Link copied!
Sign in / Sign up
16
Shares

வரித்தழும்புகளை போக்க தினம் செய்ய வேண்டிய 7 செயல்கள்..!

பிரசவம் நிகழ்ந்தபின் நடைபெறும் பல மாற்றங்களில், பெண்களின் உடலில் உண்டாகும் வரித்தழும்புகள், பெண்களுக்கு அதிக கவலை தருபவையாக விளங்குகிறது. பெண்களின் உடலில், தடுப்புகளாகவும் தழும்புகளாகவும் இந்த வரித்தழும்புகள் சிவப்பு மற்றும் பிரௌன் நிறங்களில் இடம் பெற்று, பெண்களுக்கு பெரும் மனஅழுத்தத்தை தரக் கூடியவையாக உள்ளன. 

தினம் 7 செயல்கள் செய்து அவற்றை பின்பற்றுவதன் மூலம், நம்மால் வரித்தழும்புகளில் இருந்து விடுபட இயலும். அந்த 7 செயல்கள் என்னவென்று காண, வாருங்கள் பெண்களே! பதிப்பிற்குள் செல்வோம்..!

1. தண்ணீர்! தண்ணீர்!

தண்ணீர் என்பது தாகம் எடுத்தால் அல்லது விக்கல் ஏற்பட்டால் மட்டுமே நாம் குடிக்க வேண்டியது அல்ல. தண்ணீர் நம் வாழ்க்கையின் ஆதாரம். நம்மின் அனைத்து செயல்களும், அனைத்து செயல்களுக்கும் தண்ணீரை மூலமாக கொண்டே நடைபெறுகிறது. ‘ஆரோக்கியத்திலிருந்து ஆளை கொள்ளை கொள்ளும் அழகு வரை தண்ணீரால் தர இயலும்.

உங்கள் உடலில் வரித்தழும்புகள் இருந்தா’ல், தினமும் நீங்கள் உட்கொள்ளும் தண்ணீரின் அளவை அதிகப்படுத்துங்கள். தண்ணீர் உங்கள் உடலுக்கு பொலிவைத் தருவதாய் விளங்குகிறது. ஆகையால், தினமும் மறவாமல் 3 லிட்டர் தண்ணீர் பருக முயல்வது, வரித்தழும்புகளின் நீக்க உதவும்..

2. உடல் எடை குறைப்பு..!

அளவுக்கு அதிக உடல் எடை கொண்டிருந்தால், வரித்தழும்புகள் மறைய அதிக காலம் ஆகும். ஆதலால், உங்களின் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க முயலுங்கள். அதற்கு சத்தான சரிவிகித உணவு எடுத்துக் கொள்ளுங்கள். ‘உணவே மருந்து’ என்பதை நினைவில் கொண்டு, உடல் எடையை மேம்படுத்துங்கள்..!

3. உடல் எடை அதிகமாக்கல்..!

ஒல்லியான தேகம் உள்ளவர்களில் வரித்தழும்புகள் ஏற்பட்டிருந்தால், நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான், உங்கள் உடல் எடையை அதிகரிப்பது; உடல் எடையை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு, தழும்புகள் மறையும் அளவிற்கு மட்டும் அதிகரிக்கவும். உங்கள் உடல் எடை அதிகமாகும் போது, உண்டான வரித்தழும்புகள் மறைந்து, காணாமல் போக அதிக வாய்ப்பு உள்ளது.

4. மருந்துகள்..!

இயற்கை முறையில் தழும்புகளை மறையச் செய்யும் உருளைக்கிழங்கு போன்ற பொருட்களை முயற்சித்து பார்க்கவும். எவ்வளவு முயன்றும் முடியாத, தழும்புகள் மறையாத நிலையை எட்டினால், மருத்துவ ஆலோசனையுடன் மருந்து மற்றும் களிம்புகளை மேற்கொள்ளுங்கள்.

5. பொறுமை..!

பிரசவத்தால், ஏற்பட்ட தழும்புகள் உடனே மறைந்து விடாது; அவை முற்றிலும் மறைய சில காலம் ஆகும். அதுவரை பொறுமையுடன் தினசரி செயல்களையும், தழும்புகளை மறையச் செய்யும் வழிகளையும் பின்பற்றுவது என்பதே அறிவான செயல்!

6. அரித்தல்..!

வரித்தழும்புகள் ஏற்பட்ட இடத்தில், அரிப்புகளும் சொரிய வேண்டும் என்ற உணர்வுகளும் அதிகம் தோன்றும்; அடிக்கடி ஏற்படும். அச்சமயங்களில், உங்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, அரிக்காமலும், சொரியாமலும் இருப்பது, தழும்புகள் மறைவதை விரைவு படுத்தும்.

7. குளித்தல்…!

உடல் ஈரப்பதத்தோடு இருந்தால், உடலானது பொலிவாகவும் புத்துணர்ச்சியாகவும் காட்சியளிக்கும். அதனால், தினமும் குளிப்பது முடிந்தால், தினம் இருமுறை குளிப்பது நல்லது. இது வரித்தழும்புகளை மறையச் செய்ய உதவும்.

ஆகையால், பெண்களே! காசைக் கடைகளில் கொட்டி, கரியக்காமல்! உங்களால் வீட்டிலேயே செய்யக்கூடிய, எளிதில் செய்யக்கூடிய மேற்கூறிய வழிமுறைகளை பின்பற்றி, வரித்தழும்புகளின் வடுக்களிலிருந்து விடுதலை பெற்று, மனஅழுத்தமின்றி வாழவும்..! பதிப்பு பயனுள்ளது என்று கருதினால், நண்பர்கள் பயனடைய பகிரவும்..! 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon