Link copied!
Sign in / Sign up
1
Shares

வாங்கி விட்டீர்களா? உங்களுக்கான சில ஆடையை...

கர்ப்பிணி பெண்கள் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டிய விஷயங்கள் பல. அதில் ஒன்று அணிய வேண்டிய ஆடை. ஆமாங்க, நீங்க  என்ன ஆடை அணிய வேண்டும் என்பதில் கூட இந்த பத்து மாதங்கள் கவனமாக இருத்தல் வேண்டும். இதனால், தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்க முடிவதோடு தங்கள் குழந்தையின் நலனையும், பேணி காத்திடலாம். இல்லையேல் குழந்தை எட்டி உதைப்பது உறுதி.

இப்போது உங்களுடைய கர்ப்ப காலத்தில் நீங்கள் அணிய வேண்டிய ஆடை சிலவற்றை நாம் பார்க்கலாம்.

லெக்கிங்க்ஸ்:

உங்களுடைய மகப்பேறு மாதங்களில் லெக்கிங்க்ஸ் அணிவது மிக நல்லதாகும். அதுவும், கர்ப்பிணி பெண்களுக்கென்றே, ஆடைகள் நம் அன்றாட வாழ்வில் வர தொடங்கிவிட்டது. இந்த ஆடைகள் உங்களை இறுக்கினாலும், உங்கள் மனதை ஓய்வின் பாதையில் அழைத்து செல்கிறது. 

உட்சட்டை:

இடுப்புக்கு கீழே தங்கும் இந்த உட்சட்டை பற்றி அவ்வளவு எளிதாக யாராலும் சொல்லிவிட இயலாது. இந்த ஆடை பார்ப்பதற்கு ரோமானிய வடிவத்தையும் கொண்டு உங்கள் வயிற்றை பேணி பாதுகாக்க பயன்படுகிறது.

மாக்ஸி ஆடை:

கணுக்கால் வரை நீளத்தில் இந்த ஆடை உயர்ந்து காணப்படும். இந்த ஆடையானது மேலே பிட்டாக இருக்க கீழே தளர்வாகவும் இருக்கும். பருத்தியால் இந்த ஆடை உருவாக்கப்பட பட்டு போல் உங்கள் மேனியை அலங்கரித்து காட்சி அளிக்கவும் செய்கிறது. 

வடிவமற்ற, சங்கி கார்டிகன்:

இந்த ஆடை, நமக்கு ஏற்ற வகையில் அமைந்து காணப்படுகிறது. நாம் எந்த பக்கம் வளைய விரும்புகிறோமோ, அதே பக்கம் இந்த ஆடையும் வளைந்து விருப்பத்தை நிறைவேற்றும் என்பதில் எந்த வித சந்தேகமும் வேண்டாம்.

போர்த்திக்கொள்ளும் ஆடை:

உங்கள் குழந்தை வயிற்றில் உதைக்க தொடங்க, அவன் வடிவத்துக்கு ஏற்று வளைவு கொடுக்க இது தான் சிறந்த ஆடை. ஆம், இந்த ஆடை மிகவும் தளர்வாக அமைய, உங்கள் வயிறு உப்பிய நிலையில் காணப்படும் காலங்களில் அதற்கு ஏற்ப தன்னையும் மாற்றிக்கொள்கிறது இந்த ஆடை.

கர்ப்பிணி பெண்களே! இன்னும் எண்ணற்ற உடைகள் உங்கள் இறுகிய உடலை இன்பத்துடன் அணைக்க காத்திருக்கிறது. இது போன்ற உங்கள் உடலையும் நலத்தையும் பேணி பாதுகாக்கும் உடைகளை வாங்குங்கள். அப்போது தான் உங்கள் மகன்/மகள் கோவமாக மட்டுமே உங்களை உதைக்க மாட்டார்கள்...

 

உதைக்கிறான் உம் மகன்

உடையின் தாக்கத்தால் 

வயிற்றில் நீர் விதைத்த விதையது 

முளைக்கும் முன்னே 

அவன் கண்கள் துடைக்க

வாங்கி மகிழுங்கள்

மகன்/மகள் விரும்பும் ஆடையதனை... 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon