Link copied!
Sign in / Sign up
1
Shares

வீட்டில் இருக்கும் அம்மாக்கள் சொல்லும் கசப்பான 4 பொய்கள்

தாய்மை என்பது ஒரு அற்புதமான விஷயமாக இருந்தாலும், அது அவ்வளவு எளிதான காரியமும் அல்ல. தாய்மை என்பது எல்லா பெண்களும் விரும்பும் விஷயமாக இருந்தாலும், சில நேரங்களில் அது சுலபம் இல்லை என்று தோன்றும். அதிலும், வீட்டில் இருக்கும் அம்மாவாக இருந்தால் சொல்லவே வேண்டாம். வீட்டில் இருப்பதால் நன்றி உணர்வு இல்லாமையை சமாளிக்க வேண்டியது மட்டுமல்ல பல விஷயங்களை விட்டு கொடுத்து செல்ல வேண்டியிருக்கும். இது மட்டுமில்லாமல் இன்னும் சில விஷயங்களை சமாளிக்க வேண்டி இருக்கும். அவற்றை குறித்து இப்போது பார்க்கலாம்.

1 உங்களின் சுய மதிப்பை நிரூபிக்க வேண்டும்

உங்களின் மதிப்பை இந்த சமுதாயம் மற்றும் உங்களின் குடும்பத்தினரிடம் மட்டுமல்ல, உங்களிடமும் நீங்கள் நிரூபிக்க வேண்டும். என்ன தான் வெளியுலகிற்கு சென்றாலும், நீங்கள் பல விஷயங்களை சாதிக்க முடியும் என்றாலும், ஒவ்வொரு நாளும் நீங்கள் செய்யும் விஷயம் உங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தின் நன்மைக்கே என்று உங்களை நீங்களே சமாதானப்படுத்தி கொள்வீர்கள்.

2 உங்களை பற்றிய விளக்கம்

நீங்கள் என்றைக்காவது இந்த வரிகளை சொல்லியிருக்கிறீர்களா. " ஆம் நான் வீட்டில் தான் இருக்கின்றேன், ஆனால்....". இப்படி சொல்கிறீர்கள் என்றால், நீங்கள் உங்கள் மனசாட்சிக்கும் இந்த உலகத்திற்கும் உங்களை பற்றி விளக்கி கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். நீங்கள் வீட்டில் இருப்பதால், மற்றவர்கள் உங்களை மதிப்பீடு செய்வார்கள்; அதாவது நீங்கள் வீட்டில் இருப்பதால் எதுவும் செய்வதில்லை என்று உங்களுக்கு ஏற்படும் எண்ணத்தால் நீங்கள் ஊகிப்பவை தான் இவை. இந்த எண்ணங்கள் தான் மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும். எனவே, உங்களை பற்றிய விளக்கம் கொடுப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள்.

3 கச்சிதமான அம்மா

வீட்டில் இருப்பதால் பல தாய்மார்களுக்கு ஒரு பாதுகாப்பற்ற உணர்வு ஏற்படும். இதனால் தங்களுக்கு தானே சில சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். அதன் வெளிப்பாடாக பல விஷயங்களை சரியாக செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். இதனால் நீங்கள் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு நாளும் ஒரு விஷயத்தை செய்யும் போது அதை கச்சிதமாக செய்ய வேண்டும் என்று மற்றவர்களும் எதிர்பார்ப்பார்கள்.

4 அனைவரும் உங்களை கவனிக்கிறார்கள்

தாய்மை என்பது ஒரு நாடக மேடையோ, உங்களை சுற்றி உள்ளவர்கள் அதை வேடிக்கை பார்க்க வந்தவர்களும் கிடையாது. எல்லோரும் உங்களை மதிப்பீடு செய்வார்கள் என்ற எண்ணத்தில், நீங்கள் ஒரு தவறும் செய்து விடக்கூடாது என்று கவனமாக இருப்பீர்கள். இதனால் உங்களுக்கு தேவையில்லாத மனஅழுத்தம் ஏற்படும். இந்த எண்ணத்தை நிறுத்தினாலே, உங்கள் குழந்தைகளுக்கு சிறந்த தாயாக இருப்பீர்கள்.

உங்கள் குழந்தைக்கு ஏற்ற சிறந்த தாய் நீங்கள் தான். அதில் துளி அளவும் சந்தேகமில்லை. உங்களை தாயாக பெற்றதற்கு உங்கள் குழந்தை அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். எனவே, இதில் தேவையில்லாமல் கவலைப்பட்டு கொண்டிருக்க வேண்டாம். உங்களுக்கு நீங்களே பொய் சொல்வதை நிறுத்திவிட்டு, நீங்கள் நீங்களாகவே இருங்கள். 

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon