Link copied!
Sign in / Sign up
2
Shares

வாயுத் தொல்லையால் அழும் குழந்தை..!!

குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் வாயுத் தொல்லை ஏற்படும். குழந்தைகளுக்கு வாய்வு தொல்லை ஏற்படும்போது அவர்களுக்கு அதை சொல்ல தெரியாது. அதனால் தொடர்ந்து அழுது கொன்டே இருப்பர். பொதுவாக தாய்ப்பால் அல்லது பாட்டில் பால் குடிக்கும் குழந்தைகள் காற்றை அதிகமாக உள்ளிழுக்கும் போது வாயுத் தொல்லை ஏற்படலாம். செரிமான மண்டலம் சரியான வளர்ச்சியை எட்டாமல் இருப்பது தான் இதற்கு காரணம். பற்கள் முளைக்கும்போது சில குழந்தைகளுக்கு இந்த தொந்தரவு ஏற்படும். இதனை அறிந்து சரி செய்ய வீட்டிலேயே இருக்கும் பொருட்களை கொண்ட தீர்வுகளை இந்த பதிவில் கூறி இருக்கிறோம். படித்து பயனடையுங்கள்.  

குழந்தைகளுக்கு வாயுத் தொந்தரவு இருப்பதை அறிந்து கொள்வது எப்படி? 

1. எவ்வளவோ சமாதானத்திற்கு பிறகும் குழந்தைகள் அழுது கொன்டே இருப்பார்கள். 

2. கால்களை மேல் நோக்கி வைத்துக்கொண்டு அழுவார்கள்.

3. பால் குடித்தவுடன் அழுவார்கள். 

4. வயிற்று பகுதி மிகவும் கடினமாக இருக்கும். 

வாயுத் தொந்தரவு ஏற்பட காரணம்: 

குழந்தைகளுக்கு வாயுத் தொல்லை ஏற்பட சில காரணங்கள் உண்டு. அவை, 

1.குழந்தைகள் நாள் முழுதும் உணவு அருந்திக் கொன்டே இருப்பதால் குடல் அதிக அளவு வாயுவை உற்பத்தி செய்கிறது 

2. தாய் வாயுத் தொல்லை தரும் உணவுகளை உண்ணும் போது, தாய்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு வாயுத் தொல்லை ஏற்படும். 

3. குழந்தைகள் அழும் போது காற்றை விழுங்குவதாலும் வாயுத் தொந்தரவு ஏற்படும். 

4. உடலில் இருக்கும் இயற்கை சர்க்கரையகிய பிருக்டோஸ், லாக்டோஸ், ராபினோஸ், சோர்பிட்டால் போன்றவை ஜீரணிக்காத போது இவை குடலை நோக்கி செல்லும். குடலில் இருக்கும் பாக்டீரியாக்கள் வாயு மற்றும் வயிற்று உப்புசத்தை ஏற்படுத்தும். 

வாயுத் தொந்தரவை எப்படி தடுப்பது? 

குழந்தைக்கு பால் புகட்டும் போது தலை பக்கம் மேடாகவும், வயிற்று பகுதி கீழாகவும் இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும். இதனால் வாய்வு வயிற்றில் தங்காமல் இருக்கும். பாட்டிலில் பால் கொடுக்கும் போது சிறிய துளை உள்ள பாட்டிலாக இருக்க வேண்டும். பெரிய துளையாக இருக்கும் போது பாலுடன் அதிகமான காற்றும் உள்ளே செல்வதால் வாயுத் ஏற்படலாம். ஒவ்வொரு முறையும் பால் குடித்த பிறகு ஏப்பம் வர வேண்டும்.

ஏப்பம் 

தாய் பால் குடிக்கும் குழந்தைகள் பால் குடித்த பிறகு உடனே படுக்க வைக்க கூடாது. அவர்களை தாய்மார்கள் தோளில் போட்டு முதுகில் தட்டி கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்யும் போது ஏப்பம் வெளி வரும். இதனை செய்யும் போது வாயுத் தொந்தரவு ஏற்படாது. 

இந்த வாயுத் தொல்லையை சரி செய்ய உதவும் வீட்டு வைத்தியங்களை பற்றி அடுத்த பதிப்பில் காணலாம்..!

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon