Link copied!
Sign in / Sign up
3
Shares

வயிற்று வலிக்கான வீட்டு மருத்துவ குறிப்புகள்

குழந்தைக்கு வயிற்றுவலி ஏற்படுவது சாதாரணமான ஒன்றுதான். இதை எளிதில் சரிசெய்யும் வீட்டு மருத்துவ குறிப்புகளை இங்கு பார்க்கலாம்.

1. ஒரு கப் தண்ணீரில் 1 டீஸ்பூன் பெருஞ்சீரக விதைகள் போட்டு 2-3 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பின் அதை 15-20 நிமிடங்கள் குளிர்விக்க வைத்து. பாலுடன் 1-2 டீஸ்பூன் சேர்க்கவும். இது வலியை எளிதில் குணப்படுத்த உதவுகிறது.

2. ஜாதிக்காயை பாலுடன் அல்லது சுடுதண்ணீருடன் சேர்த்து குழந்தைக்கு கொடுக்கலாம். இரவு நேரத்தில் காரணமின்றி அழும் குழந்தைக்கு இது சரியான மருந்தாகும்.

3. பெருங்காயத்தை தண்ணீரில் கரைத்து அதை பருத்தி உதவியுடன் தொப்புளை சுற்றி தடவுவது முக்கியமான வீட்டு வைத்தியமாகும். முக்கியமாக தொப்புள் உள்ளே தடவக்கூடாது வெளிப்புறமாகத்தான் தடவ வேண்டும். இது வாயுவினால் ஏற்படும் வலியை உடனடியாக குறைக்கிறது.

4. தொடர்ச்சியாக கிரேப் வாட்டர் நீர் எடுத்துக்கொள்வதும் பயனளிக்கும்

5. பாத்திரத்தை சூடு செய்து அதில் துணியை வைத்து குழந்தையின் வயிற்றில் ஒத்தடம் கொடுப்பதன் மூலம் மலச்சிக்கலை குணப்படுத்தலாம்

6. ஒரு டீஸ்பூன் தண்ணீரில் 10 முதல் 15 வரை தானியங்கள் (இந்தியாவில் "சுவா" என்று அழைக்கப்படும்) நன்கு நசுக்கி கொள்ள வேண்டும். இதனுடன் தாய்ப்பால் ஒரு சில சொட்டு கலந்து குழந்தைக்கு வழங்கப்பட வேண்டும்.

7. அரை கப் தண்ணீர் மற்றும் சிறிதளவு ஓமம் எடுத்துக்கொள்ளவும் . 2-3 நிமிடம் கொதிக்க விடுங்கள். தண்ணீரின் நிறம் மாறிவிடும், அது குளிர்ந்தவுடன், விதைகளை வடிகட்டி கொள்ளுங்கள். 3-5 மாத வயதுடைய குழந்தைகளுக்கு, ஒரு முறை 1 டீஸ்பூனும், 6 மாத வயதுடைய குழந்தைக்கு 1 டீஸ்பூன், 2-3 முறை கொடுக்கவும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு 2-3 தேக்கரண்டி கொடுக்கவும்.

8. மென்று சாப்பிட இயலாத குழந்தைக்கு நன்கு சமைக்கப்பட்ட மற்றும் மென்மையான உணவுகளையே கொடுக்க வேண்டும்.

9. வயிறு வலிக்கும் போது உங்கள் குழந்தைக்கு சூடான குளியல் கொடுங்கள். இது உங்கள் குழந்தையின் மீது இனிமையான விளைவை ஏற்படுத்தும், அதே போல் உங்கள் குழந்தையை தூங்கச்செய்ய உதவும். உங்கள் குழந்தையின் குளியல் தொட்டியை சூடான நீரில் நிரப்பவும். லாவெண்டர் எண்ணெய் ஒரு சில துளிகள் சேர்க்கவும். உங்கள் குழந்தையை இந்த தண்ணீரில் குளிப்பாட்டவும். அவ்வாறு செய்யும்போது, வெதுவெதுப்பான தண்ணீர் வாயுவைக் குறைக்க உதவும்.

10. சூடான தண்ணீரில் ஒரு துண்டை நனைத்து நன்றாக பிழிந்து கொள்ளவேண்டும். அதனை குழந்தையின் வயிற்றை சுற்றி நன்றாக தேய்த்துவிடுங்கள். சில நிமிடங்களுக்கு இதை தொடர்ந்து செய்யுங்கள்

11. எப்போதும் வலியை தடுக்க உணவு உண்ணும் போது உங்கள் குழந்தையை ஏப்பம் விட செய்யுங்கள். இது வாயுவை விடுவிக்க உதவுகிறது மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படுவதைத் தடுக்கிறது. உண்ணும் போதும், உங்கள் குழந்தையை நிமிர்ந்து உட்கார வைத்தோ அல்லது உங்கள் தோள்பட்டைக்கு எதிராக வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் குழந்தையின் முதுகு மற்றும் வயிற்றை சிறிய ஏப்பம் வரும்வரை தேய்த்துவிடுங்கள்.

12. சுத்தமான காற்று எப்போதுமே சிறந்த ஒன்றாகும். வீட்டு சூழ்நிலை இறுக்கமாய் இருக்கும்போது வெளிப்புற சூழல் நல்ல மாற்றத்தை தரும். சூரிய ஒளி, இதமான காற்று, பறவைகளின் சத்தம் என அனைத்தும் குழந்தை மற்றும் நம்முடைய மனநிலையையும் மாற்றும்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon