Link copied!
Sign in / Sign up
3
Shares

வளைகாப்பு வரவரிசி பற்றி அறிவீரா?

தோழிகளே! நம் கலாச்சாரத்தில், ஒரு பெண் கர்ப்பமடைந்த 7வது மாதம், அவளுக்கு வளைப்பூட்டல் அதாவது வளைகாப்பு நடத்தப்படும். பொதுவாகவே, கர்ப்பமடைந்த பெண்கள் உணவில் அதிகம் விருப்பம் கொண்டு, எதையாவது உண்டு கொண்டே இருப்பர்; அப்படி உண்டு கொண்டே இருக்க வேண்டும் என்ற வேண்டும் எனும் எண்ணம் அவர்கள் உடலில் நிகழும் ஹார்மோன் மாற்றத்தால் நிகழும்..!

அவ்வாறு கர்ப்பிணிகள் உண்ண வேண்டும் என ஆசைப்படுகையில், அவர்கள் உண்ணும் உணவு கர்ப்பிணிக்கும் குழந்தைக்கும் நன்மை பயக்கும் வண்ணம் இருந்தால், சிறப்பு. இந்த ஒரு காரணத்தை அடிப்படையாகக் கொண்டு, திருநெல்வேலி மாவட்டத்தில், அவ்வட்டார மக்கள் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடக்கையில், வளைகாப்பு வரகரிசி என்பதனை சீமந்த விழாவின் போது கர்ப்பிணிகளுக்கு அளிக்கின்றனர்.

இந்த வரகரிசி கர்ப்பிணிகளுக்கு நல்ல பலம் தருவதால், கருவறையிலுள்ள கருவிற்கும் ஆரோக்கியம் சேர்ப்பதால், இதனை மற்ற இடங்களிலுள்ள கர்ப்பிணிகளும் உண்டு பலமடையும் வகையில் இப்பதிப்பை அளிக்கிறோம்..

இது ஒரு நொறுக்குத்தீனி வகையை சேர்ந்தது; இதில் அனைத்துவித பயறு மற்றும் பருப்பு வகைகளை கலந்து தயாரித்துள்ளனர். இது எப்படி செய்வது என்று இப்பதிப்பில் பார்க்கலாம்..

மேலும் தென் மாவட்டங்களில், வளைப்பூட்டலை வேம்புக் காப்புடன் தொடங்குகின்றனர், இது கர்ப்பிணியை பயம் போன்ற உணர்விலிருந்து காத்து, அவர்களுக்கு நோய் எதிப்பு சக்தியையும் அளிக்கிறது.

Video Credits:Subbuskitchen Facebook  

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon