Link copied!
Sign in / Sign up
13
Shares

உங்களுக்கு சுகப்பிரசவம் நடந்திருந்தால் மட்டுமே கிடைக்க கூடிய 10 விஷயங்கள்!

குழந்தை பிறப்பு என்பது மிகவும் சவாலான ஒன்று. சுகப்பிரசவத்திற்கும் சிசேரியனுக்கும் பல வித்தியாசங்கள் உள்ளன. குழந்தை பிறப்பில் உங்களின் உடல் உழைப்பும் முயற்சியும் தேவை. குறிப்பாக நீங்கள் சுகப்பிரசவம் செய்திருந்தால் உங்களுக்கு கண்டிப்பாக இது புரியும். இங்கே நீங்கள் சுகப்பிரசவம் செய்திருந்தால் மட்டுமே புரிய கூடிய சில விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

1) நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக செய்ய வேண்டும்:

குழந்தை பிறப்பில் சிறந்த விஷயம் என்னவென்றால், குழந்தை பிறப்பிற்கு பிறகு நஞ்சுக்கொடியையும் நீங்கள் வெளியேற்ற வேண்டும். குழந்தை வெளியே வந்த பிறகு மருத்துவர்கள் நஞ்சுக்கொடியை வெளியே தள்ள சொல்வார்கள். இது விசித்திரமாக இருந்தாலும், குழந்தை பிறப்பிற்கு பிறகு இது மிகவும் எளிதாகவே இருக்கும்.

2) கருப்பை மசாஜ்:

பிரசவத்திற்கு பிறகு ரத்தப்போக்கு நிற்க, கருப்பை சுருங்க வேண்டும். இதை தூண்டுவதற்கு நர்ஸ்கள் கருப்பைக்கு மசாஜ் அளிப்பார்கள். முதல் முறை மசாஜ் செய்யும் பொழுது உற்சாகமாக இருந்தாலும், போக போக இது பழகிவிடும். ஆனால், சில நேரங்களில் இது அசௌகரியமாகவும் வலி மிகுந்ததாகவும் இருக்கும். இருந்தாலும் இது தேவை என்பதால் வலியை பொறுத்துக்கொண்டுதான் ஆக வேண்டும்.

3) தையல்:

உங்களின் பிறப்புறுப்பு பகுதி கிழியும் வாய்ப்பு நீங்கள் நினைப்பதை போல் குறைவாக இருக்க போவதில்லை. நீங்கள் உங்கள் குழந்தையை பெற்றெடுக்கும் போது இது நடக்க வாய்ப்பிருக்கிறது. எனவே, இதற்கு தையல் போட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அவை சிறிது காலத்திற்கு வலி நிறைந்ததாக இருக்கும். இதனால் சிறுநீர் கழிப்பது சவாலானதாக இருக்கும்.

4) அடிக்கடி பிறப்புறுப்பில் இருந்து வெளியேற்றம்:

நீங்கள் குழந்தை பெற்றெடுத்த பின்பு நஞ்சுக்கொடியை வெளியேற்ற வேண்டும். அத்துடன் எல்லாம் முடிந்து விட்டது என்று நீங்கள் நினைத்தால் அது முற்றிலும் தவறு. உங்கள் பிறப்புறுப்பில் இருந்து அடிக்கடி வெளியேற்றங்கள் ஏற்படும். கடந்த 9 மாதங்கள் உள்ளே இருந்த பொருட்களை வெளியேற்றவே உங்கள் உடல் இவ்வாறு செயல்படுகிறது.

5) பிறப்புறுப்பு பராமரிப்பு:

உங்கள் பிறப்புறுப்பு பகுதியில் தையல்கள் போடப்பட்டிருப்பதால் அதை கவனமாக பராமரிக்க வேண்டும். மேலும், அதை சுத்தமாக வைத்திருப்பதும் மிகவும் அவசியமான ஒன்றே.

6) பிரசவத்தின் போது மலம் கழித்தல்:

பிரசவத்தின் போது நீங்கள் மலம் கழிக்க அதிக வாய்ப்புள்ளது. இதற்கு குழந்தை வெளியே வருவதே காரணம். ஆம், குழந்தை உங்களின் குடல் பகுதிகளில் அதிக அழுத்தம் கொடுப்பதால் இது ஏற்படும்.

7) பிரசவத்திற்கு பிறகு மலம் கழித்தல்:

பிரசவத்திற்கு பிறகு மலம் கழிக்க பலரும் பயப்படுவார்கள். ஒரு அடி தவறுதலாக எடுத்து வைத்தாலும், உங்களின் அந்தரங்க பகுதிக்கு ஆபத்தை விளைவிக்கும். அந்த பகுதி மென்மையாகவும் வலி மிகுந்ததாகவும் இருக்கும் என்பதால், நீங்கள் பயம் இல்லாமல் மலம் கழிக்க சில நாட்கள் ஆகும்.

8) கணவரின் மீது கோபம்:

பிரசவம் முடிந்த பிறகு உங்கள் கணவரின் மீது கோபம் வரும். அதிலும் குழந்தை உங்கள் கணவரை போல் இருந்தால் உங்கள் கோபம் இன்னும் அதிகரிக்கும். என்னதான் நாம் நமது கணவரை ஆழமாக நேசித்தாலும், அவரால் தான் நாம் இவ்வளவு வலியை சந்திக்க வேண்டியிருந்தது என்பதை அவ்வளவு எளிதாக மறக்க முடியாது.

9) உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள்:

பிரசவத்திற்கு பிறகு உங்களின் பிறப்புறுப்பு போகுது முற்றிலுமாக மாறியிருக்கும். இதை கூற எனக்கு பிடிக்கவில்லை என்றாலும் நீங்கள் ஒரு மனிதனை உங்கள் உடலில் இருந்து வெளியே தள்ளியிருக்கிறீர்கள். எனவே சில மாதங்களுக்கு நீங்கள் உங்கள் உடலில் பார்த்திராத சில விஷயங்களை காண நேரிடும்.

10) பாதுகாப்பே முக்கியம்:

ரத்த போக்கு சிறிது காலத்திற்கு இருக்கும் என்பதால் நீங்கள் டயப்பர் அல்லது சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்த வேண்டி வரும். இதில் நல்ல விஷயம் என்னவென்றால், ரத்தம் குறித்த அசௌகரியம் இனி உங்களுக்கு இருக்காது.

மேற்சொன்ன பல விஷயங்கள் உங்களுக்கு நடந்தாலும் அவை அனைத்தும் இரண்டு வாரங்களில் சரியாகி விடும். இவை அனைத்தும் உங்களின் செல்ல குட்டிக்காக நீங்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் மேல் உள்ள அன்பிற்கு முன்பு இந்த அசௌகரியங்கள் எல்லாம் ஒன்றும் இல்லாத ஒன்றாக மாறிவிடும். இன்னும் சொல்லப்போனால், உங்கள் குழந்தைக்காக இதையெல்லாம் மீண்டும் செய்யலாம் என்று கூட தோன்றும்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon