Link copied!
Sign in / Sign up
0
Shares

வைட்டமின் பி என்னும் தொடர் நாயகன்!

அமிலம் என்றாலே பத்தடி பாய்ந்தோடிய காலம் அந்த காலம். ஆம், பெண்களை தன் கட்டுப்பாட்டிற்குள் குடும்பங்கள் வைத்திருக்க... அதனால், ஒரு தலை காதல் கொண்டு அச்சத்தை அப்பெண்களுக்கு கற்றுக்கொடுத்தனர் சில ஆண்கள். ஆனால் இன்று, அச்சம் என்பது மடமையடா படத்தை தன் குடும்பத்துடன் திரையரங்கம் சென்று பார்க்கும் அளவிற்கு பெற்றோர்களும் பெண் சுதந்திரத்தை புரிந்து கொண்டனர்.

இதற்கும் நான் சொல்ல போவதற்கும் என்ன சம்பந்தம்? இருக்கிறது தாய்மார்களே!

அன்று அமிலம் ஒருவர் தோலை சிதைக்க மட்டுமே பயன்படும் என புரிந்துக்கொண்ட பலரும்... இன்று அந்த அமிலத்தின் நன்மையை புரிந்துக்கொண்டு பயனடைய தொடங்கிவிட்டனர்.

வீட்டின் திண்ணை முதல் டாய்லெட் வரை அமிலத்தின் பயன்பாடு என்பது இன்றைய நாளில் இன்றிமையாத ஒன்றாகும்.

இவ்வளவு ஏன்? கொசுவே, அமிலம் என்றால் ஓடி மறைகிறதாம்.

அப்படி என்ன தான் இருக்கிறது அமிலத்தில்? 

அமிலத்தில் பல இருக்கிறது. ஆனால், வைட்டமின் பி இருக்கிறது என சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?

அட ஆமாங்க,

இதன் பெயர் ஃபோலிக் அமிலம். இதற்கு இன்னொரு பெயரும் இருக்கிறது. அது தான் வைட்டமின் பி.

ஃபோலிக் அமிலத்தின் பயன்கள்:

கர்ப்பிணி பெண்களே, உங்கள் குழந்தையை நீங்கள் சூப்பர் ஹீரோவாக வளர்க்க வேண்டுமா? அப்படி என்றால், உங்களுக்கு இந்த வைட்டமின் பி அடங்கிய ஃபோலிக் அமிலம் என்பது தேவை. இது உங்கள் குழந்தையின் முதுகெலும்பு, மூளை, ஆகியவற்றின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இந்த வைட்டமின் பி என்பது உங்கள் குழந்தையின் முதல் 4 வார வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. ஆனால், இந்த 4 வாரங்களில் ஒரு பெண்ணுக்கு கர்ப்பம் என்பது என்ன என்பதை புரிந்துக்கொள்ளவே நேரம் சரியாக இருக்கிறது. மேலும் ஃபோலிக் அமிலம், சிவப்பு இரத்த அணுக்கள் உருவாக உதவுகிறது.

இந்த வைட்டமின் பி அடங்கிய ஃபோலிக் அமிலம் எவற்றில் இருக்கிறது?

இலை காய்கறிகள் 

சிட்ரஸ் பழங்கள்

முழு தானியங்கள்

கீரை வகைகள்

பயறு வகைகள் 

பூக்கோசு

பட்டாணி

சோளம் 

ஆரஞ்சு

இதனை நாம் எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும்?

இந்த ஃபோலிக் அமிலம் என்பது நீரில் கரைய கூடிய தன்மை கொண்டது. அதனால், அளவுக்கதிகமாக நீங்கள் எடுத்துக்கொள்ளும் போது, சிறுநீறு வழியாக வெளியாகிவிடும். 

நரம்பு குழாய் குறைபாடுகளை சரி செய்யும் இந்த வைட்டமின் பி அடங்கிய ஃபோலிக் அமிலம் போன்று இன்னும் சில சத்துக்களும் உங்களுக்கு தேவைப்படுகிறது. அவை என்னவென்றால், குழந்தையின் இரத்த சோகையை போக்க இரும்பு சத்தும், எலும்பு மேலும் வலு பெற கால்சியமும் தேவைப்பட, இதுபோன்ற  எளிதில் கிடைத்திடும் உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிட்டு உங்கள் குழந்தையின் நலத்தையும் பேணி காத்திடலாமே. 

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon