Link copied!
Sign in / Sign up
20
Shares

வேடிக்கையான வழிகளில் அதிகப்படியான கலோரிகளை எரிக்க

இன்றைய காலநிலை மாற்றம் மற்றும் சில காரணங்களால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்க கூடிய பிரச்சனைகளில் ஒன்று தான் உடல் எடை. இது அவர்களின் உணவில் இருக்கும் அதிகப்படியான கலோரிகள் மற்றும் துரித உணவுகளால் ஏற்படுகிறது. உடல் எடை அதிகமாக இருப்பவர்கள், எடுத்துக் கொள்ளும் கலோரிகளின் அளவில் கவனமாக இருக்க வேண்டும். மேலும் உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகளை குறைக்க தினமும் கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்களும் உண்டு. 

பலருக்கு கலோரிக்கும், எடைக்கும் என்ன சம்பந்தம் உள்ளது என்றே தெரியாது. பொதுவாக ஒரு நாளைக்கு ஒருவருக்கு சராசரியாக 1600 கலோரிகள் தேவைப்படுகிறது. கலோரிகளானது உடலுக்குள் செல்லும் போது ஆற்றலாக மாற்றப்படுகிறது. கலோரியானது உடலின் செயல்பாடுகளுக்கு அளவுக்கு அதிகமாக இருந்தால், மிஞ்சிய கலோரியானது கொழுப்புக்களாக உடலினுள் படிந்துவிடும். இதனால் தான் உடல் எடை அதிகரிக்கிறது.

ஆனால் இன்றைய காலத்தில் அதிகப்படியான வேலையால் உடற்பயிற்சி செய்வதற்கு கூட நேரம் இல்லாமல் போகிறது. இங்கு உடல் பயிற்சி இல்லாமல் உடலில் எஞ்சி இருக்கும் கலோரிகளை குறைப்பதற்கான வழிகளை பார்க்கலாம். இவை கொஞ்சம் முட்டாள்தனமானதாக தோன்றினாலும், உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகளை எளிதாக குறைத்து விடும்.

சிரிப்பு

நண்பர்களுடன் அமர்ந்து 15 நிமிடம் நகைச்சுவை பற்றி பேசி நன்கு வாய் விட்டு சிரித்தால், குறைந்தது 40 கலோரிகள் எரிக்கப்படுகிறது. தொலைக்காட்சியில் நகைச்சுவை காட்சிகள் பார்த்து வாய் விட்டு சிரித்தால், 20 கலோரிகள் குறையும்.

படுக்கை விளையாட்டு

துணையுடன் 30 நிமிடம் படுக்கையில் விளையாடினால் 200-க்கும் அதிகமாக கலோரிகள் குறைகிறது என்கிறது இது பற்றிய ஆய்வின் முடிவு.

முத்தம்

காதலுடன் காமம் கலந்த மனநிலையில் துணைக்கு ஒரு நிமிடம் உதட்டில் முத்தம் கொடுத்தால் 5 கலோரிகள் எரிக்கப்படும்.

சூயிங் கம்

உங்களுக்கு சூயிங் கம் மெல்லும் பழக்கம் இருந்தால், ஒரு மணிநேரம் சூயிங் கம் மென்றால் 11 கலோரிகளை எரிக்கிறது.

சாட்டிங்

தோழி அல்லது காதலியுடன் ஒரு மணிநேரம் தொடர்ந்து சாட்டிங் செய்தால், 40 கலோரிகள் எரிக்கப்படுமாம். எனவே உடற்பயிற்சி செய்யவில்லை என்று கவலைக் கொள்ளாதீர்கள்.

வாக்கிங்

தினமும் குழந்தைகள் அல்லது வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணியுடன் 1 மணிநேரம் வாக்கிங் மேற்கொண்டால், 200 கலோரிகளை எரிக்கலாம்.

கட்டிப்பிடி வைத்தியம்

உங்கள் துணையை 60 நிமிடங்கள் கட்டிப்பிடித்திருந்தால் 60 கலோரிகள் எரிக்கப்படும். எனவே அவ்வப்போது உங்கள் துணையுடன் கட்டிப்பிடி வைத்தியத்தை மேற்கொள்ளுங்கள்.

நடனம்

தினமும் 15 நிமிடம் நடனமாடினால், 75-க்கும் அதிகமான கலோரிகளை எரிக்கலாம். அதிலும் துணையுடன் சேர்ந்து ரொமான்டிக் நடனம் என்றால் இன்னும் அதிகமாக எரிக்கலாம்.

ஷாப்பிங்

ஷாப்பிங் செய்யும் போது, அங்குள்ள ட்ராலியை 30 நிமிடம் அங்கும் இங்கும் இழுத்து நடந்தால், 100-க்கும் அதிகமான அளவில் கலோரிகளை எரிக்கலாமாம்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon