Link copied!
Sign in / Sign up
8
Shares

சுகப்பிரசவம் - சிசேரியன் வித்தியாசம் என்ன தெரியுமா?

கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கும் தெரியாத ஒரு விஷயம் என்னவென்றால் தனக்கு நிகழப்போவது சுகப்பிரசவமா? அல்லது சிசேரியனா? என்பது தான். இந்த இரண்டை பற்றியும் கர்ப்பிணிகள் லேசாக தெரிந்துக்கொண்டாலும் ஒருசிலர் குழப்பாமல் இருப்பதில்லை. சரி, இப்போது சுகப்பிரசவத்துக்கும், சிசேரியனுக்கும் என்ன வித்தியாசம் என்பதை நாம் பார்க்கலாம்.

சுகப்பிரசவம் vs சிசேரியன்

சுகப்பிரசவம் என்பது மிகவும் இயற்கையானது என்பதால் எந்த நேரத்தில் என்ன ஆகும் என்பதை உங்களால் முன்கூட்டி சொல்ல இயலாது. ஒரு சில தாய்மார்களுக்கு சுகப்பிரசவம் ஏற்பட வாய்ப்பிருந்தும் இறுதி நிலையில் சில காரணங்களால் சிசேரியனுக்கு மருத்துவர் பரிந்துரை செய்வார்கள். சுகப்பிரசவம், சிசேரியன் இரண்டுமே தாய், சேயின் நலன் பொறுத்தே அமைகிறது.

என்ன வித்தியாசம்?

1. சுகப்பிரசவத்தால் மருத்துவமனையில் நாம் தங்கும் நாட்கள் குறைகிறது. சிசேரியனில் உங்கள் உடல் சரியாகும் வரை தங்க வேண்டியது அவசியம்.

2. சுகப்பிரசவத்திலிருந்து நீங்கள் மீண்டு இயல்பு நிலைக்கு திரும்புவது எளிது. ஆனால், சிசேரியனில் அப்படி கிடையாது. நீங்கள் இயல்பு நிலைக்கு திரும்ப கொஞ்ச நாட்கள் ஆக, அத்துடன் உங்கள் மீது கவனம் அதிகம் இருந்திடவும் வேண்டும்.

3. சுகப்பிரசவத்திற்கு முக்கியம் மனம் தான். நீங்கள் அடையும் வலியை தாங்க, உங்கள் மனம் தயாராக இருத்தல் வேண்டும். ஆனால், சிசேரியனில் மனம் மற்றும் உடலளவில் நாம் தயாராக வேண்டியது அவசியமாக உங்கள் மருத்துவ நலன் மீதும் மருத்துவர்கள் அதிக அக்கறை செலுத்துவார்கள்.

4. சுகப்பிரசவத்தில் உங்கள் குழந்தைகளுக்கான நன்மை அதிகம் காணப்படுகிறது. அதாவது குழந்தை வெளியாகும் போது உடையும் பனிக்குடம், இயல்பாக தன் வேலைகளை செய்ய உங்கள் குழந்தையின் உடலை பாதுகாக்கும் பாக்டீரியாக்கள் தேவையான எதிர்ப்பு சக்தியையும் தருகிறது. சிசேரியனில் அனைத்து செயல்களும் மருத்துவர் மூலமாகவே நிகழ்கிறது.

5. சுகப்பிரசவத்தில் இருக்கக்கூடிய பிரச்சனை என்னவென்றால், பெண்கள் அதற்கு முன்னதாகவே தன்னை தயார்ப்படுத்தி கொள்ள வேண்டும். ஆனால், சிசேரியனில் அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதை அவர்களாலே தெரிந்துகொள்வது சிரமம். சுகப்பிரசவத்தை விட மன வலியும் குறைவு தான்.

6. சுகப்பிரசவம் உண்டாவதால் குழந்தை பிறந்த பிறகு உங்கள் துணையுடனான உடலுறவு காலம் என்பது தள்ளி போகிறது. சிசேரியனில் இந்த காலம் என்பது குறைவு.

7. சுகப்பிரசவத்தை சரியாக மருத்துவரால் சொல்ல இயலாது. சிசேரியனில் எப்போது உங்கள் குழந்தை பிறக்கும் என்பது குறித்த தகவல் வரை முன்கூட்டியே சொல்லக்கூடும்.

8. சுகப்பிரசவத்தில் மன அழுத்தம் அதிகமாக காணப்பட வாய்ப்பிருக்கிறது. அதனால் உங்களை நீங்கள் முன்கூட்டியே தயார்ப்படுத்தி கொள்ள வேண்டும். சிசேரியனில் பயம் என்பது சுகப்பிரசவத்தை ஒப்பிடுகையில் குறைவு தான்.

எந்த ஒரு செயலாக இருந்தாலும் சரி, சுகப்பிரசவமோ! சிசேரியனோ! எல்லாவற்றிலும் நன்மை தீமைகள் இருக்கத்தான் செய்யும் என்பதை புரிந்துக்கொண்டு பிறக்க போகும் குழந்தையை எப்படி வளர்க்கலாம்? என்பதை பற்றி சிந்தித்தாலே போதும்... எல்லாம் நன்மைக்கே என்பதை நடந்து முடியும் பிரசவம் உணர்த்த அழகிய தருணமாகவும் நீங்கள் குழந்தையை தூக்கி கொஞ்சும் நிமிடம் என்பது அமையும்.

 

Click here for the best in baby advice
What do you think?
100%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon