Link copied!
Sign in / Sign up
10
Shares

கருவிலிருக்கும் குழந்தையின் அசைவை வைத்தே ஆணா? பெண்ணா? அறிவது எப்படி?

நீங்கள் கர்ப்பமாக இருக்க, பிறக்கப்போவது ஆணா? பெண்ணா? என தெரிந்துக்கொள்ளும் எதிர்ப்பார்ப்பும் உங்களுக்கு இருக்கும். வழியில் வந்து போவோரெல்லாம் உங்கள் வயிற்றை பார்த்து அவரவர் விருப்பத்தை சரமாரியாக பதிவு செய்து செல்வர். நமக்கோ ஒருவித குழப்பம் மனதளவில் இருந்துக்கொண்டே இருக்கும். அதுவும் இந்தியாவில் பிறக்க போகும் குழந்தையின் பாலினத்தை தெரிந்துக்கொள்ள முயல்வது சட்டப்படி குற்றம் என்பதால் மருத்துவர் சொல்ல மறுத்து குழந்தையின் நலன் பற்றி மட்டுமே சொல்வார். இப்போது ஆண் குழந்தையை பெற்றுக்கொள்ள விரும்புபவர்களை காட்டிலும் இளவரசியை விரும்புபவர்களே அதிகம் என்பதால், எந்த குழந்தை என்றாலும் பரவாயில்லை எனும் மனநிலைக்கு ஒரு சிலர் வந்துவிட்டனர். ஆனால், அவர்கள் வீட்டிலிருக்கும் ஒரு சிலர் விருப்பத்திற்கு இணங்க என்ன குழந்தை தன் வயிற்றில் வளர்கிறது என்பதை தெரிந்துக்கொள்ள ஒரு சிலர் ஆசைப்படுகின்றனர். இப்போது கருவிலிருக்கும் குழந்தையின் அசைவை கொண்டே ஆணா? பெண்ணா? என்பதை எப்படி அறிய முடியும்? வாருங்கள். என்னுடன் சேர்ந்து படித்து பயடையலாம்.

1. குழந்தையின் முன் அசைவு:

உங்கள் குழந்தை ஓரிடத்தில் இல்லாமல் அங்கும் இங்கும் அசைவான். அப்படி என்றால் பிறக்க போவது ஆணாக இருக்க அதிக வாய்ப்பிருக்கிறது. பொதுவாக 20ஆவது வாரத்தில் தான் கருவிலிருக்கும் குழந்தையின் அசைவை நம்மால் உணர முடியும். ஆனால், ஒரு சில அம்மாக்களுக்கு அதற்கு முன்பே இந்த அசைவை உணர முடிகிறது. அதாவது 16ஆவது வாரத்திலேயே கருவிலிருக்கும் குழந்தையின் அசைவை நீங்கள் உணர, பிறக்க போவது ஆணாக இருக்கக்கூடும் என என்றாவது நீங்கள் நினைத்து பார்த்ததுண்டா? ஆம், 16 வாரத்தில் குழந்தை அசைய தொடங்க, இதனால் ஆண் குழந்தை பிறக்க பெரிதும் வாய்ப்பிருக்கிறது.

2. சுறுசுறுப்புடன் இருத்தல்:

கருவிலிருக்கும் குழந்தை சுறுசுறுப்பாக இருக்குமெனில், பெண் குழந்தை பிறக்க அதிகம் வாய்ப்பிருக்கிறது. ஒரு சில சமயத்தில் பெண் கருவானது., ஆண் கருவை விட மிகவும் வலிமையாக இருக்கும். அறிவியல் ரீதியாகவும் இது உணரப்பட்டு இருக்கிறது. பெண் கரு சுமந்துவரும் XX குரோமசோம்கள், XY குரோமசோமை சுமந்து வரும் ஆண் கருவை விட அதிகம் நிலைத்திருக்கிறது. இந்த காரணத்தால் தான் பெண் குழந்தை பிறக்குமெனில் அம்மாக்களின் வயிற்றில் கரு சுறுசுறுப்புடன் எந்நேரமும் இருக்கிறது. 30 நிமிடத்தில் மூன்று முறை குழந்தையின் அசைவு இருந்தால் ஆண் குழந்தை பிறக்கலாம். ஒருவேளை இன்னும் அதிகமான அசைவுடன் காணப்பட்டால் பெண் குழந்தை பிறக்க அதிக வாய்ப்பிருக்கிறது.

3. உதைக்கும் குழந்தை:

கருவிலிருக்கும் குழந்தை உதைப்பதற்கும், அசைவதற்கும் அதிகம் வித்தியாசம் இருக்கிறது. குறிப்பாக ஆண் குழந்தையை ஈன்றெடுக்க போகும் தாயின் வயிற்றில் கால் பந்து போட்டி நடைபெற கருவிலிருக்கும் குழந்தை எட்டி உதைப்பதில் மிகவும் ஆர்வத்துடன் இருப்பான். ஆனால், கருவிலிருப்பது பெண் குழந்தையாக இருக்க, இதனால் அதிகம் அசைவுடன் மட்டுமே பெரும்பாலும் காணக்கூடும். குழந்தையின் அசைவு என்பது நஞ்சுக்கொடி பொறுத்தும் அமைகிறது.

குழந்தை பிறப்பு என்பதில் மிகவும் கவனமாக இருந்தாலும், பிறக்க போகும் குழந்தையின் பாலினத்தை பற்றிய செயல்களை விளையாட்டு தனமாக மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் விரும்பும் குழந்தை பிறக்காவிட்டால் ஏற்படும் மன வருத்தத்தை இதன் மூலமாக நீங்கள் தவிர்க்க இயலும். உங்கள் குழந்தை அசைகிறானா? அல்லது உதைக்கிறானா? போன்ற விஷயங்களை அறிந்துக்கொண்டு அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள். ஒருவேளை நீங்கள் நினைப்பது நடந்துவிட்டால் நலம். இல்லையேல், தேவையற்ற மன உளைச்சல் தான் உங்களுக்கு. எனவே, ஆணென்ன... பெண்ணென்ன... நாம் வளர்க்கும் விதம் பொறுத்தே எல்லாம் அமையும் என்பதை அடிக்கடி மனதிற்குள் சொல்லிக்கொள்ளுங்கள். 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon