Link copied!
Sign in / Sign up
25
Shares

வாஸ்து படி எது எங்கே இருக்க வேண்டும்?

வாழ்க்கையில் பலருக்கு இருக்கும் தலையாய கடமைகளுள் ஒன்று, சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்பது தான். கிராமத்தில் பலரும் சொந்த வீட்டில் வாழ்ந்தாலும், நகர்ப்புறங்களில் வாடகை வீட்டில் வசிப்பவர்களே அதிகம். அப்படி இருக்க, வாழ்க்கையில் சொந்தமாக வீடு கட்டி வாழ்ந்துவிட வேண்டும் என்பது பலருடைய எண்ணமாக இருக்கிறது.

அதற்கு ஏற்ப, உழைப்பாளிகளின் உடல் மட்டுமா வளைகிறது? வங்கிகளும் வளைந்து நெளிந்து வட்டிக் கட்ட அழைக்க, வேலை பார்க்கும்போதே வீட்டை கட்ட வேண்டிய கனவின் முதல் கட்டமாக ஒவ்வொரு செங்கல்லாய் வாஸ்து பார்த்து அரங்கேற்ற, வீடு கட்டி முடித்தவுடன் வியப்புடன் தன்னையே பார்க்கிறார் ஒருவர்.

வீடு கட்ட முடிவு செய்யும் நாள் முதல், எந்த செங்கல்லை எப்போது எந்த பக்கம் வைக்க வேண்டுமென அனைத்தையும் நேரம், காலம் பார்த்து செய்வது மரபு. அத்துடன், வாசல் எந்த பக்கம் இருக்க வேண்டும்? கழிவறை எப்பக்கம் இருக்க வேண்டும்? என அனைத்தையும் பல பெரியவர்களின் பரிந்துரைப்படி செய்வார்கள்.

ஒரு சிலர் நம்மை குழப்பி விடுவதும் உண்டு. இதனால், வீடு கட்டிய பின்னரும் தவறான முறையில் சென்று விட்டோமோ என கவலை கொள்வதும் உண்டு. எனவே வீடு கட்டும் முன்னரே சிறந்த வல்லுனர்களின் சொல்படி செயல்படுவது மிக நல்லது. அதன்பிறகு யாராவது உங்களை குழப்பி விட்டாலும்... கண்டுக்கொள்ளாமல் புன்முறுவல் பூத்து நகருங்கள். தயவு செய்து மனதளவில் குழப்பம் கொள்ள வேண்டாம்.

வீட்டின் ஹால்:

வீட்டின் அரங்கம் எனப்படும் ஹால் ஒரு அங்கமும் கூட. இந்த ஹால், பலவித செயல்களுக்கு உகந்த நிலையில் அமைகிறது. அட ஆமாங்க, வீட்டிற்கு வரும் விருந்தினரை வாசலில் நின்று வரவேற்றாலும், ஹாலில் அமர வைத்து மரியாதை தருவது தான் ஹாலின் சிறப்பம்சம். இதனால், நல்லிணக்கம் உண்டாகும். ஆனால், இன்றைய காலக்கட்டத்தில்... ஹால் என்பது சாப்பிடவும், டிவி பார்க்கும் அறையாகவும் மாறி இருக்கிறது. "டேய், சாப்பிடும் போது என்ன டிவி..." என கேட்கும் நாம், அக்குழந்தையால் ஒன்றும் அந்த டிவி ஹாலில் வைக்கப்படவில்லை என்பதை மறந்து விடுகின்றோம். அதனால், ஹாலில் ஒன்று டிவி இருக்க வேண்டும். இல்லையென்றால், டிபன் இருக்க வேண்டும். இனிமேலாவது முடிவு செய்வோமா?

ஹால் என்பதை குடும்பத்தில் உள்ள அனைவரும் அமர்ந்து அரட்டை அடிக்கவும், திட்டங்களை தீட்டவும் கூட பயன்படுத்தலாம்.

டிவி இருக்க வேண்டிய இடம்:

உங்கள் குழந்தைகள் அடிக்கடி கிராஸ் செய்யும் பகுதியில் டிவியை வைக்காதீர்கள். இதனால், "கொஞ்ச நேரம், கொஞ்ச நேரம்.... கொஞ்சி பேசக்கூடாதா..." என கொஞ்சி பேசிட  கிளம்பி விடுவார்கள் அவர்கள். அதேபோல், வார நாட்களில் டிவி பார்க்கும் பழக்கத்தை அதிகம் தராதீர்கள். விலங்குகளின் வாழ்க்கை பாடம் கற்பிக்கும் நேஷனல் ஜியோகிராபிக், அனிமல் பிளேனட், டிஸ்கவரி சேனல் போன்றவற்றை பார்க்க பழக்கப்படுத்துங்கள். ஒருவேளை, குழந்தையின் ஆர்வம்., விளையாட்டு சேனலில் இருக்குமானால், அதற்கு ஏற்ப அவனை தயார்ப்படுத்துங்கள். செய்திகள் தெரிந்துக்கொள்வது நல்லது. தயவு செய்து சீரியல் மட்டும் வேண்டாம் மக்களே! உங்கள் குழந்தைகளுக்கு...

நல்ல நேரம் பொறக்க போகுது:

1. உங்கள் வீட்டின் கடிகாரத்தை கிழக்கில் வைப்பது சிறந்த யோசனையாக அமைகிறது.

2. வடக்கில் கடிகாரத்தை வைப்பதனால், செல்வம், வளம் மற்றும் சந்தோசம் கிடைக்கக்கூடும்.

3. .கடிகாரத்தை மேற்கு பக்கம் வைப்பதை முடிந்தளவுக்கு தவிர்த்திடுங்கள்.

4. பெண்டுலம் (ஊஞ்சல் போல் முள் ஆடும்) சுவர் கடிகாரத்தை நீங்கள் பயன்படுத்தினால், அதை சந்தோசம் பெருக கிழக்கில் வைப்பது நல்லது.

5. அதேபோல், கடிகாரத்தை தெற்கில் மாட்டுவதையும் தவிர்த்திடுங்கள்.

7. கடிகாரத்தை கதவுக்கு மேலே மாட்டாதீர்கள். சுவருக்கு மேலே மட்டுமே மாட்டுவது நல்லது.

8. கிழக்கில் கடிகாரம் மாட்டுவது நல்லது. ஆனால், வடமேற்கில் இருக்கும் பெட்ரூம் அல்லது வடமேற்கில் இருக்கும் அறையிலிருந்து பார்த்தால் கடிகாரம் தெரியாமல் இருத்தல் அவசியம்.  அதேபோல், வடமேற்கு அறையின் கதவானது தென்கிழக்கு -தெற்கு பகுதியில் இருந்தால் மட்டுமே இவ்விதி பொருந்தும்.

9. கடிகாரம் ஓடவில்லை என்பதை தெரிந்துக்கொண்டு விட்டால், உடனடியாக பேட்டரியை மாற்றிவிட வேண்டும். ஓடாத கடிகாரம் எதிர்வினையை ஆற்றக்கூடியது.

10. அதேபோல், கடிகாரம் உடைந்திருப்பது உறுதியானால் உடனடியாக சரி செய்ய வேண்டியது அவசியம்.

11. வீட்டின் கடிகாரம் அனைத்தும் சரியான நேரத்தை காண்பிக்க வேண்டியது அவசியம்.

12. வீட்டுக்கு வெளியில் கடிகாரம் மாட்டுவதை தவிர்த்திடுங்கள்.

பாத்ரூம் இருக்க வேண்டிய இடம்:

1. பாத்ரூம் இருக்க வேண்டியது கிழக்கு திசையாகும்.

2. பாத்ரூமின் வெளி குழாய் (வடிக்கட்டிய நீர் செல்ல) இருக்க வேண்டியது  வட கிழக்கு திசையாகும்.

3. அதேபோல், டாய்லெட் இருக்க வேண்டிய திசை வீட்டின் மேற்கில் அல்லது வட மேற்கில் ஆகும்.

4. பாத்ரூம் சவர் மற்றும் உள் பைப் வடக்கில் இருத்தல் வேண்டும்.

5. அதேபோல் உங்கள் வீட்டின் வாசிங்க் மெஷின் இருக்க வேண்டிய இடம் தென்கிழக்கு அல்லது வடமேற்கு திசையாகும்.

எதையுமே ஆக்குவது கஷ்டம்...அழிப்பது மிக எளிது. அதனால், முடிந்தவரைக்கும் வீடு கட்டும் முன்னே அனுபவமிக்க பலரிடம் சரியான தகவலை பெற்று அதன்பின்னர் செயல்படுவது மிக நல்லது. கட்டி முடித்த பின்னர், குழப்பங்கள் உங்கள் கழுத்தை சுற்றினாலும், நிதானமாக இருக்க முயலுங்கள். அப்படி வாஸ்து தவறென யாராவது கூறினால், 100 பேரிடமாவது கேட்டு அவர்கள் சொல்லும் பதில்களை ஆராய்ந்து எது உண்மை? எது பொய்? என்பதை முடிவு எடுத்திடுங்கள். எக்காரணம் கொண்டும், அவசரமாக முடிவெடுப்பதை தவிர்க்கவும். இல்லையேல், உங்கள் தலை மன அழுத்தம் கொண்டு உருள்வது உறுதி...

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon