Link copied!
Sign in / Sign up
2
Shares

வயிற்று சதையை குறைக்க உதவும் 5 வேடிக்கையான வழிகள்..!

உடல் எடையை முக்கியமாக வயிற்று சதையை குறைக்க வேண்டும் என்று நம்மில் பலர் பிரம்மபிரயத்தனம் செய்து வருகின்றனர். இதற்காக பலர் ஜிம்மில் சேர்ந்து காசையும் நேரத்தையும் கரியாக்குகின்றனர். உடல் எடையை குறைப்பதற்கு உதவும் பல எளிய வழிகள் உள்ளன; அவற்றில் சில வேடிக்கையான வழிகளும் உள்ளன. அவற்றை குறித்து, இந்த  பதிப்பில் படித்து அறியலாம்...!

1. ஜும்பா - Zumba

ஜும்பா நடனம் உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. லத்தீன் நாட்டில் தோன்றிய இந்த நடனம், ஒரு மணி நேரத்தில் 450 கலோரிகள் வரை குறைக்க உதவுகிறது. இதை காணொளி பார்த்தே எளிதில் கற்றுக் கொள்ளலாம்..!

2. சிசேரியன்..!

நீங்கள் சிசேரியன் செய்த தாய்மாராக இருந்தால், 6 வாரங்களுக்கு பிறகு அல்லது காயங்கள் அனைத்தும் ஆறிய பின்னர், மருத்துவ ஆலோசனையுடன் உடற்பயிற்சியில் ஈடுபடலாம். காயகல்பம் போன்ற ஆசன பயிற்சிகள், நடன பயிற்சிகள், எளிய உடற்பயிற்சிகள் போன்றவற்றை மருத்துவ ஆலோசனைக்கு பின்னர் செய்யலாம். இவை உடல் எடை மற்றும் வயிற்றுச்சதையை குறைக்க உதவும்..!

3. நடைப்பயிற்சி..!

நடைப்பயிற்சி, ஜாக்கிங் போன்றவற்றின் மூலம் எளிதில் எடையை குறைக்கலாம்; நீங்கள் தாய்மாராக இருந்தால், குழந்தையை ஸ்ட்ரோலில் வைத்துத் தள்ளிக்கொண்டே நடைப்பயணம் மேற்கொள்ளலாம். இது எடையை குறைக்க உதவி செய்வதோடு, புத்துணர்வு பெறவும் உதவும்..!

4. பவர் யோகா.!

இந்த யோக பயிற்சிகளில் ஈடுபடுவது, உடலிற்கு நன்மை செய்து, உடல் பருமனைக் குறைக்க உதவுகிறது. யோகாசனத்தில் நாம் செய்யும் மூச்சுப் பயிற்சிகளால், எளிதில் வயிற்று சதையை குறைக்கலாம்.

5. ஹுலா ஹூப்ஸ்..!

இந்த ஹுல ஹூப்ஸ் மூலம் எடையை நன்றாக குறைக்க இயலும். தினம் ஒரு மணி நேரம் செய்தாலே, 600 கலோரிகள் வரை குறைத்து, நல்ல பலனைத் தரும். இது சமநிலை கொண்டு, உடல் எடை குறைக்க ஏற்றது. முதலில் எடை குறைந்த ஹூப்ஸ் பயன்படுத்தி, பின் கனமான ஹூப்ஸ் பயன்படுத்த முற்படலாம்..!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon