Link copied!
Sign in / Sign up
77
Shares

உங்களுக்காக இந்த 8 விஷயங்களை உங்கள் கணவர் செய்தது உண்டா..?

நமது சமூகத்தில் இல்லறத்தில் ஆண்களுக்கான வேலை இது, பெண்களுக்கான வேலை இது என ஒரு பட்டியல் இருக்கிறது. அன்று ஆண் வெளி வேலைக்கு சென்றான், பெண் வீட்டு வேலைகள் பார்த்துக் கொண்டாள் என்பதால் இந்த பாகுபாடு பட்டியல் இருந்தது. அதை இன்று ஆண், பெண் இருவரும் வேலைக்கு செல்லும் காலத்திலும் அப்படியே கடைப்பிடிப்பது எப்படி நியாயம் ஆகும். 

கணவன் எதிர்பார்க்காமலேயே அவனுக்கான வேலைகளை இன்றுவரை மனைவி செய்துக் கொண்டே தான் இருக்கிறாள். ஆனால், மனைவி எதிர்பாராத தருணத்தில், அவளுக்கு தேவையான வேலைகள் என்னென்ன என்று உங்கள் கணவர் சிந்தித்து செய்துள்ளாரா? உங்களுக்காக உங்கள் அன்புக் கணவர் இந்த 8 விஷயங்களை செய்துள்ளாரா இல்லையா என்று comment ல் பதிலை பதிவிடவும்..!

சொடக்கு எடுத்துவிடுதல்..!

நீங்கள் சோர்வாக, களைப்பாக உணரும் போது, அவரருகே அமர்ந்து, கால் பிடித்துவிடுவது, கால் விரல் சொடக்கு எடுத்துவிடுதல் போன்றவற்றை செய்துள்ளாரா உங்கள் கணவர்? இன்னும் சில ஆண்கள் மனைவியின் கால்களை பிடிக்க கௌரவம் பார்ப்பார்கள். ஆனால், இது மனைவிக்கு கணவன் மீது,” கௌரவம் பாராமல் தன் மீது அன்பு செலுத்துகிறார்” என்ற உணர்வு அதிகரிக்க, காதல் அதிகரிக்க செய்யும் கருவியாக அமையும்.

கட்டிப்பிடித்தல்..!

சமையல் செய்யும் போது பின்னாடி இருந்து கட்டிபிடிப்பது ஆச்சரியத்தில் ஆழ்த்துவது. காதல் விளையாட்டுகளுடன் உங்களுடன் சேர்ந்து சமைக்க உதவுவது என்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளாரா உங்கள் ஆருயிர் கணவர்??

ஆசை முத்தம்..!

சண்டையிட்டு அழவைத்த பிறகு, முதல் ஆளாக மன்னிப்பு கேட்டு, அரவணைத்து ஒரு ஆசை முத்தம் கொடுத்தது உண்டா?

மாதவிடாய் நாட்களில் உதவி!

இன்றைய காலகட்டத்தில், கணவன்மார்கள் மாதவிடாய் காலத்தில் மனைவியை ஒதுக்குவது இல்லை. ஆண்களுக்கும் மாதவிடாய் பற்றிய தெளிவு அதிகரித்து வருகிறது. ஆனால், இன்றும் மாதவிடாய் நாட்களில் மனைவியை தொட கூட தயக்கம் காட்டும் ஆண்களும் இருந்து வருகிறார்கள். இது உடலளவில் பாதிக்கப்படும் பெண்களுக்குள், மனதளவிலும் பாதிப்பை அதிகரிக்கும். இது போன்ற சமயத்தில் உங்கள் உணர்வுகளை மற்றும் மனநிலையினை புரிந்து கொண்டு, உங்களுக்காக ஏதேனும் உதவி செய்துள்ளாரா, உங்கள் கணவர்..?

வீட்டு வேலைகள்!

வீட்டில் நீங்கள் நோய்வாய்ப்பட்டு விட்டால் சுழலும் உலகம் நின்று போனது போல, வீட்டில் செய்ய வேண்டிய அனைத்து வேலைகளும் நின்று விடும். நீங்கள் உடல்நலம் குணமாகிய பின்னர், நின்ற அந்த வேலைகளை நீங்களே செய்யும் வகையில் வீட்டை அலங்கோலப்படுத்தி வைத்திருப்பார்கள். இதை திருத்திக் கொண்டு, உங்களுக்கு முடியாத நாட்களில் உங்கள் கணவர் துணி துவைத்து, சமையல் சமைத்து, வீடுகளை சுத்தமாக வைத்திருக்க முயன்றுள்ளாரா?

நள்ளிரவில் காத்திருந்து…

நீங்கள் வேலை விஷயமாக அல்லது உங்கள் தாய் வீட்டிற்கு என வெளியூர் சென்று நள்ளிரவில் ஊர் திரும்பும் போது, நேரம் பாராமல் உங்களுக்காக விமான நிலையம், ரயில்நிலையம் அல்லது பேருந்து நிலையத்தில் தாமதம் ஆவதை பொருட்படுத்தாமல், உங்கள் கணவர் காத்திருந்தது உண்டா?

வேலை அவசரம்!

நீங்கள் அலுவல் வேலையாக அதிகாலை அவசரம் கிளம்ப வேண்டும், அல்லது வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற சூழல் உண்டாகும் போது, உங்களுக்கு என்ன தேவை, என்ன எல்லாம் செய்ய வேண்டும் என்பதை நீர் யோசிக்கும் முன்னரே உங்கள் கணவர் செய்து முடித்து அசத்தியது உண்டா?

அசதியாக இருக்கும் போது டீ!

வீட்டு வேலை, அலுவல் வேலை அல்லது சோர்வாக இருக்கும் போது, நீங்கள் கேட்காமலேயே இதமான சூட்டில் ஒரு அசத்தல் டீ அல்லது காபி போட்டுக் கொடுத்தது உண்டா, உங்கள் கணவர்?

இது போன்ற சின்ன, சின்ன வேலைகளை நீங்கள் கேட்காமலேயே உங்களது நிலை அறிந்து, கணவன்கள் செய்யும் போது இல்லறம் எப்பொழுதும் நல்லறமாக அமைகிறது.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon