Link copied!
Sign in / Sign up
7
Shares

உங்களின் அன்பை கணவருக்கு தெரிவிக்கும் 8 வழிகள்

இந்த உலகத்தில் எதையும் விலை கொடுத்து வாங்க முடியும். ஆனால், அன்பையும் மரியாதையும் தவிர. உங்களின் அன்பிற்குரியவர்களுக்காக நீங்கள் பொருட்களை வாங்க பணம் பயன்படலாம். ஆனால் அவரின் அன்பை சம்பாதிக்க வெறும் பணம் மட்டும் போதாது, மனதளவில் அவரை திருப்தி படுத்த வேண்டும். அதற்காக அவ்வப்போது சின்ன சின்ன ஆச்சரியங்களை அவருக்கு கொடுக்கலாம். இந்த சின்ன சின்ன சந்தோஷங்களை தான் அவர் விலைமதிப்பற்றதாக பார்ப்பார். இங்கு உங்களின் அன்பை  உங்கள் கணவருக்கு தெரிவிக்கும் சில வழிகளை பார்க்கலாம். 

1 உணவு

முதலில் கணவருக்கு பிடித்த உணவை சமையுங்கள். இது ஏன் முதல் வழி என்று புரிகிறதா? இதன் மூலம் உங்களின் சமையல் திறமையை காட்டலாம். அதே சமயம் அவரின் விருப்பம் தான் உங்களின் விருப்பம் என்று சொல்லாமல் சொல்லும். அவருக்கு பிடித்த உணவை சமைக்க நீங்கள் எடுக்கும் முயற்சியே, நீங்கள் அவர் மீது கொண்டுள்ள காதலை தெரிவிக்கும்.

2 காதல் கடிதம்

நீங்கள் இறுதியாக எப்போது உங்கள் காதல் கணவருக்கு கடிதம் எழுதினீர்கள் என்று ஞாபகம் இருக்கிறதா? அவர் உங்களுடன் எல்லா நேரங்களிலும் இருந்தால் என்ன? உங்களின் உணர்வுகளை கடிதம் மூலமாக அவருக்கு தெரியப்படுத்துங்கள். உங்களுக்கு எழுத பிடிக்கும் என்றால், உங்களின் உணர்வுகளை அவரின் இதயத்தை உருக்கும் ஒரு கவிதையாக கூட எழுதலாம். அவரால் கண்டுபிடிக்கும்படியான ஒரு இடத்தில் இந்த கடிதத்தை வையுங்கள். இதனால் நிச்சயமாக அவர் பூரிப்படைவார்.

3 பிக்னிக்

ஒரு நபர் எப்போதுமே பிஸியாக இருந்தால், சூழ்நிலை மாற்றம் நிச்சயம் தேவை. உங்கள் கணவருக்கு வேலை போக கிடைக்கும் நேரத்தில் வெளியே செல்ல நீங்கள் திட்டமிடலாம். அதுவும் சப்ரைஸாக செய்யுங்கள். அவருக்கு பிடித்த உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். பூங்காவிற்கு சென்று ஒன்றாக மதிய உணவை சாப்பிடுவதே, உங்களின் அன்பை அவருக்கு தெரியப்படுத்தும்.

4 சிடி (குறுந்தகடு)

தொழில்நுட்பம் பற்றி உங்களுக்கு அவ்வளவாக தெரியாது என்றாலும், இதை பற்றி தெரிந்து கொள்ள பல வலைத்தளங்கள் மற்றும் கருவிகள் உள்ளன. நீங்கள் இருவரும் கடந்த காலங்களில் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ஒரு தொகுப்பாக சிடியில் போட்டு அவருக்கு பரிசளிக்கலாம். இல்லையென்றால் அவருக்கு பிடித்தமான பாடல்களை தொகுத்து கொடுக்கலாம். இரகசியமாக உங்கள் கணவரின் காரில் இந்த பாடல் சிடியை போடுங்கள். இதை கேட்கும் போது உங்கள் மீது கண்டிப்பாக அவருக்கு அன்பு அதிகரிக்கும்.

5 பரிசளியுங்கள்

இதற்கு நீங்கள் பெரிதாக செலவு ஒன்றும் செய்ய தேவையில்லை. நீங்கள் வீட்டில் இருக்கிறீர்கள் என்றால், புதிதாக ஏதாவது அவருக்காக உருவாக்கலாம் அல்லது புதிய விஷயங்களை முயற்சி செய்யலாம். நீங்கள் உங்கள் படைப்பாற்றலை அனைத்தையும் காட்டி, அவருக்கு ஒரு பரிசு பொருளை செய்யலாம். ஆனால் அது கடினம் என்று நீங்கள் நினைத்தால் வலைத்தளங்களில் உங்களுக்கு பல உதவிகள் கிடைக்கும். நீங்கள் ஆசையாக செய்து கொடுக்கும் பொருளை அவர் பொக்கிஷமாக பாதுகாப்பார்.

6 ஒரு நாள் ராஜா

ஒரு நாள் முழுவதும் உங்கள் கணவர் சொல்வதை கேளுங்கள், அவருக்கு பிடித்தமானவற்றை செய்யுங்கள். இதை விட அவரை ஆச்சரியப்படுத்தும் விஷயம் எதுவும் இருக்காது. அவருக்கு பிடித்தமான உணவு எது? அவர் தொலைக்காட்சியில் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சி எது? அவரை மகிழ்விக்கும் விஷயம் எது? இதை பற்றி யோசித்து, பட்டியலிடுங்கள். அதற்கு பிறகு உங்களால் முடிந்தவற்றை அவருக்காக செய்யுங்கள். அது அவருக்கு கண்டிப்பாக ஒரு மறக்க முடியாத நாளாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

7 புதிர் போடலாம்

நீங்கள் இருவர் மட்டும் இருந்தால் இது வேலை செய்யும். ஆனால் குழந்தைகள் இருந்தால் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், உங்கள் குழந்தைகள் இதில் இடையூறு செய்ய வாய்ப்புகள் உள்ளது. சில ரோஜா இதழ்கள் அல்லது வேறு ஏதாவது அவரை கவர்வது போன்றவற்றை செய்ய, உங்கள் கணவரை நீங்கள் விரும்பும் இடத்திற்கு வரவழையுங்கள். இதன் மூலம் நீங்கள் இருவரும் தனிமையில் நேரம் செலவிட முடியும்.

8 இரவு விருந்து

உங்கள் கணவருக்கு நெருக்கமான நண்பர்கள் உறவினர்களை அழைத்து நீங்கள் விருந்து கொடுக்கலாம். இது உங்கள் கணவருக்கு ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஒரு சேர வரவழைக்கும். உங்கள் மாமனார் மாமியாரையும் அழைக்கலாம். இதற்கு என்று தனியாக காரணம் எதுவும் தேவையில்லை. அவர்கள் உங்கள் இருவரோடும் நேரம் செலவிட்டாலே போதும்.

இந்த கருத்துக்கள் எல்லாம் உங்களுக்கு உதவும் என்று நினைக்கிறோம். இதை முயற்சி செய்து உங்களின் அளவில்லா அன்பை உங்கள் கணவருக்கு தெரியப்படுத்துங்கள். இந்த யோசனைகளோடு மட்டுமின்றி, உங்களுக்கு ஏதாவது தோன்றினாலும் அதை முயற்சி செய்யுங்கள்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon