரையை, துணியை வினிகரில் நனைத்த பின்னர், அழுத்தி துடைக்கவும். அதன்பின் தூய நீரில் துணியை நனைத்து பிழிந்து தரையை சுத்தம் செய்யவும்; இவ்வாறு செய்வதால், வினிகரின் மணம் வீடு முழுதும் பரவாமல் தடுக்கப்படும்.

காங்கிரீட் தளம்

வீரியமிக்க டிடர்ஜென்ட் பொடி கலந்த நீரை காங்கிரீட் தரையில் சில துளிகள் இட்டு, தரையை பிரஷால் அழுத்தித் துடைத்து விட்டு, பஞ்சை வைத்து ஈரமான தரையை துடைத்தெடுக்கவும். இத்தளத்தில் எண்ணெய் பிசுக்குகள் இருப்பின், கறை படிந்த இடங்களில் ஆல்கலின் சோப் கொண்டு, அழுத்தமாக தேய்த்து கழுவி விடவும்.

 

மார்பிள் தளம்

பேக்கிங் சோடா பசையை எடுத்து, ஊற வைத்த துணியால், தரை முழுதும் தேய்த்து விடவும்; பின் உலர்ந்த துணியைக் கொண்டு சுத்தமாக துடைத்து விடவும். இப்போது கறை படிந்த தரை, சுத்தமாக பளிச்சென்று இருக்கும்.

பிசுக்குளை நீக்க

சொர சொரப்பான தரையில் படிந்து உள்ள எண்ணெய் பிசுக்குகள் போன்ற கறையைப் போக்க ஐஸ்கட்டி உடன் மென்மையான பஞ்சைக் கொண்டு சுத்தம் செய்யவும். இது தரையைக் குளுமைப்படுத்துவதோடு மட்டுமின்றி 'பளிச்' என பளபளக்கச் செய்யும்; வீட்டின் தரையை அடிக்கடி நேரம் கிடைக்கையில் துடைத்துக் கொண்டே இருப்பது நல்லது.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon