Link copied!
Sign in / Sign up
7
Shares

வகை வகையாய் பொங்கல் குழம்பு செய்வது எப்படி?

சமையல் என்பதை ஒரு முக்கிய கலையாகவே பெண்கள் கருதுகிறார்கள். எப்போதும் வேலைக்கு செல்லும் அவசரத்தில் சமைக்கும் அவர்கள், பண்டிகை கால சமையலில் அவர்களின் கைவண்ணத்தை காட்டுவார்கள். அதிலும் பொங்கலன்று பொங்கலோடு வகை வகையாக சமைத்து கடவுளுக்கு படைத்து பின் உண்ணுவார்கள். பொங்கலன்று வைக்கும் குழம்பு கூட பல காய்கள் கலந்து மிகவும் சுவையானதாக இருக்கும். இங்கு வகை வகையாய் பொங்கல் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

1 பருப்பு மசியல்

தேவையான பொருட்கள்

பாசிப்பருப்பு - 200 கிராம்

காய்ந்த மிளகாய் - 6

பூண்டு - 8 பல்

கறிவேப்பிலை - சிறிதளவு

சீரகம் - ஒரு தேக்கரண்டி

மஞ்சள்தூள் - ஒரு தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை

1 பூண்டை தோலுடன் நசுக்கி எடுத்து வைத்து கொள்ளவும்.

2 ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நன்கு குவளை தண்ணீர் ஊற்றவும். அதில் பாசிப்பருப்பு, நசுக்கிய பூண்டு, கறிவேப்பிலை, சீரகம், மஞ்சள் தூள் மற்றும் சிறிது சிறிதாக காய்ந்த மிளகாயை அதனுடன் சேர்த்து நன்கு வேகவிடவும்.

3 பருப்பு வெந்ததும் உப்பு சேர்த்து நன்கு மசித்தால், பருப்பு மசியல் தயார்.

2 பரங்கிக்காய் அல்லது பூசணிக்காய் குழம்பு

தேவையான பொருட்கள்

பரங்கிக்காய் - 300 கிராம் (தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கியது)

சின்ன வெங்காயம் - 15 ( தோலுரித்து நறுக்கியது)

தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)

பூண்டு - 6 பல் (தோலுரித்து நசுக்கியது)

கறிவேப்பிலை - சிறிதளவு

புளி - சிறிதளவு (எலுமிச்சை அளவு)

தன்ணீர் - 3 குவளை

உப்பு - தேவையான அளவு

சாம்பார் பொடி - 3 தேக்கரண்டி

தாளிக்க :

எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு

சீரகம் - ¼ தேக்கரண்டி

கடுகு - சிறிதளவு

உளுத்தம்பருப்பு - ¼ தேக்கரண்டி

வெந்தயம் - சிறிதளவு

பெருங்காயத்தூள் - ¼ தேக்கரண்டி

 

செய்முறை

1 புளியை 2 குவளை தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்து கொள்ளவும்.

2 பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்துத் தாளிக்கவும்.

3 அதனுடன் கறிவேப்பிலை, பூண்டு, வெங்காயம், சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும். பின் பூசணிக்காயை சேர்த்து வதங்கியதும், தக்காளி சேர்த்து நன்கு வேகவிடவும்.

4 பின் புளிக்கரைசல், சாம்பார் பொடி, உப்பு சேர்த்து காய் நன்றாக வேகும் வரை கொதிக்க விட்டால், சுவையான பூசணிக்காய் குழம்பு தயார்.

3 பல காய் குழம்பு

தேவையான பொருட்கள்

முருங்கைக் காய் - 1

கருணைக்கிழங்கு - 1

உருளைக்கிழங்கு - 1

கேரட் -1

சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 1

கத்திரிக்காய் - 3

சுரைக்காய் - சிறிதளவு

பறங்கிக்காய் - சிறிதளவு

பலாக்காய் - சிறிதளவு

வாழைக்காய் - சிறிதளவு

அவரைக்காய் - 10

மொச்சை - ½ கப்

காராமணி - 10

தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)

சின்ன வெங்காயம் - 10 (தோலுரித்து நறுக்கியது)

கறிவேப்பிலை - சிறிதளவு

புளி - சிறிதளவு (எலுமிச்சை அளவு)

தண்ணீர் - 2 குவளை

சாம்பார் பொடி - 5 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

தாளிக்க

நல்லெண்ணெய் - 4 தேக்கரண்டி

கடுகு - சிறிதளவு

உளுத்தம்பருப்பு - சிறிதளவு

சீரகம் - சிறிதளவு

பெருங்காயத்தூள் - சிறிதளவு

செய்முறை

1 புளியை இரண்டு குவளை தண்ணிரில் ஊற வைத்து கரைத்து கொள்ளவும்.

2 சுரைக்காய், வாழைக்காய், பலாக்காயைத் தோலை நீக்கி ஒரே அளவில் சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். மற்ற காய்களையும் சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

3 குக்கரை அடுப்பில் வைத்து புளிக்கரைசல், சாம்பார் பொடி, உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்.

4 இதில் நறுக்கிய காய்கறிகள், மொச்சை, காராமணி, சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து குக்கரை மூடவும். ஒரு விசில் வரும் வரை காத்திருக்கவும்.

5 பின் பாத்திரத்தை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். 

6 குக்கர் விசில் அடங்கியதும், வெந்திருக்கும் கலவையை எடுத்து ஊற்றி தாளித்து கொதிக்க விட்டால், சுவையான பலகாய் குழம்பு தயார்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon