Link copied!
Sign in / Sign up
6
Shares

வளர்ந்த குழந்தைக்கான இனிப்பு நொறுக்குதீனி - கடலை மிட்டாய்!

குழந்தைகள் ஓரிரு வயதை அடைந்த பின், நன்றாக பற்கள் வளர்ந்த பின் அனைத்து வகை நொறுக்குதீனிகளையும், உணவுகளையும் உண்ண வேண்டும் என்று ஆசை கொள்வர்; அந்த சமயங்களில், அவர்களுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் நொறுக்குதீனிகளையும், உணவுகளையும் தாய்மார்கள் கடையில் வாங்காமல், வீட்டிலேயே செய்து அளிப்பது சாலச் சிறந்தது.

இந்த வகையில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய ஒரு இனிப்பு உணவை குறித்து நாம் இந்தப் பதிப்பில் படித்தறிவோம், வாருங்கள் தோழியரே!

தேவையான பொருட்கள்

வறுத்த நிலக்கடலை - 300 கிராம், வெல்லம் - ½ கிலோ

செய்முறை

1. வெல்லத்தை பாகு காய்ச்சி, பாகு நன்கு முறுகியதும் வறுத்த கடலை பருப்பை அதில் போட்டு நன்றாக கிளறவும்

2. இவ்வாறு தயாரித்த பாகு கலவையை, அரிசிமாவு தடவிய‌ சதுரமான பலகையில் கொட்டி, சூடு ஆறுவதற்கு முன் பூரிக்கட்டையால் விரித்து தேய்த்து, தேவையான வடிவில் வில்லைகள் செய்யவும்.

3. சதுர பலகையில் அரிசிமாவு தடவிக் கொள்வதால், கடலை மிட்டாயை பலகையிலிருந்து எளிதாக எடுக்க இயலும்!

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon