பெரும்பாலான பெண்களுக்கு பிரசவம் முடிந்த காயங்கள் ஆறத்தொடங்கியவுடன் உடல் பாகங்களில் வரித்தழும்புகள் ஏற்படுகின்றன. இது பெண்களின் அழகைக் குறைத்து, அவர்களுக்கு பெரும் மன வருத்தத்தை தருவதாய் விளங்குகிறது. எனவே, இந்த வரித்தழும்புகளை போக்கும் இயற்கை மருந்துகள் குறித்து இந்த பதிப்பில் படித்தறியலாமே..!
சர்க்கரை ஸ்க்ரப் (Sugar Scrub)
தேவையானவை:
1. பாதம் எண்ணெய்
2. சர்க்கரை
3. எலுமிச்சை சாறு
செய்ய வேண்டியது..
இந்த 3 பொருட்களையும் ஒன்றோடொன்று நன்றாக கலக்கி, திரவ பதத்திற்கு கொண்டு வரவும். பின் வரித்தழும்புகளுள்ள பகுதியில் 8-10 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். பின் இந்த கலவையை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து கழுவி விடவும்..
இதை ஒரு நாளைக்கு இருமுறை செய்தல் நல்லது. இந்த சர்க்கரை ஸ்க்ரப் வரித்தழும்புகளை போக்கி நல்ல பலனளிக்கும்.
2. Castor Oil
தேவையானவை:
1. Castor Oil
செய்ய வேண்டியது..
வரித்தழும்புகளுள்ள பகுதியில், சூடேற்றப்பட்ட Castor Oil கொண்டு 15-20 நிமிடங்கள் மசாஜ் செய்யவும்.
அல்லது
வரித்தழும்புகளுள்ள பகுதியில், Castor Oil ஐ தடவி 5-10 நிமிடங்களுக்கு வட்ட வடிவில் மசாஜ் செய்யவும். பின் தடவப்பட்ட எண்ணெய் மீது பருத்தி துணி விரித்து சூடான அட்டை அல்லது தண்ணீர் புட்டி கொண்டு ஒற்றி எடுக்கவும்.
இதை ஒரு நாளைக்கு ஒருமுறை செய்யவும். Castor Oil எண்ணெயில் ரெசினியோடிக் அமிலம் இருப்பதால், அது வரித்தழும்புகளை விரைவில் மறைந்து போகச் செய்யும்.
3. கற்றாழை..
தேவையானவை:
1. தூய கற்றாழை திரவம்
2. 5 வைட்டமின் ஏ மாத்திரைகள்
3. 10 வைட்டமின் இ மாத்திரைகள்
செய்ய வேண்டியது..
இந்த 3 பொருட்களையும் ஒன்றோடொன்று நன்றாக கலக்கி, திரவ பதத்திற்கு கொண்டு வரவும். பின் வரித்தழும்புகளுள்ள பகுதியில் மசாஜ் செய்யவும். பின் இந்த கலவையை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யாமல் விட்டு விடவும், உங்கள் தோலே இந்த கலவையை உறிஞ்சிவிடும்..
இதை ஒரு நாளைக்கு இருமுறை பயன்படுத்தவும். கற்றாழை தோலில் ஏற்படும் தழும்புகளை விரைவில் குணமாக்கும் திறன் கொண்டது.
இவற்றை பயன்படுத்தியும் தழும்புகள் மறையவில்லை எனில் கவலை வேண்டாம். இவை வெறும் 3 மருந்துகளே இது போன்று ஏராளமான மருந்துகள் உள்ளன. அவற்றை பற்றி படித்தறிந்து பயன்படுத்தவும். நிச்சயம் வரித்தழும்புகள் நீங்கி வளமான வாழ்க்கை வாழ்வீர்..!! வாழ்க வளமுடன்..!
