Link copied!
Sign in / Sign up
1
Shares

வலி மிகுந்த மார்பகங்களுக்கு 5 வீட்டு வைத்தியங்கள்!


பிற பாலூட்டிகளை போல் மனிதர்களுக்கு தாய்ப்பால் என்பது இயற்கையாக கிடைத்த வரமாகும். மருத்துவரீதியாக குழந்தை பிறந்த உடன் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. இது தாய் மற்றும் சேய் இருவரின் உடல் நலத்திற்கும் முக்கியமாகும். தாய்ப்பால் கொடுப்பதிலும் பல பிரச்சனைகள் உள்ளன; குறிப்பாக வலி மிகுந்த மார்பகங்கள். அதிலும் புதிதாக தாயான பெண்களில் 80% இந்த பிரச்சனையை சந்திப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

இதில் நல்ல செய்தி என்னவென்றால், இது குணப்படுத்தக்கூடிய வலி தான். மேலும் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே இதை குணப்படுத்த முடியும்.

மார்பகங்களில் ஏன் வலி ஏற்படுகிறது?

பொதுவாக குழந்தைகள் தாயின் மார்பில் சரியாக பால் குடிக்கவில்லை என்றால் இது போன்ற வலி ஏற்படும். பால் கொடுப்பதற்கு சரியான நிலை என்னவென்றால், குழந்தையின் தாடை தாயின் மார்பு மீது இருக்க வேண்டும். குழந்தையின் மூக்கு தாயின் மார்பை நோக்கி இருக்க வேண்டும். குழந்தை சாய்ந்த நிலையில் இருக்க வேண்டும்.

மார்பகங்கள் வலிப்பதற்கு ஹார்மோன் மாற்றங்கள், தவறான உள்ளாடை உபயோகித்தல், வறண்ட சருமத்தால் மார்பில் ஏற்படும் வெடிப்பு, சரும தொற்றுகள், மார்பக புற்றுநோய், இருதய நோய் போன்றவை கூட காரணமாக இருக்கலாம்.

மார்பு வலிக்கான அறிகுறிகள்:

மார்பு வலியால் அவதிப்படும் பெண்கள், மார்பு பகுதியில் வலி மற்றும் அசௌகரியம், அரிப்பு, வீக்கம், மார்பு காம்புகளில் வெளியேற்றம் ஆகியவற்றை உணருவார்கள். மென்மையான மார்பகங்கள், பிளவுகள், ரத்தக்கசிவு, தலைவலி, தூக்கமின்மை, போன்றவையும் ஏற்படும்.

மார்பு வலி ஏற்படுவதை தடுக்க:

1) சரியான நிலையில் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

2) குழந்தையின் தோள்களுக்கு கீழ் கைவைத்து கூடுதல் பிடிப்பு தர வேண்டும்.

3) குழந்தை மார்பு காம்புகளை சரியாக பிடித்துக்கொள்ளவில்லை என்றால், அவர்கள் வாயில் கைவிட்டு எடுத்து, சரியாக மார்பு காம்புகளை புகுத்த வேண்டும்.

4) இவை எதுவும் வேலை செய்யவில்லை என்றால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

மார்பு வலியை சரி செய்யும் 5 வீட்டு பொருட்கள்:
1) தாய்ப்பால்:

இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. குழந்தைக்கு பால் கொடுத்த முன்பும் பின்பும் மார்பில் தாய்ப்பால் தடவி காற்றில் ஆறவிடுவது மிகவும் நல்லது. இதை ஒரு நாளைக்கு பல முறை செய்யலாம். இந்த முறை எனக்கு நன்றாக வேலை செய்தது.

2) ஒத்தடம்:

ஒரு சுத்தமான துணியை வெதுவெதுப்பான நீரில் போட்டு பிழிந்து மார்பில் ஒத்தடம் கொடுத்தால் இதமாக இருக்கும். இதை ஒரு நாளைக்கு பல முறை செய்யலாம். இது பலருக்கும் நன்றாக வேலை செய்யும்.

3) ஐஸ் கட்டிகள்:

ஒரு துண்டில் சில ஐஸ் கட்டிகளை கட்டி, மார்பில் ஒத்தடம் கொடுத்தாலும் மார்பு வலியிலிருந்து விடுபடலாம்.

4) துளசி:

இது பொதுவாக காணப்படும் ஒரு மூலிகையாகும். குறிப்பாக இந்த விஷயத்தில் இது மிகவும் உதவிகரமாக இருக்கும். துளசியை அரைத்து, ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு முறை வரை பற்று போல் மார்பில் வைத்து வந்தால் வலி குறையும். ஆனால், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் முன்பு மார்பை நன்றாக கழுவி விட வேண்டும்.

5) கற்றாழை:

கற்றாழை ஜெல்லை மார்பில் தடவி நன்றாக ஆறவிட வேண்டும். துளசி போலவே, குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் முன்பு, மார்பை சுத்தமாக கழுவி விட வேண்டும்.

புதிய தாய்மார்கள் பல விஷயங்களுக்கு பயப்படுவார்கள். இந்த மாதிரி தருணங்களில் பெரியவர்களின் உதவியை நாடுவது நல்லது. மேலும், இப்போது இன்டர்நெட்டில் பல பிரச்சனைகளுக்கு பதில்களும் தீர்வுகளும் கிடைப்பதால் நீங்கள் கவலைகொள்ள ஏதும் இல்லை. தாய்மையின் இந்த காலகட்டத்தை மகிழ்ச்சியாக அனுபவியுங்கள்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon