Link copied!
Sign in / Sign up
1
Shares

வீட்டிற்கு எந்த நிறத்தை எங்கே தீட்ட வேண்டும்?

வீடு கட்டுவது என்பது நீங்கள் வாழ மட்டும் வழிவகை செய்வதல்ல. நாம் எங்கு இருந்தாலும், நம்முடைய பிள்ளைகளாவது நம் வீட்டை கட்டி காப்பாற்ற வேண்டுமெனவே ஆசைப்படுவார்கள். ஒருசிலர், எவ்வளவு செலவு ஆனாலும், வீட்டை விற்க மட்டும் முன்வரமாட்டார்கள். "இது என் அப்பா வாழ்ந்த வீடு...தாத்தா ஆசையாக கட்டிய வீடு..." என காரணம் கூறி, வேறு மாதிரி தன் தேவையை பூர்த்தி செய்துக்கொள்வார்கள். அப்படிப்பட்ட வீட்டில் நாம் மட்டுமா வாழ்கிறோம். நல்ல எண்ணங்களும், அந்த எண்ணங்களுக்கு தேவையான நிறங்களும் வாழ்ந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? யோசித்து பாருங்கள்...

அப்படி உங்கள் வீட்டை அழகுபடுத்தும், அமைதிப்படுத்தும் 12 நிறங்களை தான் நாம் இப்போது பார்க்க போகிறோம்.

ஆரஞ்சு:

இந்த துடிப்பான ஆரஞ்சு நிறம், தன்னம்பிக்கையை தரக்கூடியது. இந்த ஆரஞ்சு நிறத்தை ஒருவர் பார்ப்பதால், அவர் மனதில் சிறகு விரித்து பறவையாய் பறக்கக்கூடும். அவ்வளவு ஆனந்தம் தரும் அற்புத நிறம் தான் இந்த ஆரஞ்சு. உங்கள் அலுவலக வேலைகளுக்கு பயன்படுத்தும் சுட்டெலிக்கான தேய்ப்பானை, நீங்கள் இந்த ஆரஞ்சு நிறத்தில் பயன்படுத்துவதன் மூலமாக மன உலைச்சல் என்பது குறையக்கூடும்.

கரு நீலம்:

ஒருவருடைய ஆற்றலை பல மடங்கு பெருக்க, இந்த கருநீலம் தேவைப்படுகிறது. உங்கள் என்ன ஓட்டமானது தெளிவுடன் இருக்க, உங்கள் வாழ்க்கையின் முடிவுகளை எடுக்கும் தருணத்திலும், ஒருவேலையை செய்வதற்கான ஆற்றலையும் தரவல்லது இந்த கரு நீலம். 

பச்சை:

இந்த பச்சை வண்ணத்தை பிரதிபலிக்கும் ஒன்று தான் கிராமத்து பசுமை என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். இயற்கையின் முன்மாதிரி நிறம் பச்சை தான். எந்த ஒரு விஷயத்தையும் ஆரம்பிக்கும்போது பச்சை நிறத்தை பார்த்து செல்வது நல்லது. அதனால், நீங்கள் அமரும் நாற்காலி, டேபிள் போன்றவற்றில் அழகிய பச்சை நிறம் தீட்டி மனமகிழலாம்.

மேலும், உங்களுக்கு தேவையான உடல் ஆரோக்கியத்தையும் தர, இந்த பச்சை வண்ணம் வழிவகை செய்யும். பச்சை நிற பானை, சமையல் பாத்திரங்கள் மற்றும் குளியலுக்கான டவல்கூட பச்சை நிறத்தில் நாம் பயன்படுத்தலாம்.

லேசான ஊதா:

இந்த ஊதா நிறம் உணர்வு பூர்வம் வாய்ந்ததும் கூட... இந்த ஊதா நிறத்தை வீட்டில் தீட்டுவதால் தேவையான மன அமைதியானது உங்களுக்கு கிடைக்கக்கூடும். எனவே ஊதா நிறம், ஆன்மீகத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஏற்ற நிறமும் கூட என்பது குறிப்பிடத்தக்கது.

லேசான நீலம்:

இதுவும் உங்களிடம் இருக்கும் கவலையை கலைத்து மன அமைதியை தரக்கூடிய ஒரு நிறமாகும். இந்த லேசான நீல நிறமானது வீட்டில் நல்லிணக்கத்தை வளர செய்கிறது. உங்கள் வீட்டின் உச்சப்பகுதியை லேசான நீலம் கொண்டு பூசிடலாம்.

பிரகாசமான சிவப்பு

இது உங்களுக்கு தைரியத்தை தருவதோடு மனதில் எழும் அச்சத்தையும் போக்க வல்ல நிறமாகும். உங்களுக்கு தன்னம்பிக்கை பெருக வேண்டுமென்றால், சிவப்பு நிறம் அதற்கு உதவக்கூடும். ஆனால், அதிகளவிலான சிவப்பு நிறத்தை பயன்படுத்தினால்... கிளர்ச்சி உங்கள் மனதில் எழக்கூடும் என்பதை புரிந்து செயல்பட வேண்டும். உங்கள் வீட்டின் தலையணை, போர்வை, ஆகியவற்றை லேசான சிவப்பு கட்டம் போட்டவாறு வாங்குவது நல்லது.

மஞ்சள்:

பொதுவாக மஞ்சள் நிறம் என்பது கவனிக்க தூண்டும் வண்ணம் என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். ஓர் இடத்தில் எத்தனை நிறம் இருந்தாலும்... அதை கடந்து நம் கண்கள் என்றுமே மஞ்சள் நிறத்தையே பார்க்க ஆசைப்படும். இந்த மஞ்சள் நிறத்தை வீட்டில் தீட்டுவதால், உற்றுநோக்கும் உணர்வு என்பது உங்களுக்குள் அதிகரிக்கக்கூடும். நீங்கள் பயன்படுத்தும் பேனா, பென்சில் முதலியவற்றை மஞ்சள் நிறத்தில் பயன்படுத்தலாம்.

இளஞ்சிவப்பு:

இதயம் வரைந்தால் இறுதியில் ஏன் எல்லோரும் இளஞ்சிவப்பு நிறத்தையே தீட்டுகின்றனர். யாராவது யோசித்து இருக்கிறீர்களா? ஏனெனில், இளஞ்சிவப்பு என்பதற்கு ஒருவரின் மனதை கவரும் சக்தி என்பது மிகவும் அதிகம். உங்கள் கணவன் - மனைவியுடன் பேசும்போது... இந்த இளஞ்சிவப்பு நிறம் என்பது உங்களுக்கு காதலை பெரிதும் மலர செய்யும்.

கருஞ்சிவப்பு:

ஆண்மையை தூண்டும் நிறம் தான் கருஞ்சிவப்பு. உங்கள் மனம் கவர்ந்த ஒருவருடன் பேசி, அவரை உங்களுடைய அன்பு வலையில் அழகிய கணவன் - மனைவியாய் விழ வைக்க கருஞ்சிவப்பு உகந்தது. 

அக்வா:

வாழ்க்கை பயணம் என்பது கடல் போன்றது. ஆனால், வாழ்க்கையில் ஏதாவது கவலை என்றால் உடனே ஏன் நாம் கடலுக்கு சென்று மணலை அள்ளி கைகளால் கொட்டியபடி நிற்கிறோம். காரணம், அக்வா நிறம் என்பது நம்பிக்கையை தரக்கூடியது. நீங்கள் தூங்கும் போதும்... கனவு காணும் போதும்... தியானம் செய்யும்போதும் இந்த நிறத்தை உங்கள் கூடவே வைத்துக்கொள்வது நலம்.  

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

Recently, we launched a baby-safe, natural and toxin-free floor cleaner. Recommended by moms and doctors all over India, this floor-cleaner liquid gets rid of germs and stains without adding harmful toxins to the floor. Click here to buy it and let us know if you liked it.

Stay tuned for our future product launches - we plan to launch a range of homecare products that will keep your little explorer healthy, safe and happy!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon