Link copied!
Sign in / Sign up
1
Shares

உங்களுக்கும், குழந்தைகளுக்கும் செல்ல பிராணிகள் கற்று கொடுக்கும் 9 விஷயங்கள்

ஒரு அழகிய சிறிய பூனைக்குட்டி, ஒரு பெரிய உரோமமுடைய நாய் அல்லது கண்ணாடித் தொட்டியில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு சிறிய மீன் என அனைத்து செல்லப்பிராணிகளும் நம் வாழ்வில் ஒரு உணர்ச்சி மற்றும் சமூக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மேலும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நம்மை பாதிக்கும், ஆனால் அது நமக்கு சாதகமாகவே அமையும். நீங்கள் இதை பற்றி ஏற்கெனவே கேட்டிருக்கலாம் அல்லது அனுபவித்திருக்கலாம், செல்லப்பிராணிகளை மனிதர்கள் எளிதாக கட்டுபடுத்த முடியும். மேலும் அவை கவலை, மன அழுத்தம் போன்றவற்றை போக்குவதோடு, வாழ்க்கை பாடங்களை நமக்கு உணர்த்தவும், குறிப்பாக இளம் பிள்ளைகளுக்கு கற்பிக்கவும் செய்கிறது. அவர்கள் எண்ணிலடங்கா நன்மைகளை தர கூடியவர்கள். இங்கு செல்ல பிராணிகள் கற்று கொடுக்கும் 9 விஷயங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

1 பொறுப்பு

நீங்கள் எப்படி பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும் என்பதை அவை உங்களுக்கு கற்று கொடுக்கின்றன. பொறுப்பானவைகளாகவும், மற்றவர்களை கவனித்துக் கொண்டிருப்பவைகளாகவும் இருப்பதால், நீங்கள் அவைகள் பொறுப்பாளியாக இருப்பதை உணர முடியும். செல்லப்பிராணிகளுக்கு உணவளிப்பது அல்லது அவைகளை நடைபயிற்சிக்கு அழைத்துச்செல்லுதல் போன்றவை குழந்தைகளின் பொறுப்பை உணர செய்யும். இது அவர்களின் வாழ்நாள் முழுவதும் அவர்களோடு தங்கியிருக்கும் ஒன்று.

2 இரக்கம்

செல்ல பிராணிகள் வாழ்க்கையில் எல்லோரையும் மிகவும் இரக்கமுள்ளவராக்குகிறது. நீங்கள் வாய்விட்டு பேச முடியாத உங்கள் ஒரு செல்ல பிராணியை கவனித்து கொள்ளும் போது மிகவும் கனிவாக நடந்து கொள்வீர்கள். அது உங்களின் உள்ள மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது, மேலும் நீங்கள் பொறுமையாக இருப்பது மற்றும் வாழ்க்கையில் மற்றவர்களின் தேவைகளைப் புரிந்துகொள்வது ஆகியவற்றை நன்கு வளர்க்கிறது.

3 விசுவாசம்

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உங்கள் செல்ல பிராணி உங்கள் மீது அன்பு செலுத்தும். அவைகளுடைய முழு வாழ்வும் அவை சார்ந்துள்ள வீடு மற்றும் மனிதர்களை சுற்றியே இருக்கும். அவைகள் எப்போதும் உங்களுக்காகவே இருக்கும், நீங்கள் சோகமாக அல்லது மகிழ்ச்சியாக இருந்தாலும். அதனால் அவைகளுக்காகவும் நீங்கள் இருக்க வேண்டும். வாழ்க்கையில் ஆரம்பத்தில் விசுவாசத்தின் மிக முக்கியமான பாடத்தை உங்கள் செல்ல பிராணி உங்களுக்கு கற்பிக்கும்.

4 நம்பிக்கை

குழந்தைகள் மற்றவர்களை விட செல்ல பிராணிகளால் மிகவும் கவரப்படுகிறார்கள். தங்கள் செல்லப்பிராணிகள் பேசுவதை அவர்கள் உணரவும் செய்கிறார்கள். இது அவர்கள் மீது நம்பிக்கையை வளர்க்கிறது. இது ஒரு நபரின் தன்மை மற்றும் வாழ்க்கையில் உள்ள உறவுகளை உருவாக்குதல் மற்றும் இனம் கண்டுபிடித்தல் ஆகியவற்றிற்கு பெரிதும் உதவுகிறது.

5 வளர்ப்பு

ஒரு செல்ல பிராணியை வளர்ப்பது, ஒருவரை சிறந்த வளர்ப்பாளராக மாற்றும். செல்லப்பிராணிகளுக்கு தொடர்ச்சியான கவனிப்பு மற்றும் அக்கறை தேவை. செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்கள் எப்போதும் மற்றவர்கள் மீது மிகவும் அக்கறை உடையவர்களாக இருப்பார்கள்.

6 பொறுமை

உங்கள் செல்ல பிராணிகள் சில நேரங்களில் உங்கள் பொறுமையை சோதிக்கலாம். சில நேரங்களில் அவைகளுக்கு என்ன வேண்டும் என்பதை புரிந்து கொள்வது கூட கடினமான ஒன்றாக இருக்கலாம். செல்ல பிராணிகள் இல்லாதவர்களை விட வைத்திருப்பவர்கள் மிகவும் பொறுமைசாலிகளாக இருப்பார்கள். மேலும், குடும்பத்தில் ஒரு புதிய செல்ல பிராணி வரும் போது, அதை சரிசெய்யவும், பழக்கப்படுத்தவும் நேரம் எடுக்கிறது, இது மீண்டும் பொறுமையைக் காட்ட உதவுகிறது.

7 துயரத்தை கையாளுதல்

ஒருவரின் வாழ்க்கையின் மிகவும் சோகமான நேரங்களில் ஒன்று, அவர்களுடைய செல்ல பிராணி பிரியும் நேரம். அவைகளுடனான பல சந்தோஷமான நினைவுகளால் மிகவும் கஷ்டமாக இருக்கும். இது முதலில் கடுமையானது, ஆனால் இறுதியில் அவர்கள் வேதனையை எவ்வாறு கையாளுகிறார்கள் என்பதை கற்றுக்கொள்கிறார்கள்.

8 கற்றல்

சிறு பிள்ளைகளே பெரும்பாலும் தங்கள் செல்லப்பிராணிகளுடன் பேசுவதற்கு முனைகின்றனர். அவற்றை புரிந்து கொண்டு விளக்கவும் செய்கிறார்கள். இது அவர்கள் பொதுவாக புரிந்து கொள்ளுதல் மற்றும் கற்றலின் கலையை கற்பிக்கிறது.

9 சமூக திறன்கள்

உங்கள் செல்ல பிராணி நீங்கள் எளிதாக அந்நியர்களுடன் உரையாடல்களை செய்ய உதவுகிறது, உங்கள் ஆரம்ப வருடங்களில் இது அனுபவமாக இருப்பதால், உங்கள் வாழ்வில் சிறந்த சமூக திறமைகளை இது வழங்குகிறது. எனவே, செல்லப்பிராணிகளுடன் கூடிய குழந்தைகள் திறந்த மற்றும் நாகரீகமான பெரியவர்களாக மாறிவிடுகிறார்கள்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon